Archive | June 2016

குட்டி தவளைகளின் கதை

நீதி – நன் நடத்தை / தன்னம்பிக்கை

உபநீதி –  விடாமுயற்சி

Story of Tiny Frogs1

Story of Tiny Frogs2

ஒரு சமயம், குட்டி தவளைகளின் ஒரு கூட்டம், உற்சாகத்துடன் ஒரு மிக உயரமான மரத்தின் உச்சியை தொடுவதை குறிக்கோளாக வைத்து ஒரு போட்டி நடத்தின. போட்டியாளர்களை ஊக்கப்படுத்துவதற்கும், அங்கு வேடிக்கைப் பார்ப்பதற்கும் கூட்டம் கூட்டமாக தவளைகள் வந்தன. போட்டி ஆரம்பித்தது.

Story of Tiny Frogs3மரத்தின் உச்சியை சென்றடைவது மிகக் கடுமையான விஷயம் என்று கூட்டத்தில் இருக்கும் அனைத்து தவளைகளும் சந்தேகப் பட்டன. மிக உயரமான மரம் என்பதனால் வெற்றிப் பெறுவது கடினம் என்று தவளைகள் யோசித்தன. கூட்டம் அதிகமாகி கூச்சலிடத் தொடங்கின.

Story of Tiny Frogs4ஓ, இது மிகக் கடுமையான வழி!”

“தவளைகள் நிச்சயமாக உச்சியைத் தொட முடியாது.”

“மரம் உயரமாக இருப்பதால், வெற்றிப் பெற வாய்ப்பே இல்லை!” என்று கூட்டத்தில் இருந்தவர்கள் கூச்சலிட்டனர்.

Story of Tiny Frogs5

ஒன்றன் பின் ஒன்றாக தவளைகள் மரத்திலிருந்து கீழே விழுந்தன. ஒரு சில தவளைகள் மட்டும் உணர்ச்சிவேகத்தில் மேலே ஏற முயற்சி செய்தன. ஆனால் கூட்டத்தில் இருந்த சிலர், “இது மிகக் கடினம்!!! இந்த குறிக்கோளை அடைவது சாத்தியம் அல்ல” எனக் கூச்சலிட்டு கொண்டிருந்தன.

மேலும், சில தவளைகள் சோர்வாகி போட்டியிலுருந்து விலகின. ஒரே ஒரு சிறு தவளை மட்டும் போட்டியிலிருந்து விலகாமல் மேலும் மேலும் உயரமாக ஏறிச் சென்றது. தனது அற்புதமான முயற்சியால் மரத்தின் உச்சியை சென்றடைந்தது.

Story of Tiny Frogs6

மற்ற எல்லாத் தவளைகளும் வியப்புடன் பார்த்தன. ஆச்சரியத்துடன், இந்த ஒரு தவளையால் மட்டும் எப்படி முடிந்தது என யோசித்தன.

ஒரு போட்டியாளர், இந்த தவளைக்கு தைரியமும், துணிவும் எப்படி வந்தது என கேட்ட பொழுது, வெற்றியாளருக்கு காது கேட்காது என்பது தெரிய வந்தது.

 

நீதி:

எப்பொழுதும் தெளிவாகவும், உறுதியாகவும் இருக்க வேண்டும். உன் அழகான கனவுகளை மற்றவர்கள் உன்னிடமிருந்து பறித்துக் கொள்ள இடம் கொடுக்கக் கூடாது. உன்னை நம்பு!!! அந்த தவளையைப் போல எதிர்மறை வார்த்தைகளை பொருட்படுத்தாமல், குறிக்கோளை சென்றடைய கடினமாக உழைத்தால், வெற்றி நிச்சயம்.

Story of Tiny Frogs7

மொழி பெயர்ப்பு:

ஜெயா, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

உடுமீனின் கதை

story of he star fish picture 1

நீதி – நன் நடத்தை

உபநீதி – தக்க சமயத்தில் உதவி / வித்தியாசத்தை ஏற்படுத்துவது

சிறு துளி பெருவெள்ளம்

அறிவுள்ள மனிதர் ஒருவர், தன் எழுத்துத் திறனை வெளிப்படுத்த சமுத்திரத்திற்குச் செல்வார். கடற்கரையில் சில மணி நேரம் நடந்த பிறகு, எழுத ஆரம்பிப்பது பழக்கமாக ஆயிற்று.

ஒரு நாள், கடலோரமாக உலாவிக் கொண்டிருக்கும் போது, தண்ணீருக்குள் ஒரு மனித உருவம் நடனமாடிக் கொண்டிருப்பது போல பார்த்தார். புன்சிரிப்புடன், வேகமாக நடக்க ஆரம்பித்தார்.

அருகில் சென்ற போது தான், அந்த உருவம் நடனமாடுபவர் அல்ல; கடலோரத்திலிருந்து எதையோ எடுத்து, கடலுக்குள் தூக்கி எறிந்துக் கொண்டிருந்த ஒரு மனிதன் என்று உணர்ந்தார்.

அவர் அருகில் சென்று, “காலை வணக்கம்! நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா?” என அறிவுள்ள மனிதர் கேட்டார்.

சிறிது தயக்கத்துடன், “உடுமீன்களை கடலுக்குள் தூக்கி எறிந்து கொண்டிருக்கிறேன்” என்று பதிலளித்தார்.

ஆச்சரியத்துடன், “ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா” என்று வினவினார்.

உடனே அவர், “சூரியன் உதித்து, அலைகளெல்லாம் மறைந்து கொண்டிருக்கும் சமயம், இந்த உடுமீன்களை கடலுக்குள் போடாவிட்டால்,  அவை இறந்து விடும்” என்று பதிலளித்தார்.

அதற்கு அந்த அறிவுள்ள மனிதர், “பல மைல்கள் தூரம் தண்ணீர் இருப்பதால், எந்த விதமான மாற்றத்தை உங்களால் ஏற்படுத்த முடியும்?” என்று வினவினார்.

story of starfish picture 2அந்த கேள்வியை கேட்டவுடன், இன்னொரு உடுமீனை கடலுக்குள் தூக்கி எறிந்து விட்டு, “இந்த உடுமீனின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் அல்லவா? என்று மிக அழகாக பதிலளித்தார்.

நீதி:

குறைந்தபட்சம், ஒரு மனிதனின் வாழ்க்கையிலாவது மாற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்வோம். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், ஒரு அன்பான செயல், ஆறுதலான சில வார்த்தைகள் என்று நம் எண்ணங்களை திசைத் திருப்பி செயல்பட்டால், மற்றவர்களின் வாழ்க்கையில் புத்துணர்ச்சியோடு ஒரு இன்பத்தையும் ஏற்படுத்தலாம்.  நல்ல எண்ணங்களை மேம்படுத்திக் கொண்டு, பயனுள்ள வாழ்க்கையை வாழ்வோம்.

தக்க சமயத்தில் செய்த உதவி அளவில் சிறிது எனினும், அது உலகைக் காட்டிலும் மிகப் பெரியது.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

 

 

 

 

சிறு துளி பெரு வெள்ளம்

a small act of kindness can bring joy to so many people - picture 2

நீதி – நன் நடத்தை

உபநீதி – அன்புச் செயல் / தக்க சமயத்தில் உதவி 

இரண்டு நண்பர்கள் வயல் வழியாக நடந்து கொண்டிருந்தார்கள். இளையவன், அங்கிருந்த பண்ணையில் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கும் விவசாயியைப் பார்த்தான். அவர் உடைகளை ஒரு ஓரத்தில் சுத்தமாக அடுக்கி வைத்துவிட்டு வேலை செய்து கொண்டிருந்தார். மூத்தவனிடம், “அவர் காலணிகளை ஒளித்து வைத்து வேடிக்கைப் பார்க்கலாம். வேலைக்குப் பிறகு காலணியைத் தேடும் பொழுது, அவரின் உணர்வு வெளிபாடு விலை மதிப்பற்றதாக இருக்கும்!” என கேலி செய்தான்.

மூத்தவன் ஒரு நிமிடம் யோசனை செய்து, “அந்த விவசாயி ஏழையாக தெரிகிறார். அவரின் உடைகளை சற்று பார். இப்படி வேண்டுமானால் செய்யலாமே: ஒவ்வொரு காலணியிலும் ஒரு வெள்ளிக் காசை ஒளித்து வைத்து, நாம் அருகில் இருக்கும் புதர்களில் ஒளிந்துக் கொள்ளலாம்.  கடினமாக உழைத்த பின், அந்த வெள்ளி காசுகளை பார்க்கும் பொழுது, அவரின் உணர்வு வெளிபாடு எப்படி இருக்கின்றது என்று பார்க்கலாமே” என்று எடுத்துச் சொன்னான். அவ்வாறே செய்தனர். மிகக் களைப்புடன் வேலையை முடித்து விட்டு விவசாயி காலணியை அணியும் போது, அடிக்காலின் கீழே அவர் வெள்ளிக் காசை கவனித்தார்.

விரல்களுக்கு நடுவில் அந்த வெள்ளிக் காசை வைத்துக் கொண்டு, யார் அதை வைத்திருப்பார்கள் என்ற யோசனையுடன் அவரைச் சுற்றிப் பார்த்தார். கண்ணுக்கு யாரும் தென்படவில்லை. அவநம்பிக்கையுடன் அந்தக் காசை உற்றுப் பார்த்தார். குழப்பத்தோடு, மற்றொரு காலை காலணிக்குள் நுழைத்த போது, இரண்டாவது வெள்ளிக் காசை கவனித்தார், இப்போது இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

உடனடியாக, அவர் கடவுளுக்கு நன்றி கூறினார். அவர் செலுத்திய நன்றி இரண்டு நண்பர்களுக்கும் காதில் விழுந்தது. அந்த ஏழை விவசாயி எதிர்பாராத உதவியை எண்ணி மன நிறைவோடு ஆனந்தக் கண்ணீரை வெளிப்படுத்தினார். படுத்த படுக்கையாக இருந்த அவரின் மனைவி மற்றும் உணவிற்காக ஏங்கும் குழந்தைகளுக்கு நிவாரணம் கிடைத்ததைப் பற்றியும் கடவுளிடம் சொன்னார். புதர்களில் நண்பர்கள் ஒளிந்திருப்பதை அவர் அறியவில்லை.

சில நிமிடங்களுக்குப் பிறகு, இரண்டு நண்பர்களும் புதரிலிருந்து வெளியே வந்து, வீட்டுக்கு நடக்கும் பொழுது, நெருக்கடி நிலைமையில் இருந்த விவசாயிக்கு உதவி செய்ததை நினைத்து சந்தோஷமாக சென்றனர். அவர்கள் புன்சிரிப்புடன் ஆத்ம திருப்தியோடு இருந்தனர்.

நீதி:

a small act of kindness can bring joy to so many people - picture

ஒரு சிறு உதவி, மற்றவர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம். கொடுப்பவர்களுக்கும், வாங்கிக் கொள்பவர்களுக்கும் மன நிறைவு கிடைக்கும். உதவி செய்ய வாய்ப்புகள் வரும் பொழுது, உடனடியாக அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு செயலில் ஈடுபட வேண்டும்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

நிபந்தனையற்ற அன்பு

நீதி – அன்பு / பச்சாதாபம்

உபநீதி – நம்பிக்கை / ஏற்றுக்கொள்ளுதல் 

unconditional love -  first pictureவெள்ளிக் கிழமை காலை, ரகு வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தான். தன் சம்பள உயர்வைப் பற்றி மேலதிகாரியிடம் கேட்கப் போவதாக மனைவியிடம் கூறினான். நாள் முழுவதும் அவனுக்கு மனநிலை சற்று சஞ்சலமாக இருந்தது. தன் மேலதிகாரி என்ன கூறுவார் என்று பயமும், குழப்பமும் மன நிம்மதியைத் தாக்கியது. மேலதிகாரி குமார் தன் கோரிக்கையை மறுத்து விட்டால் என்ன செய்வது என்று பயந்தான். ரகு கடந்த 18 மாதங்களாக பெயர்பெற்ற ஒரு விளம்பர நிறுவனத்துக்கு கடினமாக உழைத்து, அந்த நிறுவனத்தின் லாபங்களைப் பல மடங்கு அதிகரித்திருந்தான்; சம்பள உயர்வுக்கு  அவன் தகுதியுள்ளவன் தான்.

ரகு அந்த சிந்தனையுடன் அலுவலகத்திற்குச் சென்றான். பிற்பகல் வேளையில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தனது மேலதிகாரியைச்   சந்தித்தான். வியாபார செலவுகளில் எப்போதும் சிக்கனமாக இருப்பவர் குமார். ஆனால் அன்று ஆச்சரியமாக  ரகுவின் சம்பள  உயர்வு கோரிக்கையை உடனடியாக ஏற்றுக் கொண்டார்.

ரகு சந்தோஷமாக வீடு திரும்பினான். சங்கீதா மேஜையை மிக அழகாக அலங்கரித்து, அவனுக்கு பிடித்த உணவு வகைகளை சமைத்து வைத்திருந்தாள். வீட்டில் மெழுகுவர்த்திகள் ஏற்றி இருந்தன; நறுமணம் வீசியது; அலுவகத்திலிருந்து செய்தி கிடைத்திருக்கும் என ரகு நினைத்தான்.

unconditional love - table laid with foodஅப்பொழுது தன் தட்டிற்கு அருகில் ஒரு வாழ்த்து அட்டையைப் பார்த்தான். சங்கீதா எழுதிய ஒரு அன்பான குறிப்பு – “என் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களுக்கு சம்பள உயர்வு கிடைத்திருக்கும் என்று எனக்குத் தெரியும். எனது அன்பை வெளிப்படுத்த நல்ல உணவை தயாரித்திருக்கிறேன். உங்களின் சாதனை எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது” என்று எழுதப்பட்டிருந்தது. இதைப் படித்த ரகு, சங்கீதா அவன் மீது வைத்திருக்கும் அக்கறையைப்  புரிந்து கொண்டான்.

unconditional love - fruits pictureஉணவு முடிந்ததும்,  பழங்கள் சாப்பிட சமையலறைக்குச் சென்றான். அங்கு இரண்டாவது கடிதம் சங்கீதாவின் கைப்பையிலிருந்து கீழே விழுந்திருந்தது. அதை எடுத்து படித்தான். அதில் “உங்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கவில்லை என்ற வருத்தம் வேண்டாம். நீங்கள் கடினமாக உழைப்பவர்; ஊதியத்திற்குத் தகுதியானவர் கூட. உங்களுக்கு சம்பள உயர்வு கிடைக்காவிட்டாலும் என்னுடைய அன்பு என்றும் மாறாது. அதை வெளிப்படுத்த இந்த சுவையான உணவை சமைத்திருக்கிறேன்” என்று எழுதியிருந்தது.

ரகு உணர்ச்சிவசப்பட்டு நின்றான். எந்த சந்தர்ப்பச் சூழ்நிலையிலும், சங்கீதாவின் மாறாத அன்பை ஏற்றுக் கொண்டான். அவளுடைய ஆதரவு அவனுக்கு முழுமையாக இருந்தது.

நீதி:

unconditional love - final moralநமது வெற்றி தோல்வியைப் பாராமல், ஒருவன் நம் மீது அன்பு வைத்தால், நிராகரிப்பு பற்றிய பயம் குறைகின்றது. நிபந்தனையற்ற அன்பு என்ற நற்குணத்தை வளர்த்துக் கொண்டால், நாமும் நன்றாக இருக்கலாம்; மற்றவர்களின் வாழ்க்கையிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தலாம். எதிர்ப்பார்ப்பு இல்லாமல் எல்லோரிடமும் அன்பாக இருந்தால், ஏற்புத்தன்மை மற்றும் தெளிவாக சிந்திக்கும் மனப்பான்மையையும் மேம்படுத்த உதவுகின்றது.

மொழி பெயர்ப்பு:

ஜெயா, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com