நீதி – நன்னம்பிக்கை
உபநீதி – உறுதியான மனப்பான்மை
இந்த கற்பனைக் கதையில் உழவர் ஒருவன் தான் சொந்தமாக வைத்திருந்த வயதான கோவேறுக் கழுதையைப் பற்றிச் சொல்லப்படுகின்றது. ஒரு நாள் கழுதை உழவரின் கிணற்றில் விழுந்துவிட்டது. உடனே அதன் கனைப்புச் சத்தம் உழவரின் காதில் விழுந்தது. சூழ்நிலையைத் தோராயமாக மதிப்பீடு செய்த பிறகு, கழுதையை நினைத்துப் பரிதாபப்பட்டார். ஆனால் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றவில்லை. அவசியமாகவும் படவில்லை. அண்டையர்கள் எல்லோரையும் அழைத்து அவர்களிடம் நடந்ததைச் சொல்லி, கிணற்றிலேயே கழுதையை புதைக்கச் சொல்லி இந்த கஷ்டத்திலிருந்து அவனை விடுவிக்குமாறு கேட்டார்.
முதலில் கழுதை மிரண்டு பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தது. உழவரும் அங்கு இருந்தவர்கள் எல்லோரும் மண்ணை வாரி கழுதை மேல் போட்டுக் கொண்டிருக்கும் பொழுது, அதற்கு ஒரு யோசனை தோன்றியது. என்னவென்றால், மண் விழுந்தவுடன் அதை உதறிவிட்டு எழுந்து நின்று கொள்வது தான். தன்னை மேலும் உற்சாகப் படுத்திக்கொண்டு, எவ்வளவு கஷ்டமாக சூழ்நிலை இருந்தாலும், தொடர்ச்சியாக அப்படிச் செய்து வந்தது. கொஞ்ச நேரம் சென்ற பிறகு, அடி வாங்கி சோர்வாக இருந்தாலும், வெற்றிகரமாக கிணற்றின் வெளியே வந்தது.
கழுதையைப் புதைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அதன் மேல் போட்ட மண் அதற்கு பாக்கியமாக மாறிவிட்டது.
நீதி:
கஷ்டங்கள் வரும் பொழுது பதட்டப் படாமல் உறுதியாக செயல்பட வேண்டும். பரிதாபப்படுவதற்கு பதிலாக இன்னல்களை சுகங்களாக மாற்றுவதற்கு வழிகள் தேட வேண்டும். துன்பம் வரும் போது, அந்த அனுபவத்திலிருந்து ஏதாவது கற்றுக் கொள்ளலாம். இல்லையென்றால், சூழ்நிலையை மாற்றி விடலாம்.