குறைகளில் நிறைவுகளை காணலாம்

positives in negatives1

நீதி – நன்னம்பிக்கை / உண்மை 

உபநீதி – சரியான மனப்பான்மை 

ஒரு இளமையான பெண்மணி மேஜையில் உட்கார்ந்து கொண்டு பல விஷயங்களைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள் – வரிகள் செலுத்த வேண்டும், வீட்டை சுத்தம் செய்ய வேண்டும் மற்றும் அடுத்த நாள் தன் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து கடவுளிடம் நன்றி செலுத்த வேண்டும்; அதற்காக சமைக்க வேண்டுமே என்ற கவலையும் கூட. அச்சமயம் வெவ்வேறு எண்ணங்கள் இருந்ததால், மனதில் சந்தோஷத்தை விட சஞ்சலமே அதிகமாக இருந்தது.

ஒரு நிமிடம் தலையைச் சாய்த்து பார்த்த பொழுது, அவளின் இளைய மகள் ஏதோ அவசரமாக கிறுக்கிக் கொண்டிருந்தாள். மகளின் ஆசிரியை, “குறைகள் நிறைந்த வாழ்க்கையில் இறைவணக்கம் செலுத்துவது எப்படி?” என்ற தலைப்பில் ஒரு குறிப்பு எழுதும்படி வேலை கொடுத்திருப்பதாக முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்; மேலும், குறைகளை  நிறைவுகளாக மாற்றி, நன்றி உணர்வை அனுபவிக்கும் தருணத்தையும்  எழுதச் சொல்லியிருந்தார்.

தன் மகள் என்ன எழுதியிருப்பாள் என்ற ஆர்வத்துடன் அம்மா எட்டிப் பார்த்தாள். அவ்வளவு அழகான வரிகள் –

இறுதிப் பரீட்சையை நினைத்து சந்தோஷமாக இருக்கின்றது, ஏனெனில் சில நாட்களில் விடுமுறைக்காக பள்ளி மூடப்படும்.

  • கசப்பான மருந்திற்கு நன்றி; அதை எடுத்துக் கொண்ட பிறகு எனக்கு உடம்பு சற்று நன்றாக இருக்கின்றது.
  • காலையில் என்னை சட்டென்று எழுப்பும் அலாரத்திற்கு  நன்றி; நான் இன்னும் உயிரோடு இருக்கின்றேன்.

இந்த வாக்கியங்களைப் பார்த்தவுடன் அம்மாவுக்கு ஞானோதயம் வந்தது. எவ்வளவு விஷயங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று உணர்ந்தாள். வரிகள் கட்ட வேண்டும் ஆனால் வேலை செய்துக் கொண்டிருந்ததால் அது ஒரு பெரிய பிரச்சனை இல்லை என்று தோன்றியது. வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டும்; ஆனால் சொந்த வீடு இருந்தது. அடுத்த நாள் இறைவணக்கத்திற்கு சமையல் செய்ய வேண்டிய ஒரு நிர்ப்பந்தம்; ஆனால் சந்தோஷமாக கொண்டாட குடும்பத்தினர் இருந்தார்கள்!

நீதி

positives in negatives2

எல்லா சூழ்நிலைகளிலும், நிறைவுகளும், குறைகளும் இருக்கின்றன. காரியங்களை செய்யும் பொழுது, குறைகளைப் பார்ப்பதற்கு பதிலாக நிறைவுகளை மனதில் வைத்துக் கொண்டால், மனநிறைவு கிடைக்கும்.

வாழ்க்கையில் சிறியவர்கள் / முதியவர்கள் என்ற வேறுபாடு இல்லாமல், பல சமயங்களில் எல்லோரிடமிருந்தும் பாடங்களை கற்றுக் கொள்ள ஒரு சரியான மனப்பான்மை மிக அவசியம்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s