அன்பான விவசாயி

the kind neighbour

நீதி – அன்பு / கருணை 

உபநீதி –  பச்சாதாபம் / நியாயமான தீர்ப்பு

ராம் என்ற பெயரில் ஒரு விவசாயி இருந்தார். அவர் குறைந்த அளவு நிலத்திற்குச் சொந்தக்காரர். அவர் மிகவும் நல்லவர். மேலும், நேர்மைக்கும், நியாயத்திற்கும் கட்டுப்பட்டு, சரியான மனப்பான்மையுடனும் திகழ்ந்தார். அவர் அந்த நிலத்தில் ஒரு சிறிய குடிசையில், மனைவியுடனும், குழந்தைகளுடனும் வாழ்ந்து வந்தார். அங்கு வளர்க்க முடிந்த பயிர்களைப் பேணிக் காத்து, அதை விற்று அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தை வைத்துக் கொண்டு குடும்பம் நடத்தினார்.

மற்றவர்களுக்கு உதவி செய்ய அவருக்கு ஆசை; உடல் நலம் சரியில்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு உடனடியாக உதவி புரிவார். கிராமத்தில் ஏதாவது ஒரு வீட்டில் இறப்பு என்று வந்தால், அக்குடும்பத்தினருக்கு அவரால் முடிந்த உதவியை செய்ய முன் வருவார். இரவு நேரத்தில் நோயாளி யாராவது இருந்தால், கிராமத்து மருத்துவருடன் மருந்துகள் தயார் செய்ய, ராம் உதவி  புரிவார். அவரைக் கண்டால் கிராமவாசிகள் அனைவருக்கும் பிடிக்கும்.

ஆனால் ஒரே ஒரு நபருக்கு மட்டும் அவரை மனதளவில் பிடிக்காமல் போயிற்று. அவர் தான் பக்கத்து வீட்டுக்காரர் முத்து; சோம்பேறியாக இருந்தார். அதிக முயற்சி எடுக்காததால், அவர் நிலத்திலிருந்து அதிக ஊதியம் கிடைக்கவில்லை. ஆனால், ஒவ்வொரு வருடமும் அறுவடை செய்த போது, ராமிற்கு கணிசமான ஊதியம் கிடைத்தது.

ஒரு வருடம், முத்துவிற்கு ராம் மேல் இருந்த பொறாமையை வெளிப்படுத்தாமல் இருக்க முடியவில்ல. அறுவடைக்கு முன்பு, ராம் பயிரிட்ட நிலத்திற்கு நெருப்பு வைத்து விட்டார். நல்ல வேளையாக, மற்றொரு நபர் இந்த சூழ்நிலையைக் கவனிக்காததால், பாதிப்பு பெரிதளவில் குறைந்தது. ராம் எந்த திசையிலிருந்து நெருப்பு வருகின்றது என்று கவனித்து விட்டார். ராமிற்கு, தன் மேல் முத்து வைத்திருந்த பகைமையின் காரணம் புரியவில்லை. ராம் எந்த நடவடிக்கையும்  எடுக்கவில்லை. பொறுமையாக கவனித்து, மறுபடியும் முத்து அந்த மாதிரியான செயலில் ஈடுபட்டால் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டார்.

அந்த வருடம், மற்ற பயிர்களை ராம் விற்று, சிறிதளவு ஊதியம் தான் பெற முடிந்தது. மனதளவில் பெரிய பாதிப்பு இருந்தாலும், வெளியில் அந்த உணர்வை யாரிடமும் காண்பிக்கவில்லை; பொறுமையாகச் சமாளித்தார்.

சில நாட்களுக்குப் பிறகு, ஓரிரவு ராம் தூக்கத்திலிருந்து திடீரென ஏதோ துக்ககரமான ஒலியால் எழுப்பப்பட்டார். முத்துவின் குடிசைக்கு வெளியிலே ஒரு சிறிய கூட்டம். முத்துவின் பையனுக்கு உடல் நலம் சரியில்லை. மருத்துவரால் சரியான மருந்து ஒன்றும் கொடுக்க முடியவில்லை; வியாதி என்னவென்று கண்டுப்பிடிக்க முடியவில்லை. உடனடியாக ராம் தன் சொந்த குதிரையில் ஏறிக் கொண்டு, 10 மைல் தூரம் இருக்கும் பட்டணத்திற்குச் சென்று, அனுபவமுள்ள ஒரு மருத்துவரைக் கூட்டி வந்தார்.

வியாதியைக் கண்டு பிடித்ததோடு, சரியான மருந்தையும் கொடுத்து குணப்படுத்த முடிந்தது. சிறுவனும் நிம்மதியாக உறங்கினான். பிறகு ராம் மருத்துவரைப் பட்டணத்திற்குக் கொண்டு விடச் சென்றார்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, முத்து ராம் வீட்டிற்கு வந்து தேம்பி தேம்பி அழுதார். தான் செய்த பாவச் செயல்களைக் கூறி, மன்னிப்பு கேட்டார். ராம் தனக்கு எல்லா சம்பவங்களும் தெரியும் என்று சொன்ன போது, முத்து ஆச்சரியப்பட்டார்.

முத்துவின் கொடூரமான செயல்களைப் பற்றித் தெரிந்த போதிலும், ராம் நல்லதையே நினைத்தார். சரியான மனப்பான்மை இருந்ததனால், மனதிற்கு நியாயம் என்று நினைத்ததைச் செய்தார். “முத்து தப்பாக நடந்து கொண்டதனால் நானும் அப்படி இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இல்லையே” என எடுத்துரைத்தார்.

அதைக் கேட்ட முத்து அவரை அணைத்துக் கொண்டார். அந்த வருடம் முத்து அறுவடை செய்த போது, நல்ல ஊதியம் கிடைத்தது. காரணம் கேட்ட பொழுது, ராம் அவருக்குச் சொல்லிக் கொடுத்த பாடம் எனப் பெருமையாகக் கூறி, இந்த மனமாற்றம் ராம் செய்த செயல்களால் வந்தது என்றார்.

நீதி

தோழர்களிடம் அன்பாக இருக்க வேண்டும். பகைவர்களிடம் அதைவிட ஒரு பங்கு அதிகமான அன்பும், அக்கறையும் செலுத்த வேண்டும். அன்பு செலுத்துபவர்களிடம் ஆசையாக இருப்பது பெரிய விஷயம் அல்ல. மனதைப் புண்படுத்துபவர்கள் மீது அக்கறை காண்பிப்பது தான் கடினம். அப்படி நடந்து கொண்டால், நம்மிடம் ஏற்படும் மாற்றத்தை முதலில் கவனிக்கலாம். காரியங்களைச் சரியாகச் செய்யும் பொழுது அதிலிருந்து கிடைக்கும் சந்தோஷம் மன நிறைவு அளிக்கும். இந்தப் பண்பை வளர்த்துக் கொண்டால், நாமும் ஆனந்தமாக இருக்கலாம். அந்த ஆனந்தத்தை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளலாம்.

இயேசு கிறிஸ்து சொன்ன வார்த்தைகள் ஞாபகம் வருகின்றது. எந்த அளவுக்கு ஒவ்வொருவரும் தங்களைப் பெருமையாக நினைத்து நேசிக்கின்றார்களோ, அந்த அளவுக்கு பக்கத்து வீட்டில் இருப்பவர்களையும் நேசிக்க வேண்டும்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s