ஒரு கோப்பை காப்பி

cup of coffee

நீதி – நன் நடத்தை / உதவும் மனப்பான்மை

உபநீதி – தன்னலமற்ற உதவி / சுய மரியாதை

இத்தாலி மிக அழகான நகரம். விளக்குகளும், நீர்ப்பகுதிகளும் நிறைந்த வசீகரமான ஒரு இடம்.

அங்கு ஒரு பிரபலமான காப்பிக் கடையில் என் நண்பனும் நானும் உட்கார்ந்துக்கொண்டு ருசியான காப்பியை அருந்துகின்ற நேரத்தில், ஒருவர் பக்கத்து மேஜையில் வந்து அமர்ந்தார். பிறகு பணியாளரிடம், “இரண்டுக் கோப்பைக் காப்பி, ஒன்றைச் சுவரில் வைக்கவும்” என்றுச் சொன்னார்.  நாங்கள் அதை உன்னிப்பாகக் கேட்டு, அடுத்தச் செயலைப் பார்க்கும் பொழுது ஆச்சரியமாக இருந்தது. இரண்டிற்கும் பணத்தைக் கொடுத்து விட்டார். ஆனால் ஒரு கோப்பை தான் அவர் மேஜையில் இருந்தது. மற்றொன்று சுவரில் இருந்தது. அவர் கிளம்பியவுடன் பணியாளர் சுவரின் மீது ஒரு காகிதத்தை ஒட்டினார். “ஒரு கோப்பைக் காப்பி”  என்று எழுதப்பட்டிருந்தது. இதைக் கண்டு எங்களுக்குச் சற்றுக் குழப்பமாக இருந்தது. காப்பிக்குப் பணத்தைக் கொடுத்து விட்டுக் கிளம்பினோம்.

சில நாட்களுக்குப் பிறகு, அதேக் கடைக்கு வரும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. நாங்கள் சந்தோஷமாகக் காப்பி குடித்துக் கொண்டிருக்கும் போது, கிழிந்த உடை அணிந்துக் கொண்டு ஒருவன் வந்தான். “சுவரில் இருக்கும் ஒரு கோப்பைக் காப்பி” என்றுப் பணியாளரிடம் கேட்டான். மரியாதையுடனும், பெருந்தன்மையுடனும்  காப்பியைக் கொடுத்தார். அதை அருந்தி விட்டுப் பணம் ஏதும் கொடுக்காமல் சென்று விட்டார்.

இதைப் பார்த்து ஆச்சரியப் பட்டோம். சுவரில் இருந்த காகிதத்தைக் குப்பையில் வீசினார். எல்லாம்  புரிந்துவிட்டது.

கஷ்டப்படுபவர்களுக்கு இந்த நகரத்தில் காட்டும் மரியாதையும் அன்பையும் பார்த்து மகிழ்ச்சி அடைந்தோம்.

ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். தனித்தன்மையை இழக்காமல், காப்பிக் கோப்பை வேண்டும் என்றுக் கூறாமல், அந்தச் சுவரைப் பார்த்தவுடன் பணியாளர் மரியாதையுடன் காப்பியை அவருக்குக் கொடுத்து, இவரும் சந்தோஷமாக அருந்தி விட்டுச் சென்றார்.

…………….எல்லா இடங்களையும் விட, அந்த சுவர் தான் மிகவும் அழகு.

நீதி:

ஒருவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தால், தன்னலமற்ற சேவையாக இருக்க வேண்டும். ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். சில சமயங்களில், உதவி செய்வதற்கான ஒரு வாய்ப்புக் கிடைக்கும் போது, கர்வமோ அஹங்காரமோ நடுவில் வராதப்படி பார்த்துக் கொள்ள வேண்டும். உதவிக் கேட்போரின் சுய மரியாதைக்குத் தடங்கல் இல்லாமல் கவனித்துக் கொள்ள வேண்டும். சரியான ஒரு காரியத்தை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்ய வேண்டும்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

http://saibalsanskaar.wordpress.com

Advertisements

2 thoughts on “ஒரு கோப்பை காப்பி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s