சிறு துளி பெரு வெள்ளம்

a small act of kindness can bring joy to so many people - picture 2

நீதி – நன் நடத்தை

உபநீதி – அன்புச் செயல் / தக்க சமயத்தில் உதவி 

இரண்டு நண்பர்கள் வயல் வழியாக நடந்து கொண்டிருந்தார்கள். இளையவன் அங்கிருந்த பண்ணையில் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கும் விவசாயியைப்  பார்த்தான். அவர் உடைகளை ஒரு ஓரத்தில் சுத்தமாக அடுக்கி வைத்துவிட்டு வேலை செய்து கொண்டிருந்தார். மூத்தவனிடம், “அவர் காலணிகளை ஒளித்து வைத்து வேடிக்கைப் பார்க்கலாம். வேலைக்குப் பிறகு காலணியைத் தேடும் பொழுது, அவரின் உணர்வு வெளிபாடு விலை மதிப்பற்றதாக இருக்கும்!” என இளையவன் கேலி செய்தான்.

மூத்தவன் ஒரு நிமிடம் யோசனை செய்து விட்டு, “அந்த விவசாயி ஏழையாகத் தெரிகிறார். அவரின் உடைகளை சற்று பார். இப்படி வேண்டுமானால் செய்யலாமே! ஒவ்வொரு காலணியிலும் ஒரு வெள்ளிக் காசை ஒளித்து வைத்து, நாம் அருகில் இருக்கும் புதர்களில் ஒளிந்துக் கொள்ளலாம்.  கடினமாக உழைத்த பின், அந்த வெள்ளி காசுகளைப் பார்க்கும் பொழுது, அவரின் உணர்வு வெளிப்பாடு எப்படி இருக்கின்றது என்று பார்க்கலாமே” என்று எடுத்துச் சொன்னான்; அவ்வாறே செய்தனர். மிகக் களைப்புடன் வேலையை முடித்து விட்டு விவசாயி காலணியை அணியும் போது, அடிக்காலின் கீழே வெள்ளிக் காசை கவனித்தார்.

விரல்களுக்கு நடுவில் அந்த வெள்ளிக் காசை வைத்துக் கொண்டு, யார் அதை வைத்திருப்பார்கள் என்ற யோசனையுடன் அவரைச் சுற்றிப் பார்த்தார். கண்ணுக்கு யாரும் தென்படவில்லை. அவநம்பிக்கையுடன் அந்தக் காசை உற்றுப் பார்த்தார். குழப்பத்தோடு, மற்றொரு காலை காலணிக்குள் நுழைத்த போது, இரண்டாவது வெள்ளிக் காசை கவனித்தார்; இப்போது இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

உடனடியாக, கடவுளுக்கு நன்றி கூறினார். இரண்டு நண்பர்களுக்கும், அவர் செலுத்திய நன்றி காதில் விழுந்தது. அந்த ஏழை விவசாயி எதிர்பாராத உதவியை எண்ணி மன நிறைவோடு ஆனந்தக் கண்ணீரை வெளிப்படுத்தினார். படுத்த படுக்கையாக இருந்த அவரின் மனைவி மற்றும் உணவிற்காக ஏங்கும் குழந்தைகளுக்கு நிவாரணம் கிடைத்ததைப் பற்றியும் கடவுளிடம் சொன்னார். புதர்களில் நண்பர்கள் ஒளிந்திருப்பதை அவர் அறியவில்லை.

சில நிமிடங்களுக்குப் பிறகு, இரண்டு நண்பர்களும் புதரிலிருந்து வெளியே வந்து, வீட்டுக்கு நடக்கும் பொழுது, நெருக்கடி நிலைமையில் இருந்த விவசாயிக்கு உதவி செய்ததை நினைத்து சந்தோஷமாக சென்றனர்; புன்சிரிப்புடன் ஆத்ம திருப்தியோடு இருந்தனர்.

நீதி:

a small act of kindness can bring joy to so many people - picture

ஒரு சிறு உதவி, மற்றவர்களுக்கு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம். கொடுப்பவருக்கும் சரி, வாங்கிக் கொள்பவருக்கும் சரி மன நிறைவு கிடைக்கும். உதவி செய்ய வாய்ப்புகள் வரும் பொழுது, உடனடியாக பற்றிக் கொண்டு செயலில் ஈடுபட வேண்டும்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s