மரக் கிண்ணங்கள்

நீதி – நன் நடத்தை

உபநீதி – மரியாதை /கடமை உணர்ச்சி 

 

the wooden bowls1ஒரு பலவீனமான, வயதான மனிதர் தன் மகன், மருமகள் மற்றும் பேரனுடன் வசித்து வந்தார். அவரின் கண் பார்வை மங்கலாக இருந்தது. வயதின் காரணமாக தள்ளாடித் தள்ளாடி நடந்தார். ஒவ்வொரு நாளும், இரவில் அவர்கள் ஒன்றாகத் தான் உணவை உட்கொள்வார்கள். வயதானவருக்கு மங்கலான கண் பார்வையினாலும், தள்ளாடும் உடம்பினாலும், உண்ணுவது கூடக் கடினமாக இருந்தது. உண்ணும் போது, கையிலிருந்து பால் கிளாசைத் தவற விட்டு விடுவார்; மேஜை மேல் எல்லாம் சிந்திவிடும். மனதிற்குச் சங்கடமாக இருந்தாலும் அவரால் ஒன்றுமே செய்ய இயலவில்லை.the wooden bowls2

தினமும் நடந்த இந்தக் குளறுபடிக்கு பின், அவரின் மகனும், மருமகளும் கோபமுற்றனர். தனியாக ஒரு மேஜையில் வயதானவருக்கு ஒரு மரக் கிண்ணத்தில் உணவு கொடுக்க ஆரம்பித்தார்கள். தினமும் அவரின் கண்களில் ஒரு சோகம் தெரிந்தது; வேதனையான ஒரு மன அழுத்தம். இந்தச் சிறுவன் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஒரு நாள், இச்சிறுவன், மரச் சொப்புகளுடன் விளையாடிக் கொண்டிருந்தான். பெற்றோர்கள் அவனிடம் பேசிய பொழுது, அவர்களின்The wooden bowls3 வயதான நாட்களுக்குத் தற்பொழுதே அவன் திட்டம் போட்டுக் கொண்டிருந்ததாக பதிலளித்தான். அச்சமயம் தான், அவர்கள் செய்து கொண்டிருக்கும் அநியாயம் அவர்களுக்கு புரிந்தது. அன்றிரவிலிருந்து, தன் தந்தை எப்படி சாப்பிட்டாலும் பரவாயில்லை என நினைத்து, ஒன்றாக எல்லோரும் உணவை உட்கொள்ள ஆரம்பித்தனர்.

 நீதி:

வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்ற நீதிமொழி மிகப் பொருத்தமானது. ஒவ்வொருவருக்கும் தார்மீகப் பொறுப்பு இருக்கின்றது. வயதானவர்களை மரியாதையுடன் நடத்துங்கள். குழந்தைகள் நம் செயல்களைப் பார்த்து தான், கற்றுக் கொள்கிறார்கள்.

நல்லது செய்யுங்கள்; நல்லதே வந்து சேரும்.

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s