Archive | January 2014

மன நிம்மதி

buddha picture

நீதிநிம்மதி

உபநீதிஅமைதி

ஒரு முறை புத்தர் தனது சிஷ்யர்கள் சிலருடன் பயணம் செய்துக் கொண்டிருந்தார். வழியில் ஒரு ஏரி இருந்தது. புத்தர் ஒரு சிஷ்யனிடம், “எனக்கு மிகவும் தாகமாக இருக்கிறது, ஏரியிலிருந்து பருகக் கொஞ்சம் குடிநீர் கொண்டு வா” என்று சொன்னார். அந்த சிஷ்யர் தண்ணீர் இருக்கும் இடத்திற்குச் சென்றார். அப்பொழுது ஒரு மாட்டு வண்டி அந்த ஏரியைக் கடந்துச் சென்றது. அதன் காரணமாகத் தண்ணீர் மிகவும் கலங்கி இருந்தது. சிஷ்யன் “அந்த கலங்கியத் தண்ணீரைக் குருவிற்குப் பருக எவ்வாறுக் கொடுப்பது?” என்று எண்ணினார். புத்தரிடம் “அந்தத் தண்ணீர் மிகவும் கலங்கி இருக்கிறது. குடிப்பதற்குச் சரியாகாது” என்று கூறினார். அரை மணி நேரம் கடந்ததும், புத்தர் திரும்பவும் அதே சிஷ்யனை ஏரியிலிருந்துத் தண்ணீர் கொண்டு வரச் சொன்னார். சிஷ்யன் திரும்பவும் அங்குச் சென்று பார்த்தப் பொழுது, தண்ணீர்க் கலங்கியேக் காணப்பட்டது. மறுபடியும் விஷயத்தைப் புத்தரிடம் கூறினார்.

புத்தர் மற்றொருமுறை அந்தச் சிஷ்யனை அனுப்பி வைத்தார். இம்முறை சிஷ்யன் சென்றப் பொழுது வண்டல் அடியில் தங்கி, தண்ணீர் சுத்தமாகக் கலங்காமல் இருந்தது. ஆதலால், ஒரு குடத்தில் அந்தத் தண்ணீரை ஏந்தி, புத்தரிடம் கொடுத்தார்.

புத்தர் தண்ணீரைப் பார்த்தார். பிறகு, சிஷ்யனை நோக்கி சொல்லலுற்றார், “நீ அந்தத் தண்ணீரைச் சுத்தமாக ஆக்குவதற்கு என்னச் செய்தாய் பார்த்தியா?” நீ அமைதியாக இருந்ததும், வண்டல் அடியில் தேங்கித் தெளிவானத் தண்ணீர்க் கிடைத்தது. உன் மனதும் அதுப் போன்றது தான். ஏதேனும் சிந்தனையில் கலங்கி இருந்தால் அமைதியாக இருக்க வேண்டும். தானாகவேத் தெளிந்து விடும். எந்த முயற்சியும் தேவையில்லை.

நீதி:

மன நிம்மதி அடைவதுக் கடினமான காரியம் இல்லை. மிக எளிமையானது, ஏனென்றால்……….

நிம்மதியே நம் ஆத்மாவின் குணம்.

http://saibalsanskaar.wordpress.com

அன்பே தீர்த்த யாத்திரை

Man and Dog

நீதி – அன்பு

உபநீதி – கருணை

ஒரு முறை, ஹஸ்ரத் ஜுனைத் பாக்தாதி என்பவர் மெக்காவிற்குத் தீர்த்த யாத்திரை செல்லப் புறப்பட்டார். வழியில் ஒரு காயமடைந்த நாயைக் கண்டார். நாயின் நான்கு கால்களிலும் காயப்பட்டு, ரத்தம் கசிந்துக் கொண்டிருந்தது. உடனடியாக, நல்ல மனம் கொண்ட அவர், நாயின் காயத்தை அலம்பிச் சுத்தப்படுத்தி மருந்து இடும் எண்ணத்துடன் செயல் பட ஆரம்பித்தார். நாயைத் தன் கைகளில் ஏந்தி, கிணறு இருக்கும் இடம் தேடிச் சென்றார். அவருடைய உடை காயங்களின் ரத்தத்தால் கறையாவதைக் கூட அவர் பொருட் படுத்தவில்லை. அந்தச் சமயத்தில், அவர் ஒரு பாலைவனப் பாதையைக் கடந்து கொண்டிருந்தார். ஒரு சிறு நீரோடையைக் கவனித்தார். ஆனால் அந்த தண்ணீரை எடுக்க ஒரு வாளியோ, கயிறோ எதுவும் தென்படவில்லை. உடனடியாக, அவர் பக்கத்திலிருந்த மரத்தின் இலைகளை முறுக்கி ஒரு வாளி போல் தயார் செய்தார். தன் தலைப் பாகையைக் கயிறுப் போன்று உபயோகித்தார்.

இவ்வாறு தயாரித்த வாளியை கிணற்றில் இறக்க முயலும் போது தலைப்பாகை நீளம் இல்லாததால், தண்ணீரை எட்ட முடியவில்லை. கைவசமாக வேறு ஒரு துணியும் இல்லாததால், அவர் தான் அணிந்திருந்த சட்டையைக் கழற்றித் தலைப்பாகையோடு சேர்த்துக் கட்டினார். அப்படியும் கயிறு நீளம் போதவில்லை.உடனே, அவர் தான் அணிந்திருந்த  மெல்லிய துணியினால் ஆன கால்சராயையும் கழற்றி அந்தக் கயிறுடன் சேர்த்தார். இப்பொழுது கயிறு வாளியுடன் தண்ணீரை எடுக்கப் போதுமானதாக இருந்தது. அவர் கிணற்றிலிருந்து தண்ணீரை எடுத்து நாயின் காயங்களை சுத்தப் படுத்திக், கட்டுப் போட்டு விட்டார். பிறகு, நாயைக் கையில் ஏந்திக்கொண்டு பக்கத்திலிருந்த கிராமத்திற்குச் சிரமப்பட்டு வந்தடைந்தார்.

மசூதியில் இருந்த முல்லாவிடம் “தயவு செய்து இந்த நாயை உங்கள் பொறுப்பில் இருந்து பார்த்துக் கொள்ளவும். நான் தீர்த்த யாத்திரை முடிந்தவுடன் அழைத்துச் செல்கிறேன்.” என்று கெஞ்சினார்..

“சந்தேகமே வேண்டாம், சகோதரா! தாங்கள் வரும் வரை நான் கட்டாயம் இந்த நாயைக் கவனித்துக் கொள்கிறேன்.” என்று கூறினார். அன்று இரவு, ஹஸ்ரத் கனவில் ஒரு ஒளி மயமான ரூபம் கூறலாயிற்று, “ஹஸ்ரத், உன் யாத்திரை ஏற்கனவே நிறைவேறி விட்டது. ஏனென்றால், ஓர் உயிரிடம், உன் கஷ்ட சுகங்களைப் பார்க்காமல் கருணைக் காட்டியதால், இது சாத்தியம் ஆயிற்று. இனிமேல், நீ மெக்கா செல்வதும், செல்லாததும் உன் இஷ்டம். கடவுள் பொறுத்தவரை, உன் காரியத்தால் ரொம்பவே திருப்திப் பட்டு விட்டார். அவர் படைத்த உயிர்களிடம் காட்டும் அன்பும், கருணையும், அவருக்கு நூறு தீர்த்த யாத்திரைகள் செய்வதைக் காட்டிலும் மகிழ்ச்சியைத் தரக் கூடியது.

நீதி:

கடவுளின் நீதி மன்றத்தில் அன்பு ஒன்றே விலை மதிப்பில்லாதது. அன்பும், ஆழ்ந்த பக்தியுமே கடவுளுக்கு மிகவும் பிடித்தமானவை ஆகும்.

Source: http://saibalsanskaar.wordpress.com

உன்னி – களங்கமில்லாத பால பக்தன்


 Sarva Dharma symbol

நீதி – அன்பு

உபநீதி – திடநம்பிக்கை, பக்தி

ஒரு சமயம்,  தேவாலயத்தில் ஒரு அர்ச்சகர்,  தன் பன்னிரண்டு வயதுப் பையனைப் படையலாகக் கடவுளுக்கு ஏதாவது சமர்ப்பிக்கச்  சொல்லிவிட்டு,  அவசர வேலையாகக் கிளம்பினார்.

கோயிலில் வேறு அர்ச்சகர் யாருமில்லை. உன்னி, மிக எளிமையாக, கொஞ்சம் சாதத்தை அர்ப்பணித்து, கடவுள் கட்டாயமாக ஏற்றுக்கொள்வார் என்ற நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால், கடவுளின் மூர்த்தி நகரவில்லை. பிறகு, அருகிலுள்ள வியாபாரியிடம் கொஞ்சம் உப்பு மாங்காயும், தயிரும் வாங்கி வந்தார். தயிர் சாதமாகப் பிசைந்து, அதை வைத்தார். அதற்குப் பிறகும் மூர்த்தி நகரவில்லை. உன்னி கடவுளிடம் இனிமையாகப் பேசினார், கெஞ்சினார், கிடைசியாக மிரட்டினார்.ஆனாலும், மாற்றம் ஒன்றுமில்லை.

உன்னி, தான் ஏதோ தவறுச் செய்து விட்டதாகவும், மேலும் கடவுளை மிரட்டியதால்தான் அவர் சாப்பிடவில்லை  என்று நினைத்து அழத் தொடங்கினார். அப்பா அவரை அடிப்பார் என்ற பயமும் இருந்தது. பக்தனின் உண்மையான அன்பைப் பார்த்துக், கடவுள் மனமிறங்கினார். அங்கு இருந்த படையல் மறைந்து விட்டது. பையன் நிம்மதி அடைந்தான்.

அப்பா கோயிலுக்குத் திரும்பி வந்ததும், காலித் தட்டைப் பார்த்து விட்டுக் கோபமுற்றார். உன்னி அவரிடம் நடந்ததைச் சொன்னப் போதும் நம்பவில்லை. பையன்தான்  சாப்பிட்டுவிட்டான் என்று நினைத்து, உன்னியை அடிக்கச் சென்றப் பொழுது, ஒரு தெய்வீகமான குரல் கேட்டது, “உன்னி நிரபராதி, நான் தான் குற்றவாளி என்று.”

நீதி:

கடவுள் தன் பக்தர்களைக் காப்பாற்றுவதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்.

Source: http://saibalsanskaar.wordpress.com

புலியும் நரியும்

 

tiger and fox picture 

நீதி – நேர்மை

உபநீதி  – பொறுப்பு

காட்டில் வாழ்ந்த ஒரு நரி தன் முன்புறக் கால்களை இழந்த நிலையில் இருந்தது. யாருக்கும் எப்படி என்று தெரியவில்லை.வலைப்பொறியிலிருந்துத் தப்பிக்கும் பொழுது கூட  இருந்திருக்கலாம். அந்தக் காட்டின் எல்லைப் பகுதியில் வசித்த ஒரு மனிதன், நரியை அவ்வப்பொழுதுப் பார்த்து ஆச்சிரியப்பட்டார்.உணவுக்கு எப்படித்தான் சமாளிக்கும் என்று வியப்புற்றார். ஒரு நாள் மிகத் தொலைவில் நரி இருந்தப்பொழுது, புலி வந்ததைப் பார்த்து மறைந்து ஒளிந்தார். வேட்டையில் கொலைச் செய்த விலங்கைப் படுத்துக்கொண்டு ஆசைத் தீர உட்கொண்டப் பிறகு, கொஞ்சம் நரிக்கு வைத்து விட்டுச் சென்றது.

தினமும் இந்தப் புலி நரிக்கு ஏதாவது வைத்து விட்டுச் செல்வதை இந்த மனிதன் பார்த்தான். “இவ்வளவு எளிமையாக இந்த நரிக்கு ஏதோ ஒரு தெய்வீக சக்தியிடமிருந்து கிடைக்கும் உணவைப்போலவே , தானும் ஏன் ஒரு மூலையில் உட்கார்ந்துக்கொண்டு காத்திருக்கக்கூடாது” என்று யோசித்தார்.

பல நாட்கள் நம்பிக்கையுடன் இருந்து வந்தார். ஒன்றும் நடக்கவில்லை.சக்தியும், எடையும் குறைந்து எலும்புக்கூடு போல் தோற்றமளித்தார்.பலமின்றி மயக்கம் வந்தப் பொழுது ஒரு குரல் கேட்டது, “தப்பாகப் புரிந்துக் கொண்டிருக்கிறாய், உண்மையைக் கவனி!!புலியின் எடுத்துக்காட்டைப் பின்பற்றியிருக்க வேண்டும், ஊனமுற்ற நரியின் எடுத்துக்காட்டு அல்ல”

நீதி:

பொறுப்பு சக்தியைக் கொடுக்கும்.பொறுப்பு இல்லாமை நம்மை பலவீனமாக ஆக்கி விடும்.யார் ஒருவர் தன செயல்களை ஒழுங்காக நடத்தி வருகிறார்களோ, கடவுள் அவர்களுக்கு உதவுகிறார். கஷ்டம் இல்லாமல் சன்மானம் இல்லை.

Source: http://saibalsanskaar.wordpress.com

பிரார்த்தனை – மனிதன் கடவுளை அணுகும் முறை

prayers connection with lord

நீதி – அன்பு

பநீதி – திட நம்பிக்கை, பக்தி

 

ஏழ்மையான பெண்மணி ஒருத்தி இருந்தாள். அவளுக்கு நான்கு மகன்களும் இரண்டு பெண்களும் இருந்தனர். அவளுடைய கணவன் உடல் நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாய் இருந்தார். அதனால் வீட்டில் வருமானம் ஒன்றுமில்லாமல் இருந்தது. உணவு வகைகளும், காய்கறிகளும் குறைந்துக் கொண்டே வந்தன. சமாளிக்கும் வழி தெரியாமல் கவலைப்பட ஆரம்பித்து விட்டாள். சில பருப்பு வகைகளும் காய்கறிகளும் அருகிலிருந்த மளிகைக் கடையிலிருந்துக் கடனாக வாங்கிக் கொள்ள நினைத்தாள்.

மிகப்  பணிவுடன் வீட்டு நிலவரத்தைக் கடைக்காரனிடம் எடுத்துச் சொன்னார். உதவி செய்து  உணவு வகைகளைக் கொடுப்பார் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் கடைக்காரன் உதவிச் செய்ய மறுத்துவிட்டு வேறு கடைக்குப் போகச் சொன்னார். பரிதாப நிலையைப் பார்த்த ஒரு மனிதன் பொருள்களுக்குப் பணம் கொடுக்க முன் வந்தார்.

கடைக்காரன் விருப்பமில்லாமல் அவளிடம் வாங்க வேண்டியப் பொருள்களை ஒரு காகிதத்தில் எழுதி எடையிடும் எந்திரத்தில் வைக்கச் சொன்னார். காகிதத்தின் எடைக்குச் சமமாகப் பொருள்களை இலவசமாகக் கொடுப்பதாக ஒத்துக்கொண்டார். அவள் கண்களை மூடிக் கொண்டு ஒரு காகிதத்தில் ஏதோ எழுதினாள். குனிந்த தலை நிமிராமல், அந்தக் காகிதத்தைத் தராசின் மேல் வைத்தவுடன் கனமான பாரத்தை வைத்ததைப் போல் தராசின் தட்டு கீழே இறங்கியது.

கடைக்காரனும் உதவிக்கு வந்தவரும் ஆச்சிரியத்துடன் பார்த்தார்கள். உணவுப் பொருள்களைத் தராசின் மற்றொரு பக்கம் வைக்கும் போது சமமாக இல்லை. மேலும் நிறைய பொருள்களை வைத்தும் தராசு நகரவில்லை.

கிடைசியில்,  கடைக்காரன் அந்தக் காகிதத்தை எடுத்தப் பொழுது, மேலும் ஆச்சிரியப்பட்டார். அதில் பொருள்களின் பட்டியல் இல்லை. கடவுளிடம் ஒரு விண்ணப்பம் தான் இருந்தது. “அன்புள்ள கடவுள் என் தேவைகளை அறிந்த நீங்கள் எது கொடுத்தாலும் எனக்குச் சம்மதம்.”

கடைக்காரன் இந்த அற்புதத்தைப் பார்த்தவுடன் தராசில் இருந்த எல்லாப் பொருட்களையும் பணம் வாங்காமல் கொடுத்து விட்டார். அவள் நன்றி செலுத்திவிட்டுச் சென்றார். பிறகு, இந்தச் சிறிய காகிதத்தின் பாரம் தாங்காமல், தராசு உடைந்ததைக் கண்டு மேலும்  ஆச்சிரியப்பட்டார். கடவுளுக்குத் தான் ஒரு வேண்டுதலின் முக்கியத்துவம் தெரியும்.

நீதி:

பிரார்த்தனை மூலம் ஒருவன் தன உணர்வுகளைக் கடவுளிடம் விண்ணப்பம் செய்கிறான். தனிப்பட்ட அனுபவமும்,  நெருங்கிய தொடர்பும்  ஏற்படுகின்றது. எல்லாச் சமயமும், கடவுள் நம் நன்மைக்காகவே, அன்புடனும் அக்கறையுடனும் பதிலளிக்கிறார். திடநம்பிக்கை உள்ளவர் கடவுளுக்கு மட்டுமே விருப்பப் படுகிறார். பிரார்த்தனை வழிப்பாடு மூலமாகவோ, மனதில் ஓசையற்ற முறையிலோ செய்யலாம். மனமார்ந்த முறையில் வழிப்பட்டால், உடனடியாகக் கடவுள் பதிலளிக்கிறார். அவரை விரும்புவோரிடம் நம்பிக்கையும், விசுவாசமும் உள்ளவராக இருப்பார்.

Source: http://saibalsanskaar.wordpress.com