Archive | October 2015

இலட்சியமும் பயணமும்

journey is as important as destination picture 1

நீதி – பக்தி /ஷ்ரத்தை

உபநீதி – எதிர்பார்ப்பு / நம்பிக்கை

முன்னொரு காலத்தில், ராஜா ஒருவர் சகல வசதிகளுடன் ஆடம்பரமாக வாழ்ந்தார். சிகப்பு ரோஜா இதழ்களால் அலங்கரிக்கப்பட்ட படுக்கையில் உறங்குவது தான் அவர் பழக்கம். ருசியான உணவு வகைகளைத் தினமும் சாப்பிடுவதோடு சௌகரியமாக வாழ்ந்து வந்தார்.

ஒரு நாள் ராஜாவும் அவருடைய அரசவையினரும் வேட்டையாடச்  சென்றனர். எல்லோரும் மகிழ்ச்சியாக நேரத்தைக் கழித்தனர். வேட்டையாடி எல்லாம் முடிந்த சமயம் பார்த்தால் இரவாகி விட்டது. வழி காட்டுவதற்குப் பொறுப்பெடுத்த ராஜா குழுவை விட்டுப் பிரிந்து தனி ஆளாகி விட்டார். இருட்டில்  மற்றவர்களெல்லாம் சென்று விட்டனர்.

ராஜாவுக்குப் பசி அதிகமாகிச் சோர்வுற்றார். இந்த எதிர்பாராத சூழ்நிலையில் மாட்டிக் கொண்டு கோபமாக இருந்தார். குதிரை மேல் சென்று கொண்டிருந்த வேளை, ஆசிரமம் ஒன்றில் பண்டிதர் ஒருவர் பிரார்த்தனை செய்து  கொண்டிருப்பதைக் கண்டார்.

ராஜா அவரிடம் சூழ்நிலையைச் சொல்லி, இராஜ்யமும், சகல வசதிகளும் தான் மீண்டும் பெறுவதற்கு ஏதாவது செய்யும்படிக் கெஞ்சினார். புன்சிரிப்போடு பண்டிதர், “நான் உனக்கு ஒரு மந்திரத்தைச் சொல்லிக் கொடுக்கின்றேன். ஒரு நெருப்பு வட்டத்திற்குள் நின்று கொண்டு நாற்பது நாட்கள் பிரார்த்தனை செய்தால், உன் இராஜ்யம் கிடைத்துவிடும்” என்று கூறினார். ராஜாவும் மந்திரத்தைக் கற்றுக் கொண்டு அவர் சொற்படி  நடந்து கொண்டார்.

நாற்பது நாட்கள் கழிந்தன. ஆனால் ஒன்றும் மாறவில்லை. ராஜா பண்டிதரை விசாரித்தார். அதற்கு அவர், “இதே பயிற்சியை நதியில் நின்று கொண்டு செய்ய வேண்டும். ஆனால் ஒரு கட்டளை!!!  தண்ணீர் ஜில்லென்று இருக்க வேண்டும். அவ்வளவுதான்” என்றார்.

மீண்டும் நாற்பது நாட்கள் கழிந்தன. ஒன்றுமே மாறவில்லை. வேதனையுடன் பண்டிதரைக் காரணம் கேட்ட பொழுது அவர் மிக அழகாக, “ஒருமுகச் சிந்தனையோடு கடவுளைத் தியானம் செய்து, அவரையே நினைத்துக் கொண்டு பிரார்த்தனை செய்ய வேண்டும். பயனை எதிர்பார்த்துச் செய்தால் காரியம் எப்படிச் சரியாக முடியும். அதனால் தான் நினைத்ததைப் பெற முடியவில்லை” என்றார்.

நீதி:

ஒரு இலட்சியத்தை அடைய வேண்டுமென்றால் அதற்கான முயற்சிகள் எடுக்க வேண்டும். இலட்சியத்திற்கு கொடுக்கும் அதே முக்கியத்துவம் பயணத்திற்கும் கொடுக்க வேண்டும்.  செயலில் ஆர்வமும், புரிதலும் தேவை. ஒருமுகச் சிந்தனையோடு, உறுதி, கடின உழைப்பு மற்றும் சரியான மனப்பான்மை இருந்தால் வெற்றி நிச்சயம்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

Advertisements

ஒரு தத்துவ பறவை

सत्सङ्गत्वे निस्सङ्गत्वं

निस्सङ्गत्वे निर्मोहत्वम् ।

निर्मोहत्वे निश्चलतत्त्वं

निश्चलतत्त्वे जीवन्मुक्तिः ॥ ९॥

நல்லோர் சேர்க்கையால் நாட்டமின்மை விளங்கும். நாட்டமின்மையால் வேட்கையின்மை அமையும். வேட்கையின்மையில் நிஷ்சலம் புரியும். நிஷ்சலம்  கொண்டே ஜீவன்முக்தி அடைவோம். (பஜ கோவிந்தம் – ஸ்லோகம்  9)

நீதி – அஹிம்சை

உப நீதி – நல்ல எண்ணங்கள்

Bird story 1ஒரு ஊரில் ராஜு என்றொரு இளைஞன் தன் நிலத்தில் விவசாயம் செய்து வந்தான். ஒரு நாள் மாலைப் பொழுதில் அரசரின் Bird story 2அரண்மனையிலிருந்து ஒரு தூதன், அரசரின் கனவுகளுக்கு விளக்கம் கொடுப்பவருக்கு நூறு பொற்காசுகள் பரிசாக வழங்கப்படும் என விளம்பரம் செய்தபடி சென்றான்.

Bird story 3ஒரு குள்ளநரி அரசரின் மடிமேல் குதித்து உட்கார தயாராகுவது போன்ற ஒரு கனவு!!! “எனக்கு மட்டும் இதற்கு அர்த்தம் தெரிந்தால் எவ்வளவு நன்றாக Bird story 4இருக்கும்” என எண்ணியபடி ராஜு நடந்து கொண்டிருந்தான். அப்பொழுது அங்கிருந்த ஒரு பறவை, “எனக்கு இதற்குப் பதில் தெரியும்; கிடைக்கும் சன்மானத்தில் பாதி தருவதாக இருந்தால் உதவுகிறேன்” என்றது. ராஜு சம்மதித்தான். “குள்ளநரி நம்பிக்கை துரோகத்தின் அடையாளம். ஆதலால் அரசர் கவனமாக இருக்க வேண்டும்” எனப் பறவை கூறியது.

Bird story 5ராஜு அரச சபையில் இப்பதிலைக் கூறி பரிசு பெற்று வந்தான். கிடைத்த பரிசின் பாதியை பறவைக்கு கொடுக்க Bird story 6மனசில்லாமல் வேறு வழியாக வீட்டை அடைந்தான். கிடைத்த பணத்தை வங்கியில் முதலீடு செய்து பணக்காரனாக ஆனான். ஐந்து வருடங்கள் கழிந்த பின் அரசரின் படைத்தலைவர் ராஜுவின் வீட்டிற்கு வந்து அவனை வெளியே அழைத்தார். அவனிடம், “அரசர் Bird story 7மறுபடியும் ஒரு கனவு கண்டார். அக்கனவில் ரத்தம் தோய்ந்த ஒரு பெரிய கத்தி அரசரின் தலையைச் சுற்றி வந்தது. அதன் விளக்கம் என்ன?” என அறிய விரும்பினார்.

ராஜு பயந்தபடி பழைய ஆலமரத்தடிக்குச் சென்று பறவையைத் தேடினான். தெரிந்த ஒரு குரல் மறுபடியும், “விளக்கம் கூறினால் Bird story 8பாதிப் பரிசை எனக்கு அளிக்க வேண்டும்” என்றது. இம்முறையும் ராஜு வாக்களித்தான். “கத்தி வன்முறையின் அறிகுறி, ஆதலால் அரசர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்” எனப் பறவை விளக்கியதை அரசரிடம் கூறி மீண்டும் பரிசைப் பெற்றான். இம்முறையும் பணத்தை பறவைக்கு கொடுக்க மனமில்லாமல் ராஜு வீட்டுக்குச் Bird story 9சென்றான். செல்லும் வழியில் ஒரு வேளை பறவை அரசரிடம் தன்னைப் பற்றி புகார் செய்து விடுமோ என எண்ணி ஒரு கல்லை  எடுத்து பறவை மீது வீசினான். Bird story 10பறவைக்கு காயம் ஒன்றும் படாமல் தப்பியது. சில வருடங்களுக்குப் பிறகு ராஜு  நடந்ததை எல்லாம்  மறந்து விட்டான்.

Bird story 11அரசருக்கு மறுபடியும் ஒரு கனவு. இம்முறை ஒரு வெள்ளைப் புறா தன் மடி மீது அமர்ந்தவாறு ஒரு காட்சி!!! “அமைதியின் அறிகுறி தான் அந்த கனவின் விளக்கம்” என்று மிக அழகாக பறவை கூறிற்று. அரசரிடம் கூறி பத்தாயிரம் பொற் காசுகள் சன்மானமாக ராஜு பெற்றான்.

இம்முறை ராஜு கிடைத்த மொத்த சன்மானத்தையும் பறவையிடம் கொடுக்கச் சென்றான். அப்பொழுது பறவையின் தோற்றமே மாறிவிட்டது. அந்த பணமும் அதற்கு தேவையில்லை என சொன்னது. ராஜு பறவையிடம் மன்னிப்பு கேட்டான். அதற்கு பறவை தெய்வீக உணர்ச்சியுடன் பதிலளித்தது. “சற்று யோசித்து பார். முதலில் நம்பிக்கை துரோகம் என்ற எண்ணம் பரவிக் கொண்டிருந்ததால் உன் நடவடிக்கை அப்படி இருந்தது. பிறகு வன்முறையை பற்றி நினைத்து செயல் பட்டதால் என்னை கொலை செய்ய முயற்சி செய்தாய். இப்போது நம்பிக்கையும், சமாதானமும் இருப்பதால் நீ இவ்வாறு நடந்து கொள்கிறாய். சூழ்நிலைக்கு ஏற்ப எண்ணங்களும் மாறுகின்றன. ஒரு சிலரால் தான் மனசாட்சிக்கு ஏற்ப நடந்து கொள்ள முடிகின்றது.” என்ன வார்த்தைகள்!!! அதில் எவ்வளவு தத்துவம்.

நீதி

சுற்றுப்புற சூழ்நிலைக்கு ஏற்ப நாம் நடந்து கொள்கிறோம். நல்ல எண்ணங்கள் இருப்பவர்களிடம் சகவாசம் வைத்துக் கொண்டால் வாழ்க்கையில் மேன்மை அடையலாம். இல்லாவிட்டால் பிரச்சனைகள் தான் அதிகமாக இருக்கும். சந்தர்ப்ப சூழ்நிலையால் கெட்டுப் போகாமல், மனதைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். தத்துவமுள்ள புத்தகங்களை படித்து, மனதை ஒழுங்கு நிலையில் வைத்துக் கொண்டு, சரியான பாதையை நோக்கிச் சென்றால் வெற்றி நிச்சயம்.

இதை நன்கு அறிந்ததால் தான் பாரதியார்:

“மோகத்தை கொன்று விடு அல்லால்

எந்தன் மூச்சை நிறுத்தி விடு…

தேகத்தை சாய்த்து விடு அல்லால்

அதில் சிந்தனை மாய்த்து விடு” என்று பாடினார்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

வதந்தி பரப்புதல்

The feather story

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினால் சுட்ட வடு. 

நீதி – நன் நடத்தை

உப நீதி – அறியாமை / மதிப்பீடு செய்தல் 

சிறுவன் ஒருவன் தன் வகுப்பில் படிக்கும் மற்ற மாணவர்களைப் பற்றித் தவறான வதந்திகள் பரப்பி வந்தான். கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றியதால், ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் தேவாலயத்திற்குச் சென்று வருவான். தவறுகள் என்ன செய்தாலும், அங்கு இருக்கும் மத குருவிடம் சொல்லி பாவ மன்னிப்பு கேட்டால் கடவுள் மன்னித்து விட்டு விடுவார் என்ற நினைப்புடன் நாட்களைக் கழித்து வந்தான். வதந்திகள் பரப்புவதால் மற்ற மாணவர்களுக்கு ஏற்பட்ட வருத்தத்தை அவன் உணர ஆரம்பித்தான்.

தேவாலயத்தில் மிக அன்பான ஒரு மதகுரு, சிறுவர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வளித்துக் கொண்டிருந்தார். இச்சிறுவன் தான் செய்த தவறுகளை அவரிடம் சொல்லி மன்னிப்புக் கேட்ட பொழுது, பொறுமையாக எல்லாவற்றையும் கேட்டார். பிறகு அவன் செய்த செயல்களின் பின்விளைவுகள் புரிய வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படத் தீர்மானித்தார். அச்சிறுவனிடம், ஒரு பையில் இறகுகளை நிரப்பி, பெருங்காற்று இருக்கும் நாளாகப் பார்த்துக் குன்றின் மேல் செல்ல உத்தரவிட்டார். பிறகு, பையிலிருந்து இறகுகள் அனைத்தையும் பறக்க விட்டு, அடுத்த நாள் எல்லாவற்றையும் மறுபடி சேகரிக்கச் சொன்னார். அதற்கு அச்சிறுவன், “அது எப்படி முடியும்?” என்று கேட்ட பொழுது, மதகுரு “வாழ்க்கையில் ஒரு முறை வதந்தி பரப்பி விட்டால், அதனால் வரும் இழப்பிற்குத் தீர்வே இல்லை. அதனால் இந்தத் தவறை மறுபடியும் செய்யக் கூடாது” எனக் கூறினார். சிறுவனுக்கும் புரிந்து விட்டது.

நீதி:

மற்றவர்களைப் பற்றித் தவறாகப் பேசக் கூடாது. உண்மைகள் என்னவென்று தெரியாத பொழுது, வதந்திகளைப் பரப்பக் கூடாது.  இதனால், ஆயிரக்கணக்கான மக்களின் உணர்வுகள் பாதிக்கப் படுகின்றன. வார்த்தைகளைக் கொட்டினால் அள்ள முடியாது; விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source:

http://saibalsanskaar.wordpress.com

பண்டிதரும் பால்காரியும்

நீதி –  உண்மை / நம்பிக்கை 

உப நீதி –  பக்தி / ஆணவம் 

pundit and the milkmaid new picture 1

ஒரு கிராமத்தில் அறிவுள்ள ஒரு பண்டிதர் இருந்தார். தினமும் காலையில் ஒரு பால்காரி அவர் வீட்டுக்கு பால் கொண்டு வந்து கொடுப்பாள். ஒரு நாள், அப்பெண்மணி சற்றுத் தாமதமாகப் பால் கொண்டு வந்ததனால், பண்டிதர் கோபம் அடைந்தார். தாமதத்துக்குக் காரணம் கேட்டார். அதற்கு அவள் படகுக்காரன் தாமதமாகப் படகு ஓட்டி வந்ததனால், நதியைக் கடக்க நேரம் ஆயிற்று என்று பதிலளித்தாள். அதற்குப் பண்டிதர் படகுக்காரனின் உதவி இல்லாமல் நதியைக் கடந்து வரச் சொன்னார். “கடவுளின் நாம ஸ்மரணம் செய்தால்,  சம்சார சாகரத்தையே  தாண்ட முடியுமானால், இந்தச்  சிறிய நதி எந்த மூலைக்கு? ஏன் கடக்க முடியாது?” எனக் கேட்டார். பால்காரியும் கவனமாக பண்டிதர் சொன்னதைக் கேட்டுக் கொண்டாள்.

pundit and the milkmaid new picture 2மறுநாள், அதிகாலையிலேயே பால்காரி பால் கொண்டு வந்து கொடுத்தாள். மறுபடியும் பண்டிதர் அவளைக் காரணம் கேட்டார். பால்காரி அதற்குப் பதிலாக, பண்டிதர் முதல் நாள் கூறியபடி, தான் நாம ஸ்மரணம் செய்து கொண்டே நடந்து வந்ததாகக் கூறினாள். பண்டிதர் அதிர்ச்சி அடைந்தார். பால்காரி விளையாட்டிற்காக ஏதோ சொல்கிறாள் என நினைத்தார். அவள் கடந்தப் பாதையைத் தனக்கு காண்பிக்கும்படி கேட்டார். பால்கார பெண்மணியும் நதியை அடைந்து, நாம ஸ்மரணம் செய்து கொண்டே நடந்து சென்றாள். பண்டிதரையும் அவ்வாறு வரும்படி கேட்டுக் கொண்டாள். பண்டிதர் தண்ணீரில் காலை வைத்தவுடனேயே, தன்ஆடைகள் நனைந்து விடுமோ என மிகவும் கவனமாக நடக்க ஆரம்பித்து, தடுமாறி நீரில் விழுந்தார். அவர் கவனம் கடவுளிடம் இல்லாது, தன் ஆடைகள் மீதே இருந்தது. தன் வார்த்தைகளையே  அவர் நம்பவில்லை; அவநம்பிக்கையுடன் இருந்தார்.

நீதி:

நம்பிக்கையும், பக்தியும் நூல்களைக் கற்பதை விட மிகவும் முக்கியமானவை. தன் வார்த்தைகளில் நம்பிக்கை இல்லாதவர்கள், மற்றவர்களுக்கு உபதேசம் செய்யக் கூடாது.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source:

http://saibalsanskaar.wordpress.com

விலங்குகளுக்கு நடக்கும் அநியாயம்

cow slaughter

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு

நீதி – நன்றிக் கடன்

உப நீதி – ஜீவ காருண்யம்

ஒரு நாள் பசுவதை செய்யும் இடத்தில், ஒருவன் கோமாதாவை ஸம்ஹாரம் செய்வதற்கு வந்தான், கோமாதா அவனைப் பார்த்துக் கண்ணீர் சிந்தினாள். அதைப் பார்த்து, “நான் உன்னை ஸம்ஹாரம் செய்ய வந்துள்ளேன், அது தெரிந்ததனால் கண்ணீர் சிந்துகிறாயா?” என்று கேட்டான்.

அப்பொழுது கோமாதா, “நான் எப்பொழுதும் மாமிசத்தை உண்டதில்லை. ஆனாலும் என் மரணம் மிகவும் கோரமாக இருக்கப் போகிறது. எந்தத் தப்பும் செய்யாமல், யாருக்கும் எத்தகைய ஆபத்தையும் விளைவிக்காத என்னைக் கொன்று, என் மாமிசத்தைச் சாப்பிடும் உன் மரணம் எவ்வளவு கோரமாக இருக்குமோ” என்று நினைத்துத் தான்.

பால் கொடுத்து உங்களை வளர்த்தேன். உங்கள் பிள்ளைகளுக்குப் பால் கொடுக்கிறேன். ஆனால் நான் சாப்பிடுவது புல்லை மட்டுமே. பாலிலிருந்து வெண்ணை எடுத்தீர்கள். வெண்ணையினால் நெய்யைச் செய்தீர்கள். என்னுடைய சாணத்தினால் வறட்டி செய்து எரிப்பொருளுக்கு உபயோகித்தீர்கள். அதே போல என்னுடைய சாணத்தினால் எருவினைத் தயார் செய்து விவசாயத்திற்குப் பயன்படுத்தீனீர்கள். அந்தப் பணத்தினால் இன்பமான வாழ்க்கையை வாழ்கிறீர்கள். ஆனால் எனக்கு அழுகிப் போன காய்கறிகளையும் காய்ந்து போன புல்லையும் தந்தீர்கள். என்னுடைய சாணத்தினால் கோபர் கேஸ் தயார் செய்து கொண்டு உங்கள் வீட்டை இருட்டிலிருந்து ஒளிமயமாக ஆக்கினீர்கள். ஆனால் என்னைக் கசாப்புக்காரன் போல் கொல்ல வந்திருக்கிறீர்கள்…

என்னுடைய பாலிலிருந்து கிடைத்த சக்தியினால் தான் என்னைக் கொல்ல ஆயுதத்தைத் தூக்க முடிந்தது. அந்த ஆயுதத்தைத் தூக்கும் சக்தி உனக்கு கிடைத்தது என்னால் தான். என் மூலம் நிறைய சம்பாதித்து வீட்டைக் கட்டிக் கொண்டாய். ஆனால் என்னை மட்டும் ஒரு குடிசையில் வைத்தாய். உன்னைப் பெற்ற தாயை விட மேலாக உனக்கு ஆதரவாக இருந்தேன். ஸ்ரீக்ருஷ்ண பகவானிற்கு ப்ரீதியானவள் நான். எனக்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுக்கும் உன் கதி என்னவாகும்? உன் வருங்காலத்தைக் குறித்து நான் சிந்தித்தேன் என்று சொன்னாள்.

நீதி:

எல்லா ஜீவ ராசிகளும் கடவுளின் படைப்பு. ஆதலால் நாம் அவைகளைத் துன்புறுத்த கூடாது. அன்புடனும், காருண்ய பாவத்துடனும் நடந்து கொள்ள வேண்டும்.