ஒரு பெரிய மருத்துவமனை…

two patients

நீதி – உண்மை  / சரியான மனப்பான்மை

உபநீதி –  நம்பிக்கை / ஆழ்ந்த உணர்தல் / கருணை

ஒரு அறையில், இரு நோயாளிகள் இருந்தனர். ஒருவரை இன்னொருவர் பார்த்தது இல்லை.

இருவருக்குமிடையே ஒரு தடுப்புச் சுவர் இருந்தது.  ஒருவரின் படுக்கை ஜன்னல் அருகில்; இன்னொருவருக்கு ஜன்னலே கிடையாது. எப்போதாவது வந்து செல்லும் மருத்துவச் செவிலியைத் தவிர தனிமை.. தனிமை.. தனிமை..!

ஜன்னல் அருகில் படுக்கை இருந்த நோயாளிக்கு புற்றுநோய் இருந்தது.

இன்னொருவர், கடும் எலும்பு முறிவு நோயாளியாக இருந்தார்.

நாளடைவில் இருவரும் நண்பர்களாகி விட்டனர். ஒருமுறை எலும்பு முறிவு நோயாளி, ஜன்னல் ஓர நோயாளியிடம், “உனக்காவது பொழுது போக்காக, ஒரு ஜன்னல் இருக்கிறது.. எனக்கு அது கூட இல்லை..!” என்று கூறினார்.

அதற்கு, “கவலைப்படாதே நண்பா.. நான் ஜன்னலிலிருந்து வெளியே பார்க்கும் பொழுது என்னென்ன காண்கிறேனோ, அவ்வளவையும் உன்னிடம் விவரிக்கிறேன். இதை ஒரு ஒப்பந்தமாகவே கடைப்பிடிப்பேன்..!” என்று மற்றொரு நோயாளி பதிலளித்தார்.
அன்று முதல் ஜன்னல் ஓரம் இருந்த நோயாளி,  தான் கண்ட காட்சிகளை சுவைப்பட தன் நண்பனுக்குக் கூறலானார்..

“நண்பா! ஜன்னலுக்கு வெளியே ஒரு பெரிய ஏரி.  நடுவில் சிறு தீவு..  ஏரியில் படகுகள் மிதக்கின்றன.. ஏரிக்கரையில் அழகான பூங்கா..!”
எலும்பு நோயாளிக்கு அப்படியே காட்சிகள் மனக்கண்ணில் விரியும்.

ஜன்னல் நோயாளி இன்னொரு நாள் சொல்வார்.. “ஏரிக்கரை ஓரமாக ஒரு சாலை. அதில் மணப்பெண் அழைப்பு ஊர்வலம் போய்க்ம கொண்டிருக்கிறது. மகிழ்ச்சியுடன் ஓடித் திரிகின்றன. மணப்பெண்ணிடம் தோழி ஏதோ சொல்கிறாள்.. மணப்பெண் முகத்தில் அப்படி ஒரு வெட்கம்..!”

ஊர்வல அரவங்கள் எதுவும் எலும்பு நோயாளிக்கு கேட்கவில்லையாயினும் நாதஸ்வரமும், தவிலும் ஒலிக்க ஊர்வலம் போகும் காட்சியை நன்கு அனுபவிப்பார்..

ஒருநாள் ஜன்னல் நோயாளி காலமானார்.

மீண்டும் எலும்பு நோயாளிக்கு வெறுமை, தனிமை…

ஒரு நாள் செவிலி வந்தபோது, எலும்பு நோயாளி தன் படுக்கையை ஜன்னல் ஓரமாக மாற்றித் தரும் படி கேட்டுக் கொள்ள, அவ்வாறே செய்யப்பட்டது.

எலும்பு நோயாளி, இனி நன்கு பொழுது போகும் என்று எண்ணியவாறே,  தன் எலும்பு முறிவு வலியையும் பொருட்படுத்தாமல், மெல்ல தன் உடலை உயர்த்தி, ஜன்னல் வழியே பார்த்தார்.

அங்கே பெரிய சுவர்..! வேறு எதுவுமே இல்லை..!

அப்படியானால் ஜன்னல் நோயாளி சொன்ன கதைகள்…?
மறுநாள் செவிலி வந்தவுடன், நடந்தவற்றை எலும்பு நோயாளி கூறினார்.

செவிலி, எலும்பு நோயாளிக்கு ஊசி மூலம் மருந்தை ஏற்றியபடியே சொன்னாள்..
“நீங்கள் பார்க்கும் சுவர் கூட அவருக்குத் தெரிந்திருக்காது.. புற்றுநோயின் தாக்கத்தால் அவர் பார்வையை எப்போதோ இழந்து விட்டிருந்தார்”

நீதி:

அன்பு நண்பர்களே ..

தன் துன்பங்களை பொருட்படுத்தாமல், பிரச்சனைகளால் அவதிப்படும் மற்றவர்களுக்கு கை கொடுத்தால், மன நிம்மதி கிடைக்கும். சரியான மனப்பான்மையின் அர்த்தத்தை வெளிப்படுத்தும். எல்லோருக்கும் பேரின்பம்.

தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே

வேளாண்மை என்னுஞ் செருக்கு.

முயற்சி எனப்படும் உயர்ந்த குணத்தில் தான், பிறர்க்கு உதவுதல் என்னும் மேன்மை நிலை பெற்றிருக்கிறது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s