Archive | May 2015

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

happiness comes from within picture one

புத்த சமயத்தை சேர்ந்த ஜப்பானிய துறவி ஒருவர், ஒரு கிராமத்திற்குச் சென்றார். கிராம வாசிகள் அவரை சூழ்ந்து கொண்டு தங்களின் கோரிக்கைகளை தெரிவித்த படி எப்படியாவது தங்கள் பிரச்சனைகளை தீர்த்து வைக்குமாறு கெஞ்சினர். கவலைகள் தீர்ந்தால் வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும் என்று துறவியிடம் கூறினர்.

துறவி அவர்களின் வேண்டுக்கோளை கேட்டுவிட்டு சற்று நேரம் மெளனமாக இருந்தார். மறுநாள் அனைத்து கிராமவாசிகளுக்கும் கேட்கும்படியான ஒரு தெய்வீகக் குரல் ஒலித்தது. அது யாதெனில்——“நாளை மதியம் ஒரு அதிசயம் இக்கிராமத்தில் நடைபெற உள்ளது. உங்கள் பிரச்சனைகள் அனைத்தையும் ஒரு கற்பனை சாக்குப் பையில் அடைத்து, ஊர் நதிக்கரையைத் தாண்டி மறுபுறம் விட்டுவிட்டு, அதே பையில் அவரவர்களுக்கு வேண்டியதை கொண்டு வரலாம், அதாவது தங்கமோ,  வெள்ளியோ,  உணவோ,  பொருளோ எது வேண்டுமானாலும் இருக்கலாம். அவ்வாறு செய்தால் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறும்.”

இந்த தெய்வீகக் குரல் உண்மையாக இருக்குமா என்ற சந்தேகம் கிராம வாசிகளுக்கு ஏற்பட்டது.  எனினும், குரலுக்கு கட்டுப்பட்டு நஷ்டம் ஏதும் வராது என்ற நம்பிக்கையுடன், குரலின் சொற்படி நடந்து கொள்ள தீர்மானித்தனர். உண்மையாக இருந்தால் கோரிக்கைகள் நிறைவேறும்; இல்லாவிட்டால் நஷ்டம் ஒன்றுமில்லை என்று கிராமத்தினர் நினைத்தார்கள்.

happiness comes from within picture 2 sack

மறுநாள் மதியம், அனைவரும் கற்பனைப் பைகளில் நிரப்பிய கஷ்டங்களை நதியின் மறு கரையில் வைத்துவிட்டு, வேண்டியவற்றை அதே மாதிரி கற்பனையாக நிரப்பி வந்தனர். அவர்கள் திரும்பி வந்ததும் மிகவும் ஆச்சரியம் அடைந்தனர்; ஏனெனில், தெய்வீகக் குரலின் படி, அவரவர் கேட்டது அவரவருக்கு கிடைத்தது. அவர்களின் இன்பத்திற்கு எல்லையே இல்லை.

ஐயோ பரிதாபம்!!! இந்த மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை. மற்றவர்களுடன் தங்களை ஒப்பிட்டு, அவர்களுக்கு நன்றாக கிடைத்துள்ளதாகவும், தங்களுக்கு அவ்வாறு கிடைக்கவில்லையே என்று வருந்தினர்.

“நான் ஒரு சாதாரண சங்கிலி கேட்டேன், ஆனால் அடுத்த வீட்டுப் பெண் தங்க ஆபரணம் கேட்டு அவளுக்கு கிடைத்து விட்டது. நான் ஒரு வீடு கேட்டேன்; ஆனால் எதிர் வீட்டு மனிதன் ஒரு அரண்மனையைக் கேட்டு அவனுக்கு அது கிடைத்து விட்டது. நாமும் அப்படிப் பட்ட விஷயங்களைக் கேட்டிருக்க வேண்டும். இப்படி ஒரு பொன்னான வாய்ப்பை நழுவ விட்டு விட்டோமே!” என்று யோசித்தனர்.

இப்படிப்பட்ட எண்ணங்களுடன் மறுபடியும் கிராம வாசிகள் துறவியிடம் சென்று தங்கள் பிரச்சனைகளை வெளிப்படுத்தினர். மறுபடியும் ஏமாற்றத்துடனும், மனக் குறைவுகளுடனும் வாழ ஆரம்பித்தனர்.

நீதி:

பிரச்சனைகள் இருந்தால் சந்தோஷம் இருக்காது என்று பலர் நினைக்கிறார்கள். இரண்டையும் ஒன்றோடு ஒன்று தொடர்பு படுத்தக் கூடாது. வாழ்க்கையில் துன்பங்கள் நிறைந்திருக்கும். அவற்றை ஒரு புறம் ஒதுக்கிவிட்டு, இன்பமாக இருப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டாம் என்பது நோக்கம் இல்லை.

happiness comes from within picture 3 krishnarபகவான் கிருஷ்ணருக்கு இல்லாத பிரச்சனைகளா?? அவருடைய தாய் மாமன் கம்சன், கிருஷ்ணர் பிறப்பதற்கு முன்பே அவரை கொல்ல எண்ணினான். பாரத போரில் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு சாரதியாக இருந்தார். அர்ஜுனன் அவருக்கு கொடுத்த பிரச்சனைகள் கொஞ்சமா? கடைசி நிமிடத்தில் அஸ்த்ரங்களை கீழே போட்டுவிட்டு யுத்தத்தில் போராட மறுத்தார். குருக்ஷேத்ரத்தில் ஒவ்வொரு நாளும் பல வித பிரச்சனைகள். அர்ஜுனன் மீது தொடுக்கப்பட்ட ஒவ்வொரு அம்பும் கிருஷ்ணரை வந்தடைந்தன. ஆனாலும் அவர் புன்சிரிப்போடு தென்பட்டார்.

பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில் சொல்லியிருப்பது என்னவென்றால்—-“சுகம், துக்கம் இரண்டையுமே  சமமாக கருத வேண்டும். நாணயத்தின் இரு பக்கங்கள் அவை. அதிலிருந்து இருக்கும் நன்மைகளை புரிந்து கொண்டால் சமாதானம் கிடைக்கும். அந்த சமாதானம் பேரானந்தத்தை கொடுக்கும்.

ஒவ்வொருவரின் மனப்பான்மை தான் முக்கியம். சந்தோஷம் என்பது உள்ளுணர்விலிருந்து பிரதிபலிக்கும் உணர்வு.

மொழி பெயர்ப்பு: 

சரஸ்வதிரஞ்சனி

Source:

 http://saibalsanskaar.wordpress.com

மனிதாபிமானம் – மிக சிறந்த பண்பு

Three reaces to save humanity


ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

நீதி – அன்பு / கருணை / ஒற்றுமை 

உப நீதி – அக்கறை / பரிவு 

பண்டைய காலத்தில், வெற்றிகரமாக திகழ வேண்டும் என்ற குறிக்கோளுடன் ஒரு விளையாட்டு வீரர் இருந்தான். வெற்றியே வாழ்க்கையில் முக்கியம் என்று கருதினான்.

ஒரு முறை அந்த இளைஞன் அவன் கிராமத்தில் ஏற்பாடு செய்த ஒரு ஓட்ட பந்தயத்தில் கலந்து கொண்டான். அவனுடன் இரண்டு இளைஞThree reaces to save humanity3.JPG.pngர்களும் ஓடினர். மக்கள் பெரும் கூட்டமாக வந்து அவர்களை உற்சாகப் படுத்தினர். புத்தி கூர்மை உள்ள ஒரு முதியவர்  நீதிபதியாக இருந்தார்.  பந்தயம் ஆரம்பித்தது. தன் திறமை, ஆர்வம் முதலியவற்றை பயன்படுத்திக் கொண்டு இளைஞன் வெற்றிகரமாக திகழ்ந்தான். கூட்டம் கை தட்டி பாராட்டினர். ஆனால் நீதிபதி அமைதியாக உட்கார்ந்திருந்தார். இளைஞன் மிகவும் கர்வமாக இருந்தான்.

இரண்டாவது முறையாக  போட்டி நடந்தது. இம்முறை இரண்டு தகுதி பெற்ற போட்டியாளர்கள் பங்கு பெற்றன. மறுபடியும் இளைஞன் வெற்றி பெற்றான். நீதிபதி எந்த உணர்ச்சியையும் காட்டவில்லை. ஆனால் மக்கள் கூச்சலிட்டு மகிழ்ந்தனர். இளைஞன் ஆணவத்துடன் மற்றுமொரு பந்தயத்தில் பங்கேற்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஆர்வம் காண்பித்தான்.

இம்முறை நீதிபதி பந்தயத்திற்கு ஒரு பார்வையற்றவரையும், பலவீனமான ஒரு பெண்மணியையும் போட்டியில் கலந்து கொள்ள கூறினார். இது பந்தயம் ஆகாது என்று இளைஞன் தன் கருத்தை தெரிவித்தான். ஆனால் நீதிபதி அவனை பந்தயத்தில் கலந்து கொள்ள உத்தரவிட்டார். வழக்கம் போல இளைஞன் வெற்றிக் கோட்டை தாண்டிவிட்டு கர்வத்துடன் திரும்பி பார்த்தான். மற்ற இருவரும் பந்தயம் ஆரம்பம் ஆன இடத்திலேயே இருந்தார்கள். கூட்டமும் மெளனமாக பார்த்துக் கொண்டிருந்தது.

Three reaces to save humanity2.JPGமக்கள் மெளனமாக இருப்பதைக் கண்டு இளைஞன் ஆச்சரியப்பட்டான். நீதிபதி “அவர்களை கூட அழைத்து செல்” என்று கோரிக்கை விடுத்தார். ஒரு வினாடி ஆலோசனைக்கு பிறகு, இருவருக்கும் நடுவில் நின்று அவர்களின் கைகளை பிடித்து கொண்டு மெதுவாக நடந்தான். மூவரும் ஒன்றாக வெற்றிக் கோட்டினை அடைந்தனர். கூட்டத்தின் அளவில்லா கரகோஷம் கேட்டது. நீதிபதி புன்னகையுடன் தலையை அசைத்தார். இளைஞன் பெருமையுடன், “மூவரில் யாருக்காக கூட்டம் ஆதரவு கொடுக்கின்றது?”  என்று கேட்ட பொழுது,  நீதிபதி அவன் கண்களை உற்று நோக்கி, “இந்த பந்தயம் தான் வெற்றியின் அறிகுறி” என்றார். கூட்டம்Three reaces to save humanity4.JPG.png ஒருவருக்காக இல்லை, மூவருக்கும் சேர்ந்து கை தட்டினர்” என கூறினார்.

மனித இனத்தில் அனைவரும்  நான் என்ற மனப்பான்மையிலிருந்து சமூகத்திற்காக செயல் பட வேண்டும். எல்லோரிடமும் அன்பாக இருக்க தெரிந்து கொள்ள வேண்டும். இந்த மாற்றம் தான் மிக முக்கியம்.

நீதி:

நமது வெற்றி நல்லது. அனால் எல்லோரும் சேர்ந்து வெற்றி பெறுவதில் தான் உண்மையான சந்தோஷம்.

உலகத்தில் ஒற்றுமையை விட வேற்றுமை இருக்கும் காரணம்  மனிதன் தன்னையே புரிந்து கொள்ளாததால் தான் – ரால்ப் வால்டோ எமெர்சன்.

மொழி பெயர்ப்பு: 

சரஸ்வதிரஞ்சனி

SOURCE:

http://www.ezsoftech.com/stories/humanity.moral.stories.asp

வளர்ச்சிக்கு முக்கியமானது மனப்பான்மை

who you are makes a difference

நீதி – அன்பு / குரு பக்தி

உபநீதி – கருணை

ஐந்தாவது வகுப்பின் முதல் நாளன்று ஆசிரியை கௌரி எல்லாக் குழந்தைகள் மேலும் ஒரே மாதிரியான அன்பை வைத்திருப்பதாகக் கூறினார். அது சாத்தியம் இல்லாதது; ஏனெனில் முதல் வரிசையில் தினேஷ் என்னும் ஒரு சிறுவன் சோகமாக உட்கார்ந்திருந்தான்.

இச்சிறுவனின் மூன்றாவது வகுப்பு ஆசிரியை, “தினேஷின் தாயார் மரணம் அடைந்ததால் மிகவும் வருத்தமாக இருக்கிறான். அவனின் தந்தையும் அக்கறையுடன் கவனிப்பு செலுத்துவதில்லை. நடவடிக்கை ஒன்றும் எடுக்காமல் போனால் அவன் வாழ்வு பாதிக்கப்படும்” என ஒரு குறிப்பு எழுதியிருந்தார்.

நான்காவது வகுப்பு ஆசிரியை, “தனிமையாக இருக்கிறான். பாடங்களில் கவனம் செலுத்துவதில்லை. அவனுக்கு நண்பர்கள் யாரும் இல்லை. வகுப்பில் தூங்குகிறான்” என கருத்து தெரிவித்தார்.

இப்பொழுது திருமதி. கௌரி பிரச்சனையை புரிந்து கொண்டார். இச்சிறுவனிடம் தனியாக கவனம் செலுத்த வேண்டும் என புரிந்து கொண்டார். அனைத்துக் குழந்தைகளும் விலை உயர்ந்த பரிசுகளை கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு கொடுத்தனர். தினேஷ் சில கற்கள் விழுந்த ஒரு வளையலையும், கால்வாசி நிரம்பிய சென்ட் பாட்டிலையும், ஒரு சாதாரணமான காகிதத்தில் சுற்றி ஆசிரியைக்கு பரிசாக கொடுத்தான். இதைக் கண்டு எல்லோரும் ஏளனமாக சிரித்தனர்; ஆனால் ஆசிரியை எல்லோரிடமும் சமாதானமாக பேசிவிட்டு,  தினேஷின் பரிசு மிகவும் அழகாக இருக்கிறது என்று கூறினார். பிறகு, அந்த வளையலை அணிந்துக் கொண்டு, பாட்டிலிலிருந்து நறுமணத்தை சிறிது உபயோகித்தார். தினேஷிடம் அவர் ஆசையாக உரையாடினார்.

மற்ற மாணவர்கள் எல்லோரும் வீடு திரும்பி விட்டார்கள். தினேஷ் ஆசிரியையிடம் “என் தாயாரின் ஞாபகமாக இருக்கிறது. இந்த நறுமணம் அம்மாவை நினைவூட்டுகிறது” என்று கூறியவுடன் ஆசிரியை கண் கலங்கினார்.

அன்றிலிருந்து குழந்தைகளுக்கு நுணுக்கமாக பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதையே ஆசிரியர் லட்சியமாக எடுத்துக் கொண்டார். சிறுவன் தினேஷின் மீது அவர் அதிகம் கவனம் செலுத்தினார். அவன் சற்று உற்சாகமாக இருப்பதை கண்டு ஆசிரியர் மகிழ்ச்சியுற்றார். ஆசிரியரின் அன்பு கிடைத்தவுடன் அவன் நன்றாக படிக்க ஆரம்பித்தான். வகுப்பிலேயே சிறந்த மாணவனாக அவன் திகழ்ந்தான்; ஆசிரியைக்கு மிக பிடித்த மாணவனாகவும் மாறினான்.

ஒரு வருடத்திற்கு பிறகு, ஆசிரியை தன் வீட்டின் கதவடியில் ஒரு குறிப்பை கண்டார் –  “என் வாழ்க்கையிலே மிகவும் சிறந்த ஆசிரியை தாங்கள் தான்”.

ஆறு வருடங்களுக்குப் பிறகு மற்றொரு கடிதம் வந்தது. அதில் கல்லூரி படிப்பு முடித்ததாகவும், வகுப்பில் மூன்றாவது இடத்தை பெற்றிருப்பதாகவும், அவன்  குறிப்பிட்டிருந்தான். மேலும் அவனுக்கு பிடித்த ஆசிரியை திருமதி. கௌரி தான் என்று எழுதியிருந்தான்.

அதற்குப் பிறகு, நான்கு வருடங்களுக்கு பின்பு ஒரு கடிதம் வந்தது. பல்கலைக்கழகத்தில் அதிகமான பிரச்சனைகள் இருந்தாலும் கூட, வெற்றிகரமாக படிப்பை முடிக்க போவதாகவும், அந்த சமயத்திலும் அவனுக்கு மிகவும் பிடித்த ஆசிரியை கௌரி தான் என்றும் அவன் உறுதிப்படுத்தி இருந்தான்.

இன்னும் நான்கு வருடங்களுக்குப் பிறகு மற்றொரு கடிதம். பட்டப்படிப்பு முடிந்து டாக்டர் பட்டம் பெற்றதாக குறிப்பிடப் பட்டிருந்தது. அந்த சமயமும் ஒரு அழகான செய்தி! திருமதி. கௌரி எனக்கு பிடித்த ஆசிரியை……..

இத்துடன் கதை முடியவில்லை. சில மாதங்களுக்குப் பிறகு, தான் ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய நினைத்திருப்பதாக அவன் எழுதியிருந்தான். இரண்டு வருடங்களுக்கு முன் அவன் தந்தை இறந்து விட்டதால், தாயார் ஸ்தானத்தில் இருந்து ஆசிரியை தான் திருமணத்தை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தான்.

ஆசிரியை சம்மதித்தார். சிறுவனாக தினேஷ் கொடுத்த வளையலை ஆசையாக அணிந்து, நறுமணத்தை தெளித்துக் கொண்டு திருமணத்திற்கு அவர் சென்றார். ஆசிரியையும் மாணவனும் ஒருவரை ஒருவர் கட்டி தழுவிக் கொண்டனர். பிறகு டாக்டர். தினேஷ், திருமதி. கெளரியிடம் காதில் சொன்ன வார்த்தைகள், “என் மேல் நம்பிக்கை வைத்து, என்னை மேம்படுத்தியதற்கு மிகவும் நன்றி. என்னிலும் ஒரு  மாறுதலை உணர வைத்தீர்கள்”.

அதற்கு திருமதி. கௌரி கண்களில் கண்ணீருடன் என்ன கூறினார் தெரியுமா? “தவறு தினேஷ், நீ தான் என்னை திருத்தி நான் யார் என உணர வைத்தாய். உன்னை பார்ப்பதற்கு முன்பு பாடம் எப்படி சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று கூட எனக்கு தெரியவில்லை” என்று கூறினார்.

நீதி:

நீங்கள் செயல்கள் செய்வதாலோ, செய்யாமல் இருப்பதாலோ, அது  மற்றவர்களின் வாழ்க்கையில் எவ்விதமான விளைவை ஏற்படுத்தும் என்று சொல்ல முடியாது. மற்றவர்களின் வாழ்க்கையில் ஒரு விளைவை ஏற்படுத்தும் வகையில் நாம் நடந்து கொள்ள வேண்டும். தேவதைகளை நம்பவும்; பிறகு மற்றவர்களுக்கு தேவதையாக இருந்து, உதவியை திருப்பவும்.

மொழி பெயர்ப்பு: 

சரஸ்வதிரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

 

 

 

 

 

 

கூடி வாழ்ந்தால் கோடி இன்பம்

நீதி – ஒற்றுமை / நன் நடத்தை 

உபநீதி – சமத்துவம் / சகிப்பு தன்மை / மரியாதை உணர்வு

Pigeon story 1

ஒரு ஊரில்,  பெரிய கோயில் கோபுரத்தில், நிறைய புறாக்கள் வாழ்ந்து வந்தன. திடீரென்று அந்த கோயிலில் திருப்பணி நடந்ததனால், அங்கு வாழ்ந்த புறாக்கள் வேறு இடம் தேடி பறந்தன.

Pigeon story 2

வழியில் ஒரு தேவாலயத்தை கண்டன, அங்கு சில புறாக்கள்  இருந்ததன. அவைகளோடு இந்த புறாக்களும் குடியேறின. சில நாட்கள் கழித்து கிறிஸ்துமஸ் பண்டிகை வந்தது. தேவாலயம் புதுப்பிக்க தயாரானது. அந்த சமயம்,  இங்கிருந்து சென்ற பறவைகளும் அங்கிருந்த பறவைகளும் வேறு இடம் தேடி பறந்தன.

Pigeon story 3பறக்கும் வழியில் ஒரு மசூதி இருந்தது. அங்கும் சில புறாக்கள் இருந்தன. அவைகளோடு இந்த புறாக்களும் குடியேறின. சில நாட்கள் கழித்து ரமலான் பண்டிகை வந்தது. வழக்கம் போல இடம் தேடி பறந்தன புறாக்கள். இப்போது மூன்று இடத்திலும் உள்ள புறாக்களும் ஒரு கோயிலில் குடியேறின.

கீழே மனிதர்கள் சண்டை போட்டு ஒருவரை ஒருவர் வெட்டி சாய்த்துக்கொண்டு இருந்தனர். ஒரு குஞ்சு புறா தாய் புறாவை கேட்டது, “ஏன் இவர்கள் சண்டை போடுகிறார்கள்?”. அதற்கு அந்த தாய் புறா சொன்னது “நாம் இங்கு இருக்கும் பொழுதும் புறா தான், தேவாலயம் போன பொழுதும் புறா தான், மசூதிக்கு போன பொழுதும் புறா தான்,  ஆனால் மனிதன் கோயிலுக்கு போனால் “இந்து”. தேவாலயம் போனால் “கிறிஸ்த்தவன்”, மசூதிக்கு போனால் “முஸ்லிம்””.

Pigeon story 5

குழம்பிய குட்டி புறா “அது எப்படி நாம் எங்கு போனாலும் புறாதானே அதுபோல தானே மனிதர்களும்” என்றது. அதற்கு தாய் புறா, “இது புரிந்ததனால் தான் நாம் மேலே இருக்கிறோம், இவர்கள் கீழே இருக்கிறார்கள் என்றது”.

நீதி:

மனிதர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், எல்லோரும் சமம் என்ற உள்ளுணர்ச்சி இருக்க வேண்டும். புறாக்களிடம் இருக்கும் ஒற்றுமை குணமும், வேறுபாடு இல்லாமல் எல்லோரையும் ஒன்றாக கருதும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். கடவுள் எல்லோர் மனதிலும் நிறைந்துள்ளார். எம்மதமும் சம்மதம் என்ற உணர்ச்சியுடன் வாழ வேண்டும்.

மனிதனுக்கு மதம் பிடித்திருக்கிறது, அதனால் அவனுக்கு மதம் பிடித்திருக்கிறது

நூறு தந்திரங்கள்

நூறு தந்திரங்கள்

நீதி: சாதுரியம்

உபநீதி: தெளிவு

நரி பூனையிடம் தற்பெருமையாக பேசிக்கொண்டிருந்தது. “எனக்கு பகைவர்களிடமிருந்து தப்பிக்க நூறு தந்திரங்கள் தெரியும். உனக்கு எப்படி?” என்று கேட்டது.

“எனக்கு ஒரே ஒரு தந்திரம் தான் தெரியும்” என்றது பூனை.

அப்பொழுது பெரிதாக சத்தம் கேட்டது. ஒநாய்களும், வேடர்களும் துரத்தி வரும் இரைச்சல் கேட்டது. பூனை லபக்கென்று மரத்தில் பாய்ந்து உச்சாணியில் ஏறிக்கொண்டது.

நரிக்கு தன் நூறு தந்திரங்களில் எந்தத் தந்திரத்தைப் பயன்படுத்துவது என்ற குழப்பம்.  அந்த யோசனையில் காலதாமதமாகி மாட்டிக்கொண்டு உயிர் துறந்தது.

நீதி: சந்தேகமாக இருக்கும் நூறு வழிகளைவிட ஆற்றல் வாய்ந்த ஒரு வழியே மேல்.

 

Source: http://avinashikidsworld.blogspot.in/2013/03/blog-post_27.html