ஒரு கெட்ட பழக்கத்தை கைவிடுவதால் வரும் மாற்றம்

transformation by changing ones bad habits picture 1

நீதி – உண்மை

உபநீதி – வாய்மை / நேர்மை

ஒரு நாள், ஒரு மனிதன் முஹம்மது நபி நாயகரிடம், “அல்லாவே! எனக்கு பல கெட்ட பழக்கங்கள் இருக்கின்றன. அவற்றில் எதை முதலில் விட வேண்டும்?” எனக் கேட்டான். அதற்கு நபி நாயகம், “பொய் சொல்லும் பழக்கத்தை விட்டுவிட்டு எப்பொழுதும் உண்மையையே பேசு” என பதிலுரைத்தார். அவ்வாறே செய்வதாக வாக்களித்துவிட்டு அம்மனிதன் வீடு சென்றான்.

transformation by changing ones bad habits picture 2இரவு அம்மனிதன் திருடக் கிளம்பினான். கிளம்புவதற்கு முன் தான் நபி நாயகருக்கு அளித்த வாக்கு நினைவுக்கு வந்தது. “மீண்டும் அவரை பார்க்கும் போது, நான் எங்கே இருந்தேன் என அவர் கேட்டால், என்ன பதில் கூறுவது?” என எண்ணினான். “நான் திருடச் சென்றேன் என்று எப்படிக்  கூறுவது? இல்லை; அவ்வாறு என்னால் கூற முடியாது, ஆனால், பொய்யும் சொல்லக் கூடாது. உண்மையைச் சொன்னால் எல்லோரும் என்னை வெறுத்து திருடன் என அழைப்பார்கள். பிறகு திருடியதற்கும் தண்டனை கிடைக்கும்” என நினைத்தான்.

மறு நாள், அம்மனிதன் மதுபானம் அருந்த கிளம்பும் transformation by changing ones bad habits picture 3போது, மனதில் எண்ணங்கள் அலை பாய்ந்தன – என் மத குரு, என்ன செய்தாய் எனக் கேட்டால் பொய் சொல்ல முடியாது. உண்மையைக் கூறினால் மக்கள் என்னை வெறுப்பார்கள். காரணம் ஒரு முஹம்மதியற்கு மதுபானம் செய்யும் உரிமை கிடையாது, ஆதலால் குடிப் பழக்கத்தையும் நிறுத்தி விட்டான்.

இவ்வாறாக எந்த தவறு செய்ய அம்மனிதன் நினைத்தாலும் உண்மை பேசுவதாக கொடுத்த வாக்கு நினைவில் வந்து, ஒவ்வொன்றாக எல்லா கெட்ட பழக்கங்களையும் விட்டுவிட்டு உண்மையான முஹம்மதியனாக மாறினான்.

நீதி

எப்பொழுதும் உண்மையையே பேச வேண்டும். ஒரு தீய பழக்கம் மற்ற தீய பழக்கங்களுக்கு வழி வகுக்கும். ஒரு கெட்ட பழக்கத்தை கட்டுப்படுத்தினால், மற்ற கெட்ட பழக்கங்களையும் கட்டுப் படுத்த உதவி செய்து, நம்முள் ஒரு மாற்றத்தை உண்டாக்கும்.

சத்தியமேவ  ஜெயதே

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s