மகிழ்ச்சியாக இருப்போம்

Let us be happy 2

நீதி – மன நிறைவு

உபநீதி – பற்றற்ற நிலை

அரண்மனைக்கு அருகில் வசித்த பிச்சைக்காரன் ஒருவன்,  அந்த அரண்மனைக் கதவில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பைக் கண்டான். அதில், மன்னர் விருந்தளிக்கப் போவதாகவும், அரச உடை அணிந்து வருவோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

பிச்சைக்காரன்,  யோசனை செய்து கொண்டு, தான் அணிந்திருந்த கந்தல் உடைகளை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்துக் கொண்டான்; நிச்சயமாக அரசரும், அவருடைய குடும்பத்தினரும் மட்டுமே ராஜ உடை உடுத்தியிருக்க முடியும் என எண்ணினான். தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அரண்மனை வாசலை அவன் அடைந்தான். வாயிற்காவலனிடம், ராஜாவைப் பார்க்க வேண்டும்  என்ற கோரிக்கையை அவன் வைத்தான். அந்தக் காவலன், அரசரைப் பார்க்கச் சென்றான். அதிர்ஷ்டவசமாக பிச்சைக்காரனுக்கு அனுமதி கிடைத்தது. அவன் மிக்க மகிழ்ச்சி அடைந்தான்.

Let us be happy 1

உள்ளே வந்த பிச்சைக்காரனிடம், ”என்னைப் பார்க்க வேண்டும் என்றாயாமே?” என்று அரசர் கேட்டார். அதற்கு அவன், ”ஆமாம்! நீங்கள் அளிக்கும் விருந்தில் கலந்து கொள்ள எனக்கும் ஆசை. ஆனால், என்னிடம் ராஜ உடைகள் இல்லை. என்னை அதிகப் பிரசங்கி என நினைக்காவிட்டால், உங்களது பழைய ஆடையை அளித்து உதவினால், அதனை அணிந்து கொண்டு விருந்துக்கு வருவேன்”  என்று மிகவும் பவ்வியமாக கூறினான். அதே நேரம், மன்னர் என்ன சொல்வாரோ என நடுங்கியபடி, அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் மன்னர், அவனுக்கு ராஜ உடை ஒன்றை வழங்கினார். அந்த உடையை உடுத்திக் கொண்டவன், கண்ணாடி முன் நின்று கவனித்தான்; தோற்றத்தில் கம்பீரம் மிளிர்வதைக் கண்டு அவன் வியந்தான்!

அப்போது மன்னர் அவனிடம், ”விருந்தில் கலந்து கொள்வதற்குத் தகுதி உடையவனாகி விட்டாய். அதைவிட, முக்கியமான ஒன்று… இனி உனக்கு வேறெந்த உடையும் தேவைப்படாது. உன் ஆயுள் முழுவதும் இந்த உடை அப்படியே இருக்கும். துவைக்கவோ, தூய்மைப் படுத்தவோ அவசியம் இருக்காது” என்றார். கண்ணீர்மல்க, மன்னருக்கு நன்றி கூறிவிட்டுக் கிளம்பிய பிறகு, அவன் மூலையில் கிடந்த தனது பழைய ஆடைகளை கவனித்தான். அவனது மனம் சற்றே சலனப்பட்டது. ‘ஒருவேளை, அரசர் கூறியது தவறாக இருந்து, இந்த உடைகள் கிழிந்து விட்டால்… அப்போது நமக்குப் பழைய உடைகள் தேவைப்படுமே?!’ என யோசித்தவன், சட்டெனச் சென்று தன் பழைய உடைகளை வாரி எடுத்துக் கொண்டான்.

Let us be happy 7

Let us be happy 3

வீடு வாசல் இல்லாததால் பழைய துணிகளை எங்கேயும் வைக்க முடியவில்லை; எங்கே சென்றாலும் பழைய ஆடைகளையும் சுமந்தே திரிந்தான். மன்னர் அளித்த இரவு விருந்தையும் அவனால் மகிழ்ச்சியாக ஏற்க முடியவில்லை. அடிக்கடி கீழே விழுந்து விடும் பழைய துணிகளைச் சேகரிக்கும் மும்முரத்தில், பரிமாறப்பட்ட பதார்த்தங்களை சரிவர ருசிக்க முடியவில்லை. பழைய ஆடைகளை பாதுகாப்பதில் அவன் சிந்தனை முழுவதும் இருந்தது.

அரசர் சொன்னது உண்மை என்பது நாளடைவில் அவனுக்குப் புரிந்தது. அவர் கொடுத்த ஆடை அழுக்காகவோ, கிழியவோ இல்லை. ஆனாலும், அந்த யாசகனுக்குப் பழைய உடைகள் மீது நாளுக்கு நாள் பிடிப்பு அதிகமானது. மக்களும் அவனது ராஜ உடையைக் கவனிக்காமல், அந்த கந்தல் மூட்டையையே பார்த்தனர்; அவனைக் ‘கந்தல் பொதி கிழவன்’ என்றே அழைத்தனர்.

இறக்கும் தருணத்தில் இருந்த பிச்சைக்காரனைப் பார்க்க அரசர் வந்தார். அவனது தலைமாட்டில் இருந்த கந்தல் மூட்டையைப் பார்த்து, அரசரின் முகம் சோகம் அடைந்ததை அவன்  கண்டான். ஆரம்பத்திலேயே அரசர் சொன்ன செய்தி அவன் நினைவுக்கு வந்தது. பழைய துணி மூட்டை, அவனது வாழ்நாளின் மொத்த மகிழ்ச்சியையுமே பறித்து விட்டது.

அந்த யாசகனிடம் மட்டுமல்ல, நம் எல்லோரிடமும் அப்படியொரு மூட்டை இருக்கிறது. அதனுள் விரோதம், கோபம், கவலை, சோகம், பகைமை… எனப் பல பெயர்களில் வேண்டாத பொருட்கள் இருக்கின்றன. அவற்றைப் பாதுகாப்பதிலேயே கவனம் செலுத்துவதால், நமது வாழ்வில் வீசுகின்ற மகிழ்ச்சித் தென்றலை நுகர முடியாமல் நாம் இருக்கிறோம். நம்முடைய தீராத கோபம், எத்தனை இன்பம் வந்தாலும், அதை ஏற்றுக் கொண்டு ஆனந்தப்பட முடியாமல் செய்து விடுகிறது.

Let us be happy 4

அரண்மனைகளில் கூட, இன்றும் பலர் பிச்சைக்காரர்களாகவே வாழ்கின்றனர். அனாதை ஆசிரமங்களில் அரசர்களாக வாழ்வோரும் உண்டு. வெளித் தோற்றம் முக்கியமல்ல; நாம் பார்க்கும் கண்ணோட்டமே வாழ்க்கையில் முக்கியமானது.

நம் வீடுகளில், என்றோ வாங்கிய பல பொருள்கள் நிரம்பி இருக்கின்றன. அவற்றால் எந்தப் பயனும் இல்லாவிட்டாலும், தூக்கி எறிய மனமில்லை. வீடையே பண்டகசாலையாக  மாற்றி, வேண்டாத பொருட்களை சேகரித்து வைக்கிறோம்.  முக்கியமானவற்றை விட்டு விட்டு, வேண்டாத விஷயங்களில் நம் வாழ்க்கையை வீணடிக்கிறோம். இல்லத்தை மட்டுமல்ல; உள்ளத்தையும் வேண்டாத எண்ணங்களால் பண்டகசாலையாக மாற்றுகிறோம்.

நீதி:

மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணங்கள் தேவையே இல்லை.

மகிழ்ச்சியாக இருப்பதற்குக் கற்றுக் கொள்வோம்.

Let us be happy 5

காக்கை ஒன்று இறைச்சி துண்டை வாயில் கவ்விக் கொண்டு பறக்கும் போது, மற்ற பறவைகள் அதன் பின் பறந்தன. இறைச்சி துண்டை கீழே எறிந்தது. இப்பொழுது இறைச்சிக்காக பறவைகள் பறந்தன. மேகத்தைப் பார்த்து காக்கை நினைத்தது, “இறைச்சியைத் தொலைத்தேன்; ஆனால் சுதந்திரம் பெற்றேன்.” Let us be happy 6

நம் அகம்பாவத்தை விட்டு விட்டால், பெரிய அளவில் சுதந்திரத்தை அனுபவிக்கலாம்.

விட்டுக் கொடுத்து, சூழ்நிலைகளை ஏற்றுக் கொண்டு, கடவுளிடம் சரணடைய வேண்டும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s