Archive | April 2014

நெப்போலியனின் மனோதிடம்

napolean

நீதி – நேர்மை

உபநீதி – மனோதிடம்

 நெப்போலியன் தனது சிறுவயதில் ராணுவ விடுதியில் தங்கி படித்துக் கொண்டு இருந்தான். அப்போது அறையில் அவன் கூடத் தங்கியிருந்த மற்றொரு மாணவன் தன்னுடைய அழகான பை ஒன்று காணாமல் போய்விட்டதாக மேலதிகாரியிடம் புகார் கூறினான். “யார் மேலாவது உனக்குச் சந்தேகம் உண்டா?” என்றார் மேலதிகாரி. “நெப்போலியன் மேல்தான் எனக்குச் சந்தேகம்” என்றான் அந்த சக மாணவன். உடனே அந்த அதிகாரி நெப்போலியனைத் தன்னோடு அறைக்கு அழைத்தார். நெப்போலியன் மெதுவாக மேலதிகாரியின் அறைக்குள் நுழைந்தான்.

மேலதிகாரி நெப்போலியனை விசாரிக்காமலேயே தனது கையில் பிரம்பை எடுத்தார். சரம் வாரியாக அடித்துத் தள்ளினார். நெப்போலியனை “ஏன் திருடினாய்? இனி இது மாதிரி தவறு செய்வாயா?” என்று கேட்டு நல்ல உதை! அவ்வளவு அடியையும் வாங்கிக்கொண்டு அமைதியாக இருந்தான் நெப்போலியன். அதற்கு பிறகு கொடுத்த தண்டனையையும் வாங்கிக்கொண்டு அமைதியாக இருந்தான். சிறிது நாட்கள் கழித்து புகார் கொடுத்த அந்த மாணவன் மேலதிகாரியிடம் ஓடிவந்தான். “ஐயா… என்னோட அந்தப் பையை திருடியது நெப்போலியன் அல்ல! வேறொரு மாணவன். இப்பொழுதுதான் உண்மை தெரிந்தது. தெரியாமல் நெப்போலியன் மேல் புகார் கொடுத்துவிட்டேன். மன்னித்துவிடுங்கள்!” என்றான். அநத அதிகாரிக்கு மிகவும் ஆச்சரியம். உடனே நெப்போலியனை அழைத்தார்.

“உனக்கு என்ன பைத்தியமா? நீ என்ன முட்டாளா? அன்று அந்த அடி அடித்தேன் அப்பொழுதே உண்மையைச் சொல்ல வேண்டியதுதானே என்றார்”. நெப்போலியன் அமைதியாகச் சொன்னான், ஐயா! நீங்கள் என்னை அடிப்பதற்கு முன்பாகக் கேட்டு இருந்தால் நான் சொல்லியிருப்பேன். அடித்துக்கொண்டே கேட்டீர்கள். அப்பொழுது நான் இல்லை என்று சொன்னாலும் அடிக்குப் பயந்து நான் அப்படிச் சொல்வதாக நீங்கள் நினைப்பீர்கள். நான் பயந்ததாக யாரும் நினைக்கக் கூடாது! அதை விட அடிவாங்குவது எனக்கு ஆட்சேபனை இல்லை!.

சிறுவயதில் இருந்த நெப்போலியனின் அந்த பயமற்ற தைரியம்தான் பின்னாளில் மாபெரும் வெற்றி வீரனாகக் காரணமானது.

நீதி:

கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரித்து அறிவதே மேல்.

SOURCE :[Velmayil Cbe : 771]

http://saibalsanskaar.wordpress.com

குரு – அறியாமையை நீக்குபவர்

brahma, vishnu and maheshwara

 

 

 

 

நீதி – நன் நடத்தை

உபநீதி – மரியாதை

குருர் பிரம்மா குருர் விஷ்ணு

குருர் தேவோ மஹேஷ்வர:

குருர் சாக்ஷாத் பரப் பிரம்மா

தஸ்மை ஸ்ரீ குரவே நம:

குருர் பிரம்மா – குருவே பிரம்மா – படைப்பவருக்கு சமமாக கருதுகின்றோம்.

குருர் விஷ்ணு – விஷ்ணுவாக மதிப்பிடுகின்றோம். உலகத்தைப் பேணி காப்பவர் அவரே.

குருர் தேவோ மஹேஷ்வர: – அழிப்பவரும் அவர்தான்.

குரு சாக்ஷாத் – உண்மையான குரு அவர் மட்டுமே.

பரப் பிரம்மா – உயர்ந்த பிரம்மன்

தஸ்மை – அவருக்கு மட்டும்

குரவே நமஹ – அந்த குருவை நான் வணங்குகிறேன்.

“குரு” – கு – அஞ்ஞானம் என்ற இருள்,  நீ – நீக்குபவர்.

ஒரு சமயம், அழகான வனத்திலே ஒரு ஆசிரமம் இருந்தது. அங்கு தௌம்யர் என்ற ரிஷி தன் சிஷ்யர்களுடன் வசித்து வந்தார். ஒரு நாள், உபமன்யு என்ற ஒரு வாட்டசாட்டமான பையன் அங்கு வந்தான். அவன் பார்ப்பதற்கு தூய்மையற்றவனாகத் தெரிந்தான். ரிஷி தௌம்யரை வணங்கி, தன்னை சிஷ்யனாக ஏற்றுக் கொள்ளும்படி அவன் வேண்டினான்.

அந்தக் காலத்தில், குருவே சிஷ்யர்களை தேர்ந்தெடுப்பார். மாணவர்கள் குருகுலத்தில் சேர தகுதி இருக்கின்றதா என்று குரு ஆராய்ந்து, அவர்களுக்கு பயிற்சி மற்றும் கல்வி அளித்து, வாழ்க்கையின் நற்பண்புகளைக் கற்றுக் கொடுத்து, எல்லோரிடத்திலும் கடவுளைப் பார்ப்பதற்கும் அறிவு புகட்டுவார்.

தௌம்யர், உபமன்யுவை குருகுலத்தில் ஏற்றுக் கொள்ள ஒப்புக் கொண்டார். அவனுக்கு படிப்பில் ஆர்வம் சற்று குறைவாகவே இருந்ததால் மந்தமாக காணப் பட்டான். மற்ற மாணவர்களோடு ஒப்பிடும் போது,  அறிவு கூர்மை குறைவாக இருந்ததால் மிகவும் தாமதமாக கற்றுக் கொண்ட போதிலும், அவனையும் எல்லோருடனும் சேர்ந்து கற்றுக் கொள்ள குரு சம்மதித்தார். ஆதி நூல்களின் பொருள் அவனுக்கு புரியவில்லை; மனப்பாடமும் செய்ய முடியவில்லை. அவன் பணிவாகவும் இல்லை; நற்குணங்களும் சற்று குறைவாகவே இருந்தன.

தெளிவான மனப்பான்மையும், திறமையும் கொண்ட தௌம்ய ரிஷி, உபமன்யுவிடம் இருந்த குறைபாடுகளைப் பொருட்படுத்தாமல், மற்றவர்களை விட அவனிடம் அதிக அன்பை செலுத்தினார். நாட்கள் செல்லச் செல்ல உபமன்யுவும் குருவிடம்  அன்பை செலுத்தி, அவருக்காக எதையும் செய்ய முன் வந்தான். உபமன்யு அதிகமாக உண்ணுவதால் மந்த புத்தியுடன் இருப்பதை ரிஷி யூகித்தார்.

அதிகமாக உண்ணும் போது, ஆரோக்கிய குறைபாடும், தூக்கமும் இயல்பாக வருகின்றன. இத்தகைய சிஷ்யர்கள் தெளிவாக யோசனை செய்ய முடியாததால், மந்த புத்தி அல்லது தமோகுணம் ஏற்படுகின்றது. ரிஷி தன் சீடர்கள் எல்லோரிடமும், உடலை சரியாக பராமரிப்பதற்கு, அளவாக உட்கொண்டு, (வாழ்வதற்காக உண்ண வேண்டுமே தவிர, வாழ்க்கையே உண்ணுவதற்காக என்று இருக்கக் கூடாது) அந்த நான்கு அங்குலமுள்ள நாவு என்ற கொடுமையான புலனுணர்வை கட்டுப் படுத்த வேண்டும் என்று விரும்பினார்.

ரிஷி, எப்படியாவது உபமன்யுவை திருத்த வேண்டும் என்ற நோக்கத்துடன், அவனை ஆசிரமத்தில் உள்ள பசுக்களை பராமரிக்க வேண்டும் என்று கூறினார். உபமன்யுவைக் காலையில் மாடுகளை மேய்த்து விட்டு, மாலை வேளை திரும்பி வர அனுப்பி விடுவார். முனிவரின் மனைவி பகல் உணவை தினமும் கட்டிக் கொடுத்து விடுவார்.

வாட்டசாட்டமாக இருந்த உபமன்யுவிற்கு பசி அதிகமாக இருந்ததால், தினமும் உணவிற்குப் பிறகு பசுக்களிடமிருந்து பாலைக் கறந்து குடித்து விடுவான். கூடிய சீக்கிரத்தில், உபமன்யு இன்னும் பருமனாகி விட்டதை ரிஷி கவனித்தார். ஒவ்வொரு நாளும், பசுக்களை பல மைல் தூரம் கூட்டிச் சென்று வந்து, பகல் உணவும் கட்டுப்பாட்டோடு இருந்த போது, உபமன்யுவின் எடை குறையாமலிருக்க என்ன காரணம் என்று ரிஷி ஆச்சரியப்பட்டார்.  இவ்வளவு பருமனாக ஆனதற்கு காரணம் கேட்ட போது,  உபமன்யு உண்மையைச் சொல்லி விட்டான். அதற்கு ரிஷி, பசுக்கள் அவனுக்கு சொந்தமில்லாத போது எப்படி இந்த காரியத்தை செய்யலாம் என்று கண்டித்தார். மேலும் குருவின் அனுமதியில்லாமல் அப்படி செய்வது தவறு என்று கூறியதும், குருவின் உத்தரவை உடனடியாக உபமன்யு ஒப்புக் கொண்டான்.

உபமன்யுவிற்கு இன்னும் பசித்தது. கன்றுக்கள் பசுக்களிடமிருந்து பாலைக் குடித்த பிறகு, சில துளிகள் கீழே விழுந்தன; உள்ளங்கையில் அதை சேகரித்து, உபமன்யு குடித்தான்.

தௌம்யர் உபமன்யுவை கவனித்துக் கொண்டு வந்தார்; இன்னும் பருமனாகவே அவன் இருப்பதைக் கண்டு, உண்மையை மீண்டும் கேட்டார். இச்சமயமும் அவன் உண்மையைக் கூறி விட்டான். அதற்கு தௌம்யர், பசுவின் வாயிலிருந்து கீழே விழும் பால் சுத்தமாக இருக்காது என்றும், அந்தப் பாலை குடிப்பதால் ஆரோக்கியத்திற்கு கெடுதல் என்றும் கூறிய பிறகு, உபமன்யு இனிமேல் அந்தக் காரியத்தை நிறுத்தி விடுவதாக ரிஷியிடம் உறுதி மொழி கொடுத்தான்.

ஆனால், அவனுக்கு பசியை கட்டுப்படுத்த முடியவில்லை. மதியம் ஒரு நாள், மரத்திலிருந்து சில பழங்களை பறித்துத் தின்றான்; விஷப் பழங்களாக இருந்ததால் குருடாகி விட்டான். ஆசிரமத்திற்கு திரும்பி வரும் வழியில், பயந்து போய், தடுமாறி அவன் ஒரு கிணற்றில் விழுந்தான்.

மாலை நேரம், உபமன்யுவின் நிலைமையால், மாடுகள் தாங்களாகவே வீடு திரும்பி வந்தன. உபமன்யுவைத் தேடிக் கொண்டு ரிஷி சென்றார். அவர் கிணற்றிலிருந்து அவனை வெளியில் கொண்டு வந்து,  இந்த இக்கட்டான நிலைமையில் இருந்த உபமன்யுவிற்கு ஒரு மந்திரத்தை சொல்லிக் கொடுத்தார். இதை சொல்வதின் பயன் என்னவென்றால் –  இரட்டையர்களான தேவலோக வேதியர்களை (அஷ்வினி குமாரர்கள்) வரவழைத்து, உபமன்யுவின் கண் பார்வையை அவனுக்கு மறுபடியும் கிடைக்குமாறு செய்தனர்.

தௌம்யர் மிகவும் பொறுமையாக சில முக்கியமான விஷயங்களை உபமன்யுவிற்கு தெளிவுப் படுத்தினார். உபமன்யு உணவிற்கு ஆசைப்பட்டதால் விஷப் பழங்களை சாப்பிட்டு, அதனால் குருடாகி, கிணற்றில் விழுந்தான். ரிஷி தக்க சமயத்தில் அவனைக் காப்பாற்றாமல் இருந்திருந்தால், அவன் இறந்திருக்கலாம். இந்தத் தவறை உணர்ந்த உபமன்யு, அதிகம் சாப்பிடுவதை விட்டு விட்டு, ஆரோக்கியமாகத் திகழ்ந்து, புத்திசாலித்தனத்துடனும், திறமையுடனும் செயற்பட்டான்.

guru sishya

ரிஷி அவன் மனதில் அன்பை உருவாக்கி, பிரம்மாவாகச் செயற்பட்டார்.

கிணற்றிலிருந்து அவனைக் காப்பாற்றி விஷ்ணுவாகச் செயற்பட்டார்.

உபமன்யுவிடம் இருந்த எல்லாக் கெட்ட குணங்களையும் அகற்றி, வெற்றிக்குப் பாதையை வகுத்து மகேஷ்வரனாக செயற்பட்டார்.

நீதி:

குரு என்பவர் நல்ல குணங்களைப் புகட்டி, சரியானப் பாதையைக் காண்பிக்கிறார். அவருக்கு எப்போதும் மரியாதையை செலுத்தி, நன்றி உணர்வோடு இருக்க வேண்டும்.

சாஸ்திர சம்பிரதாயங்கள் மற்றும் புனிதமான நூல்களை சரியாக புரிந்து கொள்வது மிகவும் அவசியம். மாணவர்களுக்கு நற்பண்புகள், சடங்கு முறைகள் மற்றும் கலாச்சாரத்தைப் பற்றி கற்றுக் கொடுக்கும் போது, குருவும் அதை நடைமுறையில் பின்பற்ற வேண்டும். கடவுளை பிரார்த்திக்கும் போது, ஒவ்வொருவரின் ஆசைகளை மட்டுமே அவரிடம் கேட்காமல், நன்றி உணர்வையும் தெரிவிக்க வேண்டும். ஒருமுகச் சிந்தனை மற்றும் மன நிம்மதியை வளர்த்துக் கொள்ள தியானத்தை அவசியம் கடைபிடிக்க வேண்டும். விளக்கு ஏற்றுவது போன்ற சாஸ்திர சம்பிரதாயங்களின் முக்கியத்துவத்தை ஆசிரியர் மாணவர்களிடம் தெளிவாக விவரிக்க வேண்டும் – விளக்கு ஏற்றுவதால், ஒளியின் மூலம் இருளை அகற்றி, நல்ல எண்ணங்கள் மூலம் தீய எண்ணங்களை அகற்றுவது ஆகும். பயம் ஒன்றுமில்லாமல் கடவுளை நேசிக்க அவர்களுக்கு ஆசிரியர் கற்றுக் கொடுக்க வேண்டும்.  குரு இவ்வகையான நற்பண்புகளை மாணவர்களின் மனதில் புகுத்தும் பொழுது, பல வருடங்களுக்குப் பிறகு அவர்கள் தெய்வீகப் பாதையை கடைப்பிடிப்பதற்கு தயாராக இருக்கும் போது, இந்த பயிற்சி உதவும். அதனால், குரு என்பவர் ஒரு குழந்தையை சரியான பாதையில் வழி நடத்திச் செல்ல பெரிய பங்கை வகுக்கிறார்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

http://saibalsanskaar.wordpress.com

சுத்தப்படுத்துதல்அவசியம்

mother and daughter - washing

நீதிஉண்மை

உபநீதி – நன்மையில் நம்பிக்கை

ஒரு ஆறு வயதுச் சிறுமி தன் தாயாருடன் “வால்மார்ட்”  கடைக்குச் சென்று கொண்டிருந்தாள். முகத்தில் ஆங்காங்கே வெயிலினால் ஏற்படும் புள்ளிகள் இருந்தாலும், களங்கமற்றச் சிவந்த நிறத்துடன் மிக அழகாக இருந்தாள். வெளியில் மழை பலமாகப் பெய்து கொண்டிருந்தது. நாங்கள் எல்லோரும் அங்கே கடையின் கூடாரத்தின்கீழ் நின்றிருந்தோம்.

சிலர் பொறுமையுடனும், சிலர் கோபத்துடனும் இயற்கையைச் சபித்துக் கொண்டிருந்தனர். எனக்கு மழைஎன்றால் ரொம்பவும் பிடிக்கும். மெய்மறந்து மழையின் சத்தத்தை அனுபவித்துக் கொண்டு வானம் அழுக்கையும், தூசியையும் கழுவும் அழகைப் பார்த்துக்கொண்டிருந்தேன். குழந்தைப் பருவத்தில் குதூகலாமாகக் கவலைகளை மறந்து மழையை அனுபவித்ததை நினைத்துக் கொண்டிருந்தேன்.

மயக்கமூட்டும் சூழ்நிலையில் இருந்த நான், சிறுமியின் குரலைக் கேட்டு உற்சாகமாகப் பார்த்தேன். சிறுமி அம்மாவிடம் “நாம் மழையில் ஓடிப் போகலாமா?”  என க்கேட்டுக் கொண்டிருந்தாள். அதற்கு “வேண்டாம், மழைசற்றுக் குறைந்தபிறகு போகலாம்” என்று அம்மா கூறினாள். ஒரு வினாடி ஆலோசித்தபிறகு மறுபடியும் சிறுமி தன் விருப்பத்தை அம்மாவிடம் கூறினாள். அதற்கு அம்மா “நனைந்து விடுவோம்” என்று பதிலளித்தார்.

சில நிமிடங்களுக்குப் பிறகு சிறுமி அம்மாவை அணைத்துக் கொண்டு  “காலையில் வேறுமாதிரியாகச் சொல்லிவிட்டு, தற்பொழுது வேறுமாதிரியாக நடந்து கொள்கிறாயே” எனக் கூறினாள். அம்மாவுக்கு அவள் சொல்வது புரியவில்லை. என்னவென்று கேட்டபோது அவள் சொன்னவார்த்தைகள் உணர்ச்சிபூர்வமாக இருந்தன. அன்று காலை அவள் அப்பாவிற்கு இருக்கும் கேன்சர் நோயைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது கடவுள் நினைத்தால் எதையும் கடக்க உதவி செய்வார் என்று சொல்லிக்கொண்டு இருந்ததை ஞாபகப் படுத்தினாள்.

கூட்டத்தில் இருந்தவர்கள் எல்லோரும் மெளனமாக இருந்தார்கள். மழைச்சத்தம் தவிரவேறு ஒன்றும் கேட்கவில்லை. சிறுமியின் வார்த்தைகள் எல்லோரையும் யோசிக்கத் தூண்டியது.  யோசனை செய்தாள். சிறுமியின் சொற்கள் வாழ்கையின் உறுதி மொழியாகத் தென்பட்டன. நம்பிக்கை வந்து விட்டது.  உடனடியாகச் சிறுமியிடம், “மழையில் ஓடி விளையாடலாம், கடவுள் காப்பாற்றிச் சுத்தப் படுத்துவார்” எனக் கூறினாள். இருவரும் மழையில் ஓடினார்கள். நாங்கள் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தோம். அவர்களைப் பார்த்து மற்றவர்களும் உற்சாகமாகத் தன் மோட்டார் வண்டிகளுக்குச் சென்றார்கள். நானும் ஓடினேன், மழையில் நனைந்தேன். என்னையும் சுத்தப்படுத்திக் கொள்வது அவசியமாகத் தெரிந்தது.

நீதி:

நாம் என்ன சொன்னாலும் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். சொன்னதைச் செய்து, குழந்தைகளையும் நல்லவழியில் நடத்திச் செல்லவேண்டும். நம் வார்த்தைகளை நாமே நம்பாவிடில், குழந்தைகள் எப்படி நம்புவார்கள். எந்தக் கஷ்டம் வந்தாலும், அதில் இருக்கும் நன்மைகளைப்  பார்த்துச் செயல்பட வேண்டும். எல்லாமே நமக்கு ஒரு போதனை.

 

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

http://saibalsanskaar.wordpress.com

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

 tamil new year 

 மனதில் உறுதி வேண்டும்

வாக்கினிலே இனிமை வேண்டும்

நினைவு ல்லது வேண்டும்

நெருங்கின பொருள் கைப்படவேண்டும்

வு மெய்ப்வேண்டும்

கைவம் ஆவது விரைவில் வேண்டும்

மும் இன்பமும் வேண்டும்

ணியிலே பெருமை வேண்டும்!

ண்திறந்திட வேண்டும்

காரியத்தில் உறுதிவேண்டும்

பெண்விடுதலை வேண்டும்

பெரியகடவுள் காக்கவேண்டும்!

மண்னுற‌ வேண்டும்,

வானம் இங்கு தென்பவேண்டும்,

உண்மை நின்றிட வேண்டும்

ஓம், ஓம், ஓம், ஓம்!

 

“ஜய” புத்தாண்டே வருக வருக, துன்பங்கள் நீங்கி இன்பம் பொங்க அருள் தருக

”ஜய வருஷம்” எனும் புதிய புத்தாண்டு எதிர்வரும் 13.04.2014 ஞாயிற்றுக்கிழமை கனடா, அமெரிக்கா போன்ற வட-அமெரிக்க நாடுகளிலும்; 14.04.2014 திங்கட்கிழமை இலங்கை, இந்தியா போன்ற நாடுகளிலும் பிறப்பதாக சோதிடம் கணித்துள்ளது. இராசி மண்டல வலயத்தில் உள்ள மேஷ ராசியில் உதயமாகும் சூரிய பகவான் மீண்டும் மேஷ ராசிக்கு வரும் வரை உள்ள காலம் ஓர் தமிழ்-வருஷமாகும்.

பூமியில் வாழும் எல்லா உயிர்களிடத்தும் சூரிய பகவான் ஆதிக்கம் செலுத்துவதால் இந் நாளில் சூரிய வழிபாடு மிகவும் சிறப்பாக கருதப்படுகின்றது.

புது வருடத்தில் செய்யப்பெறும் அனைத்துச் செயல்களும் காலமறிந்து சிறப்பாக செய்ய வேண்டும் என்பதற்காக அன்றைய தினத்தில் நாம் அனைவரும் பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டதன் பிரகாரம், குறிப்பிட்ட சுப நேரத்தில்(விஷூ புண்ணிய காலம்)  மருத்து நீர் வைத்து, தோய்ந்து புத்தாடை தரித்து ஆலயம் சென்று வழிபடுவதோடு. குறிக்கப்பெற்ற சுபநேரத்தில் பெரியோர்களை வணங்கி அவர்களின் ஆசீர்வாதம் பெறுவதும், கைவிசேஷம் பெறுவதும் தொன்று தொட்டுவரும் வழக்கமாக உள்ளது, வருடப் பிறப்பன்று நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் அந்த வருடம் முழுவதும் எமது வாழ்க்கையை வளப்படுத்தும் என்பது இந்துக்களின் ஐதீகம்.

தமிழ் மாதக் கணிப்பானது சூரியன் மேட இராசிக்குள் நுழைவது முதல் அவ் இராசியை விட்டு விலகும் நாட்களை சித்திரை மாதம் எனவும்; சித்திரை மாதமே தமிழ் மக்களின் வருடத்தின் சித்திரை முதல் மாதம் என்பதால் இதுவே புதிய ஆண்டின் தொடக்கமும் ஆகும். புதிய எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் வைத்து மங்களகரமான திருநாளாக சித்திரைப் புதுவருடம் வரவேற்கப்படுகிறது.

வருடப்பிறப்புக் கருமங்கள்: புத்தாடை தரிசனம்

ஸ்நானம் செய்த பின் மஞ்சள் நிறப்பட்டாடையாயினும் அல்லது மஞ்சள் கரை வைத்த வெள்ளை நிற புதிய வஸ்திரங்களை அணிந்து கொள்ளுதல் நன்மை தரும். மஞ்சள் நிற ஆடை அமையா விடில், ஆடையில் ஒரு சிறு பகுதிலாவது மஞ்சள் அரைத்துப் பெற்ற கலவையை பூசி விடுவதும் நன்மை தரும். பின்னர் பூரண கும்பம், கண்ணாடி, தீபம், இஷ்டகுல தெய்வ படங்களை தரிசித்து, தாய், தந்தையர், பெரியோர்களிடம் நல்லாசிகளைப் பெற்றுக் கொள்ளுதல் உயர்வினை அளிக்கும்.

தெய்வ வழிபாடு 

வீடுகளில் இஷ்ட குலதெய்வங்களை வழிபட்ட பின், தமது கிராமத்தில் உள்ள ஆலயங்களுக்கு சென்று பூசை வழிபாடுகளை செய்வதுடன் தான, தருமங்களையும் மேற்கொள்ளுதல் சிறப்பினைத் தரும். சூரியனுக்கு பொங்கலிட்டு வழிபடுதல் சாலச் சிறந்தது. புண்ணிய கர்மாக்கள் செய்பவர் சொர்க்கம் செல்லப் பயன்படும் வழி `பித்ருயாணம்’ என்றும் `தூமாதி மார்க்கம்’ என்றும் அழைக்கப்படும்.

வராஹமிஹிரர் என்னும் வானியல் நிபுணர் “ப்ருஹத் சம்ஹிதையில்“ மேஷ சங்க்ரமண காலத்திலே சூரிய பகவானை நமஸ்காரம் செய்வது மிகவும் விசேஷம் என்று சொல்லுகிறார். சைத்ர விஷு புண்ணியகாலம் என்பது சித்திரை மாதப் பிறப்பைக் குறிக்கும், அதாவது சூரியன் முதல் ராசியான மேஷத்தில் ப்ரவேசிப்பது. சித்திரை முதல் நாள்தான் ராமபிரான் ராவணனை வெல்ல அகஸ்திய முனிவரிடம் உபதேசம் பெற்று, ஆதித்ய ஹ்ருதயம் படித்தார். ஆகவே இந்தப் புனித சித்திரை நன்நாளில் காலையில் எழுந்து நீராடி, சுத்தமான மனதுடன் இறைவனைப் ப்ரார்த்தித்து, ஆதித்ய ஹ்ருதயம் சொல்வது மிகுந்த பலனைத் தரும்.

அறுசுவை உணவு

அறுசுவையும் கலந்த மாங்காய் பச்சடி

manga pachadi

சித்திரை மாதத்தில் சூரியன் மேஷ ராசியில் மிகவும் உச்சமாக பிரகாசிப்பதால் அன்றைய தினம் பானகம், நீர், மோர், பருப்புவடை ஆகியவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும். இனிப்பு, கசப்பு, உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு என அறுசுவை கொண்ட உணவுகளை சமைத்து உண்பர்.அறுசுவையும் கலந்து செய்யும் மாங்காய் பச்சடியைப் போல் வாழ்க்கையும் சுகமும் துக்கமும் எல்லாம் கலந்து வரும். அதுதான் பச்சடி பண்ணுவதின் முக்கியத்துவம்.

 

மதிய உணவில் வேப்பம்பூ பச்சடி, மாங்காய்ப் பச்சடி, பருப்பு வடை, நீர்மோர், பருப்பு, பாயாசம், மசால்வடை போன்றன இடம்பெறுதல் அவசியம். வேப்பம் பூ கசக்கும் என்றாலும் மனித உடலிலுள்ள ரத்தத்தை தூய்மை செய்வதில் வேப்பம் பூவுக்கு நிகராக வேறு எந்த மூலிகையும் இல்லை. இதற்காகவே இந்த உணவு உண்ணப்படுகிறது. அத்துடன்  உணவை விருந்தினருடன் உண்டு மகிழ்ந்தால் அந்த ஆண்டு முழுவதுமே குதூகலமாக இருக்கும் என்பது மக்களின் முக்கிய நம்பிக்கையாகும். இதற்காகவே விருந்தினர் வருகையும் விருந்தோம்பலும் நம் பாரம்பரியமாக மாறியது.

new year picture

The End

Source:

1. http://www.thulikal.com/சித்திரைப்-புத்தாண்டும்/

2. Google searches

இயேசு கிறிஸ்து வழி நடத்தல் – அண்ணனின் பரிசு

christmas brothers

நீதிநேர்மை

உபநீதிகடமை / அக்கறை

இயேசு நாதரின் பிறந்த நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. ஒன்பது வயது ஜேரனும் அவனது ஆறு வயதுச் சகோதரன் பார்க்கரும் மிகவும் உற்சாகமாக இருந்தார்கள். வீட்டுப் பக்கத்தில் இருந்த மளிகைக் கடை, புத்தகம் வாசிக்கும் போட்டி ஒன்றுக்குப் பொறுப்பு ஏற்றுக் கொண்டிருந்தது. அதிகப் புத்தகங்கள் படிப்போர்க்கு ஒரு மிதி வண்டிப் பரிசு. இரண்டு சகோதரர்களுக்கும் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் இருந்ததால், புத்தம் புதிய வண்டியை வெல்ல அதிக வாய்ப்பு இருந்தது. அவர்களின் பெற்றோரும் ஆசிரியரும் படிக்கும் ஒவ்வொரு புத்தகத்திற்கும் கையெழுத்துப் போட வேண்டும் என்ற விதிமுறையை விதித்திருந்தனர். இரண்டு மிதிவண்டிகளைப் பரிசாகக் கொடுக்க இருந்தார்கள். முதலாம் வகுப்பிலிருந்து மூன்றாம் வகுப்புவரைப் படிக்கும் குழந்தைகளுக்கு ஒரு மிதிவண்டியும், மற்றொன்று நான்காவதிலிருந்து ஆறாம் வகுப்புவரைப் படிக்கும் குழந்தைகளுக்குமாகப் பிரிக்கப்பட்டிருந்தது.

பார்க்கர் மிகவும் உற்சாகமாக இருந்தான். ஏனென்றால் மிதிவண்டியைப் பெற இது ஒரு நல்ல வாய்ப்பு. அவனுடைய அண்ணன் மிகக் குறைந்த விலைக்கு ஒரு ஊதா வண்ணம் மிதிவண்டியை வாங்கியிருந்தான். அதைப் பார்த்துப் பார்த்துச் சலிப்புற்றான். தனக்குச் சொந்தமாக மிதிவண்டி வேண்டும் என்ற நோக்கத்துடன் நிறைய புத்தகங்களை வேகமாக படிக்க ஆரம்பித்தான். “கியூரியஸ் ஜார்ஜ்”, “கிரீன் எக்ஸ் அண்ட் ஹேம்”, “ப்ரௌன் பேர்” போன்ற புத்தகங்களைப் படித்தான். அப்படியும் அவனுடைய பிரிவில் வேறு யாரேனும் அதிகப் புத்தகங்கள் படித்து இருந்தனர்.

இதற்கிடையில், ஜேரனின் ஆர்வம் சற்றுக் குறைவாகத்தான் இருந்தது. கடைக்கு சென்று வாசகர் தொகையின் எண்ணிக்கையைப் பார்க்கும் பொழுது, தன் சகோதரன் ஜெயிப்பதற்கு மிகக் குறைவான வாய்ப்பு உள்ளது என்று அறிந்தான். கிறிஸ்துமஸ் பண்டிகையின் முக்கியத்துவம் – மற்றவர்களுக்குக் கொடுப்பதில் கிடைக்கும் இன்பம் என்பதைப் புரிந்துக் கொண்டு தன் தம்பிக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று தீர்மானித்தான். தனக்கு வேண்டியதை நிறைவேற்ற முடியாததைத் தம்பிக்காக செய்ய வேண்டும் என்று உறுதியாக இருந்தான். தன் மிதிவண்டியை ஓரமாக வைத்துவிட்டு நூலகத்திற்கு அட்டைச் சீட்டை எடுத்துக் கொண்டுச் சென்றான். ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் படித்தான். தம்பிக்கு வென்றுக் கொடுக்க இருக்கும் பரிசை எண்ணி உற்சாகமாகப் புத்தகங்களைப் படிக்கத் துவங்கினான்.

முடிவுகளை அறிவிக்கும் நாளும் வந்தது. ஜேரனின் தாயார் அவனைக் கடைக்கு அழைத்துச் சென்றார். பரிசளிப்பாக வைத்திருந்த வண்டிகளில், ஒரு சின்ன இருபது அங்குலச் சிவப்பு  நிற வண்டியைப்  பார்த்துக் கொண்டிருந்தான். கடைக்காரர் ஜேரனிடம், “நீ வெற்றிப் பெற்றால், இதை விடப் பெரிய வண்டியை விரும்புவாய் அல்லவா?” என கேட்டார். அதற்கு ஜேரன், “அப்படியெல்லாம் இல்லை, என் சகோதரனுக்காக இந்த வண்டியை ஜெயிக்க விரும்பிகிறேன்,” என கூறினான். கடைக்காரர் ஆச்சரியம் அடைந்து, தாயாரிடம் “இதுவரை கேட்டதிலே இதுதான் அருமையான கிறிஸ்துவக் கதை” எனக் கூறினார். தாயார் மிக்க மகிழ்ச்சி அடைந்தார். பெருமையாகவும் இருந்தது. போட்டியின் முடிவுகளுக்காகக் காத்துக் கொண்டிருந்தனர்.

இருநூற்று எண்பது புத்தகங்களைப் படித்துப் போட்டியில் ஜேரன் ஜெயித்தான். பெற்றோரின் உதவியுடன், அவன் தம்பிக்காக ஜெயித்த மிதிவண்டியைப் பாட்டி வீட்டின் அடித்தளத்தில் மறைத்துவிட்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக ஆவலுடன் காத்திருந்தான்.

கிறிஸ்துமஸ் அன்று குடும்பத்தினர் அனைவரும் பாட்டி வீட்டில் கூடினர். உலகிற்கே இயேசு நாதரைக் கொடுத்த அவரின் அப்பாவின் பெருமையை எடுத்துரைத்தார். பிறகு, தம்பியின் மேல் வைத்திருக்கும் அண்ணனின் பாசத்தைப் பற்றிச் சொன்னார். பிறகு மெதுவாக ஜேரன் தம்பிக்காக ஜெயித்த வண்டியை எடுத்துக் கொண்டு வந்தான். எவ்வளவு சந்தோஷமான ஒரு விஷயம். இரு சகோதரர்களும் ஒருவரை ஒருவர் அணைத்துக்  கொண்டனர்.

நீதி

எல்லோரிடமும் அன்பு செலுத்த வேண்டும். குடும்பத்தில் ஆரம்பித்து பிறகு நமக்குத் தெரிந்தவர்கள், மொத்தத்தில் யாருக்கு அவசியமோ அவர்களிடமெல்லாம் அன்பாக இருக்க வேண்டும். அண்ணனின் கடமை வீட்டில் மற்ற சகோதர சகோதரிகளைப் பார்த்துக் கொள்வது. சிறியவர்கள் அதற்குப் பதிலாக மரியாதையாகவும், அன்பாகவும் இருக்க வேண்டும்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

http://saibalsanskaar.wordpress.com