நிபந்தனையற்ற அன்பு

நீதி – அன்பு / பச்சாதாபம்

உபநீதி – நம்பிக்கை / ஏற்றுக்கொள்ளுதல் 

unconditional love -  first pictureவெள்ளிக் கிழமை காலை, ரகு வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தான். தன் சம்பள உயர்வைப் பற்றி மேலதிகாரியிடம் கேட்கப் போவதாக மனைவியிடம் கூறினான். நாள் முழுவதும் அவனுக்கு மனநிலை சற்று சஞ்சலமாக இருந்தது. தன் மேலதிகாரி என்ன கூறுவார் என்று பயமும், குழப்பமும் மன நிம்மதியைத் தாக்கியது. மேலதிகாரி குமார் தன் கோரிக்கையை மறுத்து விட்டால் என்ன செய்வது என்று பயந்தான். ரகு கடந்த 18 மாதங்களாக பெயர்பெற்ற ஒரு விளம்பர நிறுவனத்துக்கு கடினமாக உழைத்து, அந்த நிறுவனத்தின் லாபங்களைப் பல மடங்கு அதிகரித்திருந்தான்; சம்பள உயர்வுக்கு  அவன் தகுதியுள்ளவன் தான்.

ரகு அந்த சிந்தனையுடன் அலுவலகத்திற்குச் சென்றான். பிற்பகல் வேளையில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தனது மேலதிகாரியைச்   சந்தித்தான். வியாபார செலவுகளில் எப்போதும் சிக்கனமாக இருப்பவர் குமார். ஆனால் அன்று ஆச்சரியமாக  ரகுவின் சம்பள  உயர்வு கோரிக்கையை உடனடியாக ஏற்றுக் கொண்டார்.

ரகு சந்தோஷமாக வீடு திரும்பினான். சங்கீதா மேஜையை மிக அழகாக அலங்கரித்து, அவனுக்கு பிடித்த உணவு வகைகளை சமைத்து வைத்திருந்தாள். வீட்டில் மெழுகுவர்த்திகள் ஏற்றி இருந்தன; நறுமணம் வீசியது; அலுவகத்திலிருந்து செய்தி கிடைத்திருக்கும் என ரகு நினைத்தான்.

unconditional love - table laid with foodஅப்பொழுது தன் தட்டிற்கு அருகில் ஒரு வாழ்த்து அட்டையைப் பார்த்தான். சங்கீதா எழுதிய ஒரு அன்பான குறிப்பு – “என் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களுக்கு சம்பள உயர்வு கிடைத்திருக்கும் என்று எனக்குத் தெரியும். எனது அன்பை வெளிப்படுத்த நல்ல உணவை தயாரித்திருக்கிறேன். உங்களின் சாதனை எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது” என்று எழுதப்பட்டிருந்தது. இதைப் படித்த ரகு, சங்கீதா அவன் மீது வைத்திருக்கும் அக்கறையைப்  புரிந்து கொண்டான்.

unconditional love - fruits pictureஉணவு முடிந்ததும்,  பழங்கள் சாப்பிட சமையலறைக்குச் சென்றான். அங்கு இரண்டாவது கடிதம் சங்கீதாவின் கைப்பையிலிருந்து கீழே விழுந்திருந்தது. அதை எடுத்து படித்தான். அதில் “உங்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கவில்லை என்ற வருத்தம் வேண்டாம். நீங்கள் கடினமாக உழைப்பவர்; ஊதியத்திற்குத் தகுதியானவர் கூட. உங்களுக்கு சம்பள உயர்வு கிடைக்காவிட்டாலும் என்னுடைய அன்பு என்றும் மாறாது. அதை வெளிப்படுத்த இந்த சுவையான உணவை சமைத்திருக்கிறேன்” என்று எழுதியிருந்தது.

ரகு உணர்ச்சிவசப்பட்டு நின்றான். எந்த சந்தர்ப்பச் சூழ்நிலையிலும், சங்கீதாவின் மாறாத அன்பை ஏற்றுக் கொண்டான். அவளுடைய ஆதரவு அவனுக்கு முழுமையாக இருந்தது.

நீதி:

unconditional love - final moralநமது வெற்றி தோல்வியைப் பாராமல், ஒருவன் நம் மீது அன்பு வைத்தால், நிராகரிப்பு பற்றிய பயம் குறைகின்றது. நிபந்தனையற்ற அன்பு என்ற நற்குணத்தை வளர்த்துக் கொண்டால், நாமும் நன்றாக இருக்கலாம்; மற்றவர்களின் வாழ்க்கையிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தலாம். எதிர்ப்பார்ப்பு இல்லாமல் எல்லோரிடமும் அன்பாக இருந்தால், ஏற்புத்தன்மை மற்றும் தெளிவாக சிந்திக்கும் மனப்பான்மையையும் மேம்படுத்த உதவுகின்றது.

மொழி பெயர்ப்பு:

ஜெயா, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s