பாராட்டுதல்

appreciation

நீதி: நன்றி உணர்வு / ஒழுக்கமான  நடத்தை

உபநீதி: மரியாதை 

நன்று படித்த இளைஞன் ஒருவன் ஒரு பெரிய கம்பெனியில் மேனேஜர் வேலைக்கு விண்ணப்பித்திருந்தான். முதல் நேர்முகத் தேர்வு நன்றாகவே செய்தான். அந்த கம்பெனியின் நிர்வாகி கிடைசி நேர்முகத் தேர்வை நடத்தித் தன் முடிவை எடுத்தார். நிர்வாகி இளைஞனின் விண்ணப்பித்திலிருந்துத் தெரிந்துக் கொண்டது யாதெனில், அவன் பள்ளிப் படிப்பிலிருந்து பட்டதாரிப் படிப்பு வரை ஒரு வருடம் கூட குறைந்த மதிப்பெண்கள் பெற்றதில்லை. நிர்வாகி அவனிடம்,  உனக்குப் பள்ளிக்கூடத்தில்  “படிப்புத்தவித்தொகை” ஏதேனும் கிடைத்ததா என வினவினார். “இல்லை” என்று பதில் அளித்தான். அப்படியானால், “உன் தந்தை பள்ளிக்குத் தொகை கட்டினாரா?” என கேட்டார். அதற்கு அந்த இளைஞன், “எனக்கு ஒரு வயது இருக்கும் போதே என் தந்தை இறந்து விட்டார்.  என் தாயார் தான் என்னை பார்த்துக் கொண்டார்” என்றார். தாயார் எங்கு வேலை செய்கிறார் என்று விசாரித்தப் பொழுது அவன் சொன்ன பதில் “என் தாயார் துணிகளை வெளுக்கும் வண்ணாத்தியாக வேலை செய்கிறார் என்று.” பெரியவர் இளைஞனிடம் அவனது கைகளைக் காண்பிக்கச் சொன்னார். கைகள் மிருதுவாகவும், சுத்தமாகவும் காணப்பட்டன. “உன் தாயாருக்குத் துணி வெளுப்பதில் எப்போதேனும்  ஏதாவது உதவிச் செய்திருக்கிறாயா?” எனக் கேட்டார். அவ்விளைஞன் மறுத்தவாறே கூறினான், என் தாயார் படிப்பதில் மென்மேலும் அக்கறைச் செலுத்தச் சொன்னார் என்று. நிர்வாகி இளைஞனிடம் ஒரு வேண்டுக்கோள்  விடுத்தார்.  அன்று இரவு தாயாரின் கைகளைச் சுத்தப்படுத்த உதவிச் செய்து மறுநாள் காலை தன்னைச் சந்திக்குமாறுக் கூறினார்.

இளைஞன் மனதில் தனக்குக் கட்டாயம் இந்த வேலைக் கிடைத்து விடும் என்றப் பூரிப்பில் வீடு சென்றுத் தாயாரின் கைகளைச் சுத்தப்படுத்த அவா கொண்டான். தாயாருக்கு ஒருப் புறம் சந்தோஷமும், மறு புறம் பயமும் தோன்ற, கைகளை மகனிடம் காட்டினார். அவன் தாயாரின் கைகளை நிதானமாகச் சுத்தப் படுத்தத் தொடங்கினான். அவன் கண்களிலிருந்து கண்ணீர் முத்து, முத்தாகத் தாயாரின் கைகளில் விழத் தொடங்கியது. தாயாரின் கைகளின் சுருக்கங்களையும், காயங்களையும் முதன் முறையாக மகன் கண்டான். சிலக் காயங்களின் வலி மிக அதிகமாக இருந்தது. தண்ணீர் பட்டதும் தாயார் சிலிர்க்கத் தொடங்கினார்.

இளைஞன் முதல் முறையாகத் தன் கல்விக்காகத்  தாயார் பட்ட துயரங்களை அறிந்தான். இந்த  தாயாரின் காயங்கள் தான், தன் மேற்படிப்பிற்கும், எதிர் காலத்திற்கும், துணி வெளுத்து உதவின எனப் புரிந்துக் கொண்டான். கைகளைச் சுத்தப்படுத்தியப் பிறகு, மீதியிருந்த துணிகளைத் தானே துவைத்து வைத்தான். தாயும், மகனும் அன்று இரவு வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தனர். மறுநாள் காலை இளைஞன் காரியாலயத்திற்குச் சென்று நிர்வாகியைச் சந்தித்தான். இளைஞனின் கண்ணீரைக் கண்டதும், பெரியவர் அவனிடம் நடந்த விஷயங்களைக் கேட்டறிந்தார்.

அவன் எண்ணத்தைப் பெரியவர் கேட்டப்போது, இளைஞன் “முதலாவதாக பாராட்டு என்றால் என்னவென்று அறிந்தேன். தாயாரின் உழைப்பு இல்லாவிட்டால் இந்த அளவுக்கு என்னால் வெற்றிப் பெற்றிருக்க முடியாது. இரண்டாவதாக, தாயாருடன் சேர்ந்து எப்படி உதவி செய்வது என்று அறிந்தேன். ஒரு காரியம் வெற்றி அடைய என்னென்ன துன்பங்களைச் சந்திக்க வேண்டும் என அறிந்தேன். மூன்றாவதாக, குடும்பம், உறவு இவற்றின் முக்கியத்துவத்தையும் அறிந்தேன்” என்று சொன்னார். நிர்வாகி, “பிறருடைய வேலையைப் பாராட்டி, அவர்களின் கஷ்டங்களையும், உணர்வுகளையும் புரிந்து கொள்ளும் ஒரு நபரையே தேர்வுச் செய்ய எண்ணினேன். பணம், செல்வம் என்பதே தன் லட்சியம் என எண்ணக்கூடாது. உன்னைத் தேர்வுச் செய்கிறேன்” என்று கூறினார்.

பிற்காலத்தில் அந்த இளைஞன் நன்று உழைத்து தன் கீழ் வேலைச் செய்வோரின் பாராட்டையும், மதிப்பையும் பெற்றார். எல்லோரும் ஒன்றுச் சேர்ந்து கூட்டாக வேலைச் செய்துக் கம்பெனியின் பெயரையும் உயரச் செய்தனர்.

நீதி:

எந்த ஒரு குழந்தைப் பாதுகாப்பு உணர்வுடனும், கேட்டதெல்லாம் கிடைக்கும் என்ற எண்ணத்துடன் வளர்க்கப் படுகிறதோ, அந்தக் குழந்தைக்குத் தான், தன் உரிமை என்ற எண்ணம் வந்துவிடும். இப்படிப்பட்ட குழந்தைகள் தன் பெற்றோர்களின் கஷ்டங்களை உணர மாட்டார்கள். வேலைக்குச் சென்றால் எல்லோரும் தனக்கு அடிப் பணிய வேண்டும் என நினைப்பவர்கள், தன் கீழே வேலை செய்வோரின் கஷ்ட துக்கங்களை உணராமல் எப்போதும் பிறரைக் குறைக் கூறிக் கொண்டிருப்பார்கள். இப்படிப் பட்டவர்கள் ஆரம்பக் காலத்தில் சிறிது வெற்றிப் பெறலாம். நாளடைவில் முணு முணுத்துக் கொண்டே எல்லோருடைய  வெறுப்புக்கும் பாத்திரமாவார்கள்.

இப்படிப்பட்ட பெற்றோராக நாம் இருந்தால், குழந்தையை விரும்பிகிறோம் என்றுப் பொருளா அல்லது தப்பான முறையில் வளர்க்கிறோமா? குழந்தைப் பெரிய வீட்டில் சுக போகங்களுடன் வளரலாம். ஆனால் பெற்றோர் வேலைச் செய்யும் போது, தன்னால் ஆன சிறு உதவிகளைச் செய்ய வேண்டும். எத்தனைப் பெரியப் பணக்கார வீட்டுக் குழந்தையாக இருந்தாலும், ஒரு நாள் வயதாகி விட வேண்டியது தான். அதனால் பிறரது கஷ்ட நஷ்டங்களை உணர்ந்து, அவர்களின் சேவைகளைப் பாராட்டும் தன்மை உள்ள மனிதரே வாழ்க்கையில் சிறப்படைவார்கள். ஒற்றுமையுடன் பிறரோடு சேர்ந்து வேலைச் செய்ய அறிந்துக் கொள்வது நல்லது.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

http://saibalsanskaar.wordpress.com

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s