நேர்மையான ஆட்டோ ஓட்டுநர்

the honest auto driver

நீதி – உண்மை

உபநீதி – நேர்மை

அன்றிரவு பலமான குளிர் காற்று வீசிக் கொண்டிருந்தது. என் நண்பனும் நானும் வெகு நாட்களுக்கு பிறகு சந்தித்து மணிக் கணக்காக பேசிக் கொண்டிருந்தோம். நேரம் போனதே தெரியவில்லை. மணி பத்தாகிவிட்டது. ஒரு ஆட்டோ எடுத்துக் கொண்டு எங்கள் அறைக்கு செல்ல காத்திருந்தோம். மழை வேறு பெய்ய ஆரம்பித்து விட்டது. வெகு நேரம் முயற்சி செய்த பிறகு எங்கள் முன் ஒரு ஆட்டோ  நின்றது.

ஆட்டோ ஓட்டுநர் எங்கே செல்ல வேண்டும் என்று வினவினார். நாங்களும் இடத்தைக் கூறினோம். பேரம் எதுவுமே பேசாமல் எங்களை ஏற்றிக் கொண்டார். எங்களுக்காக நிறுத்தியதற்கு நாங்கள் நன்றி கூறினோம்.

வெளியே குளிர் நடுங்கியதால் ஆட்டோ ஓட்டுநரை பாதி வழியில் ஏதாவது சின்ன சாப்பாட்டு கடையிலோ டீ கடையிலோ நிறுத்தச் சொன்னோம். அவரும் ஒரு சாப்பாட்டு கடையருகில் நிறுத்தினார்.

நாங்கள் ஆளுக்கு ஒரு டீ சொல்லிவிட்டு ஓட்டுநரையும் டீ குடிக்க அழைத்தோம். அவர் மறுத்து விட்டார். மழைக்கு இதமாக இருக்கும் என்று நான் எவ்வளவு வற்புறுத்தியும் அவர் கேட்கவில்லை.

என் நண்பர், “நீங்கள் இக்கடையில் டீ குடிக்க மாட்டீர்களா என்ன?” என்றார்.

ஓட்டுநர், “இல்லை சார், எனக்கு இப்போது டீ குடிக்க விருப்பமில்லை” என்றார்.

நான் மீண்டும், “ஆனால் ஏன்? ஒரு டீ குடித்தால் ஒன்றும் ஆகாது” என்றேன்.

அவர் புன்னகைத்த படியே மீண்டும் மறுத்தார்.

என் நண்பர் அவர் பிடிவாதத்தைக் கண்டு எரிச்சல் அடைந்து, “உங்களோடு டீ குடிக்க நாங்கள் சமமானவர்களாக தோன்றவில்லையா?” என்று கேட்டார்.

ஓட்டுநர் பதிலே சொல்லாமல் அமைதியாக இருந்தார். அவரின் நடத்தை எனக்கு ஆச்சரியமளித்தாலும் என் நண்பரை, மேலும் அவரை வற்புறுத்த வேண்டாம் என்று கூறினேன்.

15 நிமிடங்களில் நாங்கள் எங்கள் இடத்தை அடைந்தோம். பயணக் கட்டணத்தைக் கட்டி விட்டு அவருக்கு நன்றி கூறினோம். பொறுக்க முடியாமல் திரும்பவும்,  டீ குடிக்க ஏன் மறுத்தார் என்று கேட்டேன்.

ஒரு நிமிடம் யோசித்து விட்டு அவர், “ஐயா, என் மகன் ஒரு விபத்தில் இன்று மதியம் இறந்து விட்டான். அவன் இறுதி சடங்குக்கு வேண்டிய பணத்தை சேமிக்காமல் பச்சை தண்ணீர் கூட குடிக்க மாட்டேன் என்று உறுதி கொண்டிருந்தேன். அதனால் தான் நீங்கள் அவ்வளவு சொல்லியும் நான் டீ குடிக்க மறுத்துவிட்டேன். என்னை தப்பாக நினைக்காதீர்கள்” என்று கூறினார்.

அதைக் கேட்டவுடன் நாங்கள் திகைத்துப் போய், அவர் மகனின் சடங்கிற்கு உதவ மேலும் பணம் தந்தோம். அவர் அதை மரியாதையுடன் மறுத்தார். “உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி ஐயா. ஆனால், இன்னும் ஒன்று இரண்டு மணி நேரங்களுக்கு எனக்கு போதிய சவாரி கிடைத்தால், வேண்டிய பணத்தை நானே திரட்டி விடுவேன்” என்று கூறி விடை பெற்றார்.

பெரும் மழையைக் காரணம் காட்டி அதிக கட்டணம் வசூலிக்காமல், தனது இழப்பையும் துக்கத்தையும் மீறி அந்த ஆடோ ஓட்டுநர் நேர்மையுடன் நடந்து கொண்டது எங்களுக்கு அவர் மீது பெரும் மதிப்பை ஏற்படுத்தியது.

நீதி

நேர்மையே வெல்லும். ஒருவரின் உண்மையான குணம் என்பது அவருக்கு துன்பம் ஏற்படும் போது தான் வெளிப்படுகிறது. உண்மையும் நேர்மையும் நமது பிறவி குணமாகிவிட வேண்டும். அவையே நமக்கு பேரின்பத்தையும், நிம்மதியையும், பெரும் மதிப்பையும் பெற்றுத் தரும்.

மொழி பெயர்ப்பு:

சரண்யா, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s