ஆணவம் – நேர்முகக் கவனத்திற்கு நாட்டம் கொள்ளுதல்

நீதி – நன் நடத்தை

உபநீதி – சரியான மனப்பான்மை

பல வெற்றிகரமான மனிதர்கள், பிரபலங்கள் கூட, மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் பெரும்பாலும் செயல்படுகின்றார்கள். வேதனைக்குரிய ஒரு விஷயமாக இருக்கின்றது. வளர்ச்சி என்றால் தொழில்நுட்ப வளர்ச்சி மட்டுமல்ல; நற்பண்புகளும் வளர வேண்டும்; ஆனால் ஆணவம் என்ற உள்ளார்ந்த குணத்திலிருந்து விடுபட்டு வருவது அவ்வளவு கடினமாக இருக்கின்றது. அவ்வப்பொழுது ஆணவத்தை தூண்டிக் கொண்டிருந்தால், நிரந்தர பிரச்சனையாக மாறிவிடும். அதிகமாக தூண்டினால், உயர்வான மனப்பான்மையும், பட்டினி போட்டால், தாழ்வு மனப்பான்மையாகவும் பிரதிபலிக்கின்றது. மனநிம்மதியை ஒட்டுமொத்தமாக இழக்கின்றோம். ஆணவம் கேட்கும் விலை என்ன? மனநிம்மதி தான். சீப்பு வாங்குவதற்காக தலை முடியை விற்போமா? சற்று யோசனை செய்யுங்கள்.

ஆணவத்தை தூண்டிவிடும் வகையில் நடந்துக் கொண்டால், ஒவ்வொரு சூழ்நிலையிலும் வெற்றியடைவது போராட்டமாக மாறுகின்றது. மற்றவர்களோடு ஒப்பிடும் போது, உயர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற ஒரே எண்ணம் தான் மனதில் இருக்கின்றது. விழிப்புணர்வோடு ஆணவத்தை கட்டுப்படுத்தினால் உள்ளார்ந்த திறமை வெளிப்படுகின்றது. நாம் நம்மையே வெல்ல முயற்சி செய்கிறோம்.

வாழ்க்கையின் ஒரு கட்டத்தில், என்ன காரியம் செய்தாலும், அங்கீகாரமும், புகழும் பிரதானமாக மனதில் வைத்துக் கொண்டு செயல்படுகிறோம். மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க முடியாவிட்டால், ஒரு நற்செயல் கூட தீயச் செயலாக மாறுகின்றது. அந்த அளவுக்கு ஆணவம் உணர்வுகளை கட்டுப்படுத்தும் ஒரு கருவியாக இருக்கின்றது. அந்த உணர்விலிருந்து வெளியில் வர முயற்சிக்க வேண்டும்.

ஆணவத்தின் வளர்ச்சி நற்பண்புகளின் அழிவு; ஆணவத்தின் அழிவில் ஞானத்தின் சூர்யோதயம்.

ஆணவத்தை பாதுகாக்க பல உறவுகளை இழந்திருக்கிறோம். மறுபடியும் பெற இயலாத அளவிற்கு உறவுகளை சேதம் செய்து ஆணவத்தை பாதுகாப்பது தேவையா?

பல அரியசந்தர்ப்பங்களை விட்டுக் கொடுத்து ஆணவத்தை மிகுதிப்படுத்துவது சரியா?

ஆணவத்தின் விளைவுகள் – ஒவ்வொரு நிமிடமும் மன வேதனை;   ஒவ்வொரு சூழ்நிலையிலும் மன அழுத்தம்; ஒவ்வொரு பரிமாற்றத்திலும்  பதட்டம்;

ஆணவம் மன நிம்மதியை பறித்து விடும். ஆணவத்தின் விளைவு தீ மேல் நடப்பது போல ஒரு உணர்வு.

காக்கை ஒன்று இறைச்சி துண்டை வாயில் கவ்விக் கொண்டு பறக்கும் போது, மற்ற பறவைகள் அதன் பின் பறந்தன. இறைச்சி துண்டை கீழே எறிந்தது. இப்பொழுது இறைச்சிக்காக பறவைகள் பறந்தன. மேகத்தைப் பார்த்து காக்கை நினைத்தது, “இறைச்சியைத் தொலைத்தேன்; ஆனால் சுதந்திரம் பெற்றேன்.”

ஆணவத்தை விட்டால் சுதந்திரமும், மன நிறைவும் கிடைக்கும்.

நீதி:

ஆணவம் ஒரு செயலுடன், ஒரு குணநலனுடன், தன்னை அடையாள படுத்திக் கொள்கிறது. ஆணவத்தை வளமூட்டி, அந்த நினைப்பில் வாழ்ந்து, நல்ல சந்தர்ப்பங்களை தொலைத்துவிட்டு, பல உறவுகளை இழக்கிறோம். அந்த உணர்வை பொருட்படுத்தாமல் உள்ளார்ந்த சரியான மனப்பான்மையுடன் செயல்பட்டால், வெற்றி நிச்சயம்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s