காக்கையும் மயிலும்

நீதி – உண்மை

உபநீதி – மன நிறைவு

the crow and the peacock1

ஒரு காட்டில், காக்கை ஒன்று மன நிறைவோடு, மகிழ்ச்சியாக இருந்தது. சில நாட்களுக்குப் பிறகு, ஒரு அன்னப் பறவையைப் the crow and the peacock2பார்த்தது. மனதில் ஒரு எண்ணம் தோன்றிற்று. “நான் கருப்பாக இருக்கிறேன். ஆனால் அன்னப் பறவையோ வெண்மையான நிறம்; எவ்வளவு அழகு; உலகத்தில் அதிக சந்தோஷத்துடன் வாழும் பறவையாக இருக்கும்”.

இந்த எண்ணங்களை அன்னப் பறவையுடன் பகிர்ந்து கொண்டது. உடனடியாக வந்த பதில், “இரு வர்ணங்கள் கொண்ட ஒரு கிளியைப் பார்ப்பதற்கு முன், நானும் அப்படித் தான் நினைத்துக் கொண்டிருந்தேன்”. கடவுளின் படைப்புகளில் கிளி தான் இன்பமாக இருக்கும் என்று கூறியது.

காக்கை கிளியைப் பார்க்கச் சென்றது. கிளியிடமிருந்து வந்த பதில்,  “மிருகக்காட்சி the crow and the peacock3சாலையில் மயிலைப் பார்த்த பிறகு என் அபிப்பிராயம் மாறிவிட்டது”. பல வண்ணங்கள் நிறைந்த அழகான மயில் தான் மிக மகிழ்ச்சியாக இருக்கின்றது என்று கூறியது.

அடுத்த நாள், காக்கை மிருகக்காட்சி சாலைக்கு சென்றது. பல ஆயிரக்கணக்கான மக்கள் மயிலைப் பார்க்க வந்திருந்தார்கள். அவர்கள் அனைவரும் சென்ற பிறகு, காகை மயிலிடம் சென்று பேச்சு கொடுத்தது. “உன்னைப் பார்க்க தினமும் பல மக்கள் வருகின்றார்கள். என்னைப் பார்த்தாலே எல்லோரும் துரத்தி விடுகிறார்கள்.” என்று கூறியது.

அதற்கு மயில், “நான் மிக அழகாக இருக்கிறேன் என்று நினைத்துப்  பெருமைப்பட்டேன். ஆனால் என்னை மிருகக்காட்சிthe crow and the peacock5 சாலையில் வைத்திருக்கிறார்கள். நிம்மதியாக இருக்க முடியவில்லை. காகையை மட்டும் கூண்டில் அடைப்பதில்லை. காகையாக இருந்தால் நிம்மதியாக வாழலாமே என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.” என்று பதிலளித்தது.

இந்தக் கதை நம் பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கின்றது. அன்னப் பறவை சந்தோஷமாக இருக்கிறது என்பது காகையின் அபிப்ராயம்; கிளி தான் சந்தோஷமாக இருக்கிறது என்பது அன்னப் பறவையின் அபிப்ராயம்; மயில் தான் சந்தோஷமாக இருக்கிறது என்பது கிளியின் அபிப்ராயம்; கடைசியில், காகை தான் சந்தோஷமாக இருக்கிறது என்பது மயிலின் அபிப்ராயம்.

நீதி

மற்றவர்களுடன் ஒப்பீடு செய்தால் மன நிம்மதியை இழப்போம். எல்லோரின் மகிழ்ச்சியையும் நாம் கொண்டாடினால், நமக்கும் நன்மை வருமாறு நல்லதே நடக்கும். கடவுள் நமக்குக் கொடுத்த அனைத்தையும் நினைத்து இன்பமாக இருக்க வேண்டும். ஒவ்வொருவரின் மனதில் மகிழ்ச்சி அடங்கியுள்ளது. சுகமோ, துக்கமோ நம் கையில் தான் இருக்கின்றது.

the crow and the peacock6

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

Advertisements

2 thoughts on “காக்கையும் மயிலும்

 1. KASPERSKY NOT ALLOWS TO OPEN

  2016-05-14 17:40 GMT+05:30 Saibalsanskaar Tamil :

  > ranjanimurali123 posted: “நீதி – உண்மை உபநீதி – மன நிறைவு ஒரு காட்டில்,
  > காக்கை ஒன்று மன நிறைவோடு, மகிழ்ச்சியாக இருந்தது. சில நாட்களுக்குப் பிறகு,
  > ஒரு அன்னப் பறவையைப் பார்த்தது. மனதில் ஒரு எண்ணம் தோன்றிற்று. “நான் கருப்பாக
  > இருக்கிறேன். ஆனால் அன்னப் பறவையோ வெண்மையான நிறம்; ”
  >

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s