இயேசு கிறிஸ்து வழி நடத்தல் – அண்ணனின் பரிசு

christmas brothers

நீதிநேர்மை

உபநீதிகடமை / அக்கறை

இயேசு நாதரின் பிறந்த நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. ஒன்பது வயது ஜேரனும் அவனது ஆறு வயதுச் சகோதரன் பார்க்கரும் மிகவும் உற்சாகமாக இருந்தார்கள். வீட்டுப் பக்கத்தில் இருந்த மளிகைக் கடை, புத்தகம் வாசிக்கும் போட்டி ஒன்றுக்குப் பொறுப்பு ஏற்றுக் கொண்டிருந்தது. அதிகப் புத்தகங்கள் படிப்போர்க்கு ஒரு மிதி வண்டிப் பரிசு. இரண்டு சகோதரர்களுக்கும் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் இருந்ததால், புத்தம் புதிய வண்டியை வெல்ல அதிக வாய்ப்பு இருந்தது. அவர்களின் பெற்றோரும் ஆசிரியரும் படிக்கும் ஒவ்வொரு புத்தகத்திற்கும் கையெழுத்துப் போட வேண்டும் என்ற விதிமுறையை விதித்திருந்தனர். இரண்டு மிதிவண்டிகளைப் பரிசாகக் கொடுக்க இருந்தார்கள். முதலாம் வகுப்பிலிருந்து மூன்றாம் வகுப்புவரைப் படிக்கும் குழந்தைகளுக்கு ஒரு மிதிவண்டியும், மற்றொன்று நான்காவதிலிருந்து ஆறாம் வகுப்புவரைப் படிக்கும் குழந்தைகளுக்குமாகப் பிரிக்கப்பட்டிருந்தது.

பார்க்கர் மிகவும் உற்சாகமாக இருந்தான். ஏனென்றால் மிதிவண்டியைப் பெற இது ஒரு நல்ல வாய்ப்பு. அவனுடைய அண்ணன் மிகக் குறைந்த விலைக்கு ஒரு ஊதா வண்ணம் மிதிவண்டியை வாங்கியிருந்தான். அதைப் பார்த்துப் பார்த்துச் சலிப்புற்றான். தனக்குச் சொந்தமாக மிதிவண்டி வேண்டும் என்ற நோக்கத்துடன் நிறைய புத்தகங்களை வேகமாக படிக்க ஆரம்பித்தான். “கியூரியஸ் ஜார்ஜ்”, “கிரீன் எக்ஸ் அண்ட் ஹேம்”, “ப்ரௌன் பேர்” போன்ற புத்தகங்களைப் படித்தான். அப்படியும் அவனுடைய பிரிவில் வேறு யாரேனும் அதிகப் புத்தகங்கள் படித்து இருந்தனர்.

இதற்கிடையில், ஜேரனின் ஆர்வம் சற்றுக் குறைவாகத்தான் இருந்தது. கடைக்கு சென்று வாசகர் தொகையின் எண்ணிக்கையைப் பார்க்கும் பொழுது, தன் சகோதரன் ஜெயிப்பதற்கு மிகக் குறைவான வாய்ப்பு உள்ளது என்று அறிந்தான். கிறிஸ்துமஸ் பண்டிகையின் முக்கியத்துவம் – மற்றவர்களுக்குக் கொடுப்பதில் கிடைக்கும் இன்பம் என்பதைப் புரிந்துக் கொண்டு தன் தம்பிக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று தீர்மானித்தான். தனக்கு வேண்டியதை நிறைவேற்ற முடியாததைத் தம்பிக்காக செய்ய வேண்டும் என்று உறுதியாக இருந்தான். தன் மிதிவண்டியை ஓரமாக வைத்துவிட்டு நூலகத்திற்கு அட்டைச் சீட்டை எடுத்துக் கொண்டுச் சென்றான். ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் படித்தான். தம்பிக்கு வென்றுக் கொடுக்க இருக்கும் பரிசை எண்ணி உற்சாகமாகப் புத்தகங்களைப் படிக்கத் துவங்கினான்.

முடிவுகளை அறிவிக்கும் நாளும் வந்தது. ஜேரனின் தாயார் அவனைக் கடைக்கு அழைத்துச் சென்றார். பரிசளிப்பாக வைத்திருந்த வண்டிகளில், ஒரு சின்ன இருபது அங்குலச் சிவப்பு  நிற வண்டியைப்  பார்த்துக் கொண்டிருந்தான். கடைக்காரர் ஜேரனிடம், “நீ வெற்றிப் பெற்றால், இதை விடப் பெரிய வண்டியை விரும்புவாய் அல்லவா?” என கேட்டார். அதற்கு ஜேரன், “அப்படியெல்லாம் இல்லை, என் சகோதரனுக்காக இந்த வண்டியை ஜெயிக்க விரும்பிகிறேன்,” என கூறினான். கடைக்காரர் ஆச்சரியம் அடைந்து, தாயாரிடம் “இதுவரை கேட்டதிலே இதுதான் அருமையான கிறிஸ்துவக் கதை” எனக் கூறினார். தாயார் மிக்க மகிழ்ச்சி அடைந்தார். பெருமையாகவும் இருந்தது. போட்டியின் முடிவுகளுக்காகக் காத்துக் கொண்டிருந்தனர்.

இருநூற்று எண்பது புத்தகங்களைப் படித்துப் போட்டியில் ஜேரன் ஜெயித்தான். பெற்றோரின் உதவியுடன், அவன் தம்பிக்காக ஜெயித்த மிதிவண்டியைப் பாட்டி வீட்டின் அடித்தளத்தில் மறைத்துவிட்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக ஆவலுடன் காத்திருந்தான்.

கிறிஸ்துமஸ் அன்று குடும்பத்தினர் அனைவரும் பாட்டி வீட்டில் கூடினர். உலகிற்கே இயேசு நாதரைக் கொடுத்த அவரின் அப்பாவின் பெருமையை எடுத்துரைத்தார். பிறகு, தம்பியின் மேல் வைத்திருக்கும் அண்ணனின் பாசத்தைப் பற்றிச் சொன்னார். பிறகு மெதுவாக ஜேரன் தம்பிக்காக ஜெயித்த வண்டியை எடுத்துக் கொண்டு வந்தான். எவ்வளவு சந்தோஷமான ஒரு விஷயம். இரு சகோதரர்களும் ஒருவரை ஒருவர் அணைத்துக்  கொண்டனர்.

நீதி

எல்லோரிடமும் அன்பு செலுத்த வேண்டும். குடும்பத்தில் ஆரம்பித்து பிறகு நமக்குத் தெரிந்தவர்கள், மொத்தத்தில் யாருக்கு அவசியமோ அவர்களிடமெல்லாம் அன்பாக இருக்க வேண்டும். அண்ணனின் கடமை வீட்டில் மற்ற சகோதர சகோதரிகளைப் பார்த்துக் கொள்வது. சிறியவர்கள் அதற்குப் பதிலாக மரியாதையாகவும், அன்பாகவும் இருக்க வேண்டும்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

http://saibalsanskaar.wordpress.com

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s