வளர்ச்சிக்கு முக்கியமானது மனப்பான்மை

who you are makes a difference

நீதி – அன்பு / குரு பக்தி

உபநீதி – கருணை

ஐந்தாவது வகுப்பின் முதல் நாளன்று ஆசிரியை கௌரி எல்லாக் குழந்தைகள் மேலும் ஒரே மாதிரியான அன்பை வைத்திருந்ததாகக் கூறினார். ஆனால் முதல் வரிசையில்,   தினேஷ் என்னும் ஒரு சிறுவன் சோகமாக உட்கார்ந்திருந்தான்.

இச்சிறுவனின் மூன்றாவது வகுப்பு ஆசிரியை, “தினேஷின் தாயார் மரணம் அடைந்ததால் மிகவும் வருத்தமாக இருக்கிறான். அவனின் தந்தையும் அக்கறையுடன் கவனிப்பு செலுத்தவில்லை. நடவடிக்கை ஒன்றும் எடுக்காமல் போனால் அவன் வாழ்வு பாதிக்கப்படும்”  என ஒரு குறிப்பு எழுதியிருந்தார்.

நான்காவது வகுப்பு ஆசிரியை, “தனிமையாக இருக்கிறான். பாடங்களில் கவனம் செலுத்துவதில்லை. அவனுக்கு நண்பர்கள் யாரும் இல்லை. வகுப்பில் தூங்குகிறான்” எனக் கருத்து தெரிவித்தார்.

இப்பொழுது திருமதி. கௌரி பிரச்சனையைப் புரிந்து கொண்டு, இச்சிறுவன் மீது  தனியாக கவனம் செலுத்த வேண்டும்  என்று நினைத்தாள்.

அனைத்துக் குழந்தைகளும் விலை உயர்ந்த பரிசுகளை கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு கொடுத்தனர். ஆனால் தினேஷ் சில கற்கள் விழுந்த ஒரு வளையலையும், கால்வாசி நிரம்பிய சென்ட் பாட்டிலையும், ஒரு சாதாரணமான காகிதத்தில் சுற்றி ஆசிரியைக்குப் பரிசாக கொடுத்தான். இதைக் கண்டு எல்லோரும் ஏளனமாக சிரித்தனர். ஆனால் ஆசிரியை எல்லோரிடமும் சமாதானமாக பேசிவிட்டு,  தினேஷின் பரிசு மிகவும் அழகாக இருக்கிறது என்று கூறினார். பிறகு, அந்த வளையலை அணிந்துக் கொண்டு, கொஞ்சம் பாட்டிலிலிருந்து சென்ட்டை உபயோகித்தார்; தினேஷிடம் ஆசையாக உரையாடினார். மற்ற மாணவர்கள் எல்லோரும் வீடு திரும்பி விட்டார்கள். தினேஷ் ஆசிரியையிடம், “என் தாயாரின் ஞாபகமாக இருக்கிறது. இந்த நறுமணம் அம்மாவை நினைவூட்டுகிறது” என்று சொன்னவுடன் ஆசிரியை கண் கலங்கினார்.

அன்றிலிருந்து ஆசிரியர் குழந்தைகளுக்கு நுணுக்கமாக பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதையே லட்சியமாக எடுத்துக் கொண்டார்; சிறுவன் தினேஷின் மீது அதிக கவனம் செலுத்தினார். அவன் சற்று உற்சாகமாக இருப்பதைக் கண்டு ஆசிரியர் மகிழ்ச்சியுற்றார். அன்பு கிடைத்தவுடன் தினேஷ் நன்றாகப் படிக்க ஆரம்பித்தான். வகுப்பிலேயே சிறந்த மாணவனாக திகழ்ந்து ஆசிரியைக்கு மிக பிடித்த மாணவனாகவும் மாறினான்.

ஒரு வருடத்திற்கு பிறகு, ஆசிரியை தன் வீட்டின் கதவடியில் ஒரு குறிப்பைக் கண்டார் –  “என் வாழ்க்கையிலே மிகவும் சிறந்த ஆசிரியை தாங்கள் தான்”.

ஆறு வருடங்களுக்குப் பிறகு மற்றொரு கடிதம் வந்தது. அதில் கல்லூரி படிப்பை முடித்ததாகவும் வகுப்பில் மூன்றாவது இடத்தைப் பெற்றிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தான். மேலும் அவனுக்கு பிடித்த ஆசிரியை திருமதி கௌரி தான் என்று எழுதியிருந்தான்.

நான்கு வருடங்களுக்கு பின்பு ஒரு கடிதம் வந்தது. பல்கலைக்கழகத்தில் அதிகமான பிரச்சனைகள் இருந்தாலும் கூட வெற்றிகரமாக படிப்பை முடிக்கப் போவதாகவும், அந்த சமயத்திலும் அவனுக்கு மிகவும் பிடித்த ஆசிரியை கௌரி தான் என்று தினேஷ்  உறுதிப்படுத்தி இருந்தான்.

இன்னும் நான்கு வருடங்களுக்குப் பிறகு மற்றொரு கடிதம். பட்டப்படிப்பு முடிந்து டாக்டர் பட்டம் பெற்றதாக குறிப்பிடப் பட்டிருந்தது. அந்த சமயமும் ஒரு அழகான செய்தி! “திருமதி கௌரி எனக்கு பிடித்த ஆசிரியை” என்று தினேஷ் எழுதியிருந்தான்.

இத்துடன் கதை முடியவில்லை. சில மாதங்களுக்குப் பிறகு, தான் ஒரு பெண்ணை திருமணம் செய்ய நினைத்திருப்பதாக தினேஷ் எழுதியிருந்தான். இரண்டு வருடங்களுக்கு முன் அவன் தந்தை இறந்து விட்டதால், தாயார் ஸ்தானத்தில் இருந்து ஆசிரியை தான் திருமணத்தை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தான்.

ஆசிரியை சம்மதித்தார். சிறுவனாக தினேஷ் கொடுத்த வளையலை ஆசையாக அணிந்து, சென்ட்டை தெளித்துக் கொண்டு திருமணத்திற்கு சென்றார். ஆசிரியையும் மாணவனும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொண்டனர். பிறகு டாக்டர் தினேஷ், திருமதி கெளரியின் காதில் சொன்ன வார்த்தைகள், “என் மேல் நம்பிக்கை வைத்து, என்னை மேம்படுத்தியதற்கு மிகவும் நன்றி. என்னிலும்  ஒரு  மாறுதலை உணர வைத்தீர்கள்”.

அதற்கு திருமதி கௌரி கண்களில் கண்ணீருடன் என்ன கூறினார் தெரியுமா – “தவறு தினேஷ், நீ தான் என்னை திருத்தி நான் யார் என உணர வைத்தாய். உன்னைப் பார்ப்பதற்கு முன்பு பாடம் எப்படி சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று கூட  எனக்கு  தெரியவில்லை” என்று கூறினார்.

நீதி:

நம் செயல்களால் மற்றவர்களின் வாழ்க்கை முறையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்ய வேண்டும். எந்த வேலையாக இருந்தாலும், நேர்மையாகவும், மன திருப்தியுடனும் செய்ய வேண்டும். அதனால், மற்றவர்கள் பயன் அடைந்தால் மிகவும்  நல்லது. நாம் யார் என்பது நம் செயல்களால் தீர்மானிக்கப் படும்.

மொழி பெயர்ப்பு: 

சரஸ்வதிரஞ்சனி

 

Source : http://www.ezsoftech.com/stories/making.a.difference.moral.stories.asp#difference

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s