அடக்கத்தின் அடையாளம்

hallmark of humility picture 1

நீதி – அன்பு / நன் நடத்தை

உபநீதி – மன்னிக்கும் குணம்

ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் பணிவான மனப்பான்மையை கொண்ட ஒரு சிறந்த மனிதர். அவரிடமிருந்த நற்பண்புகள் மற்றவர்களுக்கு ஊக்கம் அளித்தன. அவர் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்கள், அவருடைய எளிமையான தன்னடக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றன. சமூகத்திற்காக அதிக அளவில் தொண்டுகள் செய்த காரணத்தினால், அவரை மதிப்பிற்குரிய ஒரு மனிதனாக எல்லோரும் கருதினர்.

ஒரு முறை, சில நண்பர்களுடன் சேர்ந்து ஒரு சமயக்குழு அமைத்து, கல்கத்தா பல்கலைக்கழகத்தைத் தொடங்க அவர் முயற்சி செய்தார். இதற்காக நன்கொடையும் பல மக்களிடமிருந்து வசூலித்தார். அயோத்திய நகரத்தின் மாகாண ஆட்சியாளரிடம் சென்று நன்கொடை கேட்ட பொழுது, அவர் மரியாதை குறைவாகத் தன் காலணியை வித்யாசாகரின் நன்கொடைப் பைக்கு முன்னால் எறிந்தார். ஆனால் வித்யாசாகர் கோபமே படாமல் நன்றி சொல்லி விட்டுச் சென்றார்.

அடுத்த நாள் காலை, வித்யாசாகர் காலணியை எடுத்துக் கொண்டு நவாபின் அரண்மனை வாசலில் ஏலம் விட்டார். அரசவையினரும், மற்றவர்கள் எல்லோரும் ஏலத்திற்கு ஒப்புக் கொண்டு, இறுதியில் காலணி ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதைக் கேட்ட நவாப் சந்தோஷத்துடன் அந்த ஆயிரம் ரூபாயைக் கொடுத்தார்.

நவாப், காலணியை நன்கொடை பை முன் தூக்கி எறிந்த பொழுது, வித்யாசாகர் வருத்தப் பட்டோ, அவமானப் பட்டோ இருந்திருக்கலாம்; ஆனால் அவர் இதை ஒரு நல்ல வாய்ப்பாக எடுத்துக் கொண்டு, தன் குறிக்கோளை அடைவதில் தீவிரமாக இருந்தார். அவருக்கு பணம் கிடைத்தது மட்டுமல்லாமல், தன் புத்திசாலித்தனத்தால் நவாபையும் மகிழ வைத்தார். வித்யாசாகர் எப்போதும் தன் உணர்ச்சிகளை பொருட்படுத்தாமல், தன் இலட்சியத்திற்காக உழைத்தார். மேலும், கல்கத்தா பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்று எண்ணிய அவர் கனவும் பூர்த்தியடைந்தது.

நீதி:

பிரச்சனைகளை சந்திக்கும் பொழுது, கோபமாக பேசாமல், நன்று யோசனை செய்து நிதானமாக பதிலளிக்க வேண்டும். குறிக்கோளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அகங்காரத்தை அகற்ற வேண்டும். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை புறக்கணித்து விட்டு, நீண்ட நாள் குறிக்கோளை மனதில் வைத்து செயல்பட வேண்டும்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s