சுய கண்டனமும் ஆணவமே

self condemnation is ego Krishna with gopikas

நீதி – தன்னம்பிக்கை 

உபநீதி – மனப்போக்கு  

துவாரகாபுரியில் ஒரு முறை ஸ்ரீ கிருஷ்ணா கடுமையான தலைவலி வந்தது போல் நாடகமாடினார். தன் பாத்திரத்தை மிகச் சிறப்பாகவே செய்ய முற்பட்டார். வெந்நீரில் நனைத்த துண்டைத் தலையில் கட்டிக் கொண்டுபடுக்கையில் உருளலானார். கண்கள் சிவந்து, முகம் வீங்கி விட்டது. அவருடைய மனைவியர் ருக்மிணி, சத்யபாமா மற்றும் அரசிகள் அனைவரும் அவரைச் சூழ்ந்து கொண்டு தன்னாலான சிகிச்சைகளைச் செய்யலானார்கள். ஒன்றுமே பயன் அளிக்கவில்லை. ஆதலால் அவர்கள் நாரதமுனியிடம் முறையிட்டனர். நாரதர் தானே சென்று ஸ்ரீ கிருஷ்ணரைச் சந்தித்து என்ன பிரச்சனை என்றும், சிகிச்சை முறைகளையும் தெரிந்து கொண்டு அவரைக் குணப் படுத்த விரும்பினார். ஸ்ரீ கிருஷணர் சொன்ன வார்த்தைகள் என்ன தெரியுமா??

ஸ்ரீ கிருஷ்ணர் நாரதரைச் சிறந்த பக்தரின் பாத தூசியைக் கொண்டு வரச் சொன்னார். நாரதர் உடனடியாக பக்தர்களிடம் சென்று விளம்பரப் படுத்தினார். ஆனால் பக்தர்கள் தங்களைத் தாழ்வுப் படுத்திக் கொண்டு கடவுளுக்குச் சிகிச்சையாகப் பாத தூசியைத் தரத் தயங்கினர்.

இதுவும் ஒரு வகை ஆணவமே. “நான் தாழ்ந்தவன், சிறியவன், உபயோகமில்லாதவன், ஏழை, பாவி”–இந்த எண்ணங்கள் யாவும் ஆணவத்தைக் குறிக்கும். தாழ்வு மனப்பான்மையோ, கர்வமுள்ள மனப்பான்மையோ – இரண்டுமே நல்லதில்லை.

யாருமே பாத தூசி தர முன் வரவில்லை. நாரத முனி இதைக் கேட்டு ஏமாற்றமடைந்து துவாரகை திரும்பி வந்தார்.  பிறகு ஸ்ரீ கிருஷ்ணர் அவரிடம் பிருந்தாவனம் சென்று கோபிகைகளைக் கேட்குமாறுசொன்னார். இதைக் கேட்டு அரசிகள் சிரித்தார்கள். நாரதரும் திடுக்கிட்டு, “அவர்களுக்கு பக்தியைப் பற்றி என்ன தெரியும்?” என்றார். இருப்பினும் கோபிகளிடம் விரைந்தார். நாரதர் சொன்னதைக் கேட்ட கோபியர், தன் பாத தூசியால் கடவுளின் நோய் குணமாகும் என்றதும் ஒரு சிறு கணம் கூட யோசிக்காமல் தன் கால்களைத் தட்டி தூசியைக் கூட்டி நாரதரின் கைகளில் கொடுத்தனர்.

நாரதர் துவாரகை வந்தடையும் சமயம் ஸ்ரீ கிருஷ்ணர் பூரண குணமடைந்திருந்தார். இது வெறும் ஐந்து நாட்களுக்காக நடத்தின நாடகமே. சுய கண்டனமும் ஆணவமே என்ற படிப்பினைக் கொடுத்து, கடவுளின் ஆணையைச் சந்தேகப் படாமல் பணிவுடன் செய்ய வேண்டும்என்பதனையும் கற்றுக் கொடுத்தார்.

நீதி:

ஒருவன் செயல்களைச் செய்யும் போது “தான்” என்ற எண்ணமே வரக்கூடாது. அது நம் தினசரி கடமை. அதன் விளைவுகள் நம் கையில் இல்லை. செய்யும் கடமைகளை நம்மால் முடிந்தவரை நாணயமாக செய்ய வேண்டும். இவ்வாறு நாம் செய்து, கடவுளுக்கு அர்ப்பணித்தால், ஆணவம் விலகி, ஆன்மீக வழியில் உயர்வோம்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

http://saibalsanskaar.wordpress.com

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s