காந்திஜியின் நேர்மை

நீதி – உண்மை

உப நீதி – நேர்மை

A portrait of Mahatma Gandhi when he was seven years old.

மோகன்  கூச்ச சுபாவமுடைய மாணவன். பள்ளிக்கூட மணி ஓசை கேட்டவுடன் தனது புத்தகங்களை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு விரைந்து செல்வான். மற்ற  மாணவர்கள்  நடு வழியில் நின்று விடுவார்கள், சிலர் பேசுவதற்கும், பலர் விளையாடுவதற்கும். மற்றவர்கள் அவனைப் பார்த்து கேலி செய்வார்களோ என்ற பயத்தினால்  மோகன் நேராக வீட்டிற்குச் சென்றான்.

ஒரு நாள், அனைத்துப் பள்ளிகளின் மேற்பார்வையாளர் திரு. கில்ஸ் என்றவர் பள்ளிக்கு வருகை புரிந்தார். அவர் வகுப்பில் உள்ள சிறுவர்களுக்கு ஐந்து ஆங்கில வார்த்தைகளைக் கொடுத்து, எழுத்துக்கூட்டி எழுதச் சொன்னார்.  மோகன் நான்கு வார்த்தைகளைச் சரியாக எழுதினான். இறுதியில் கெட்டில் என்ற வார்த்தையை  அவனால் சரியாக எழுத முடியவில்லை. அதைக் கவனித்த வகுப்பு ஆசிரியர் மேற்பார்வையாளர் பின்னால் நின்று கொண்டு,  பக்கத்தில் அமர்ந்திருக்கும் மாணவனின்  சிலேட்டிலிருந்து எழுதச் சொன்னார்; மோகன் அதைப் பொருட்படுத்தவில்லை. மற்ற சிறுவர்கள் அனைவரும் ஐந்து வார்த்தைகளையும் சரியாக எழுதி இருந்தார்கள். ஆனால் மோகன் நான்கு வார்த்தைகளை மட்டுமே எழுதி இருந்தான்.

மேற்பார்வையாளர் சென்ற பிறகு, ஆசிரியர் மோகனை, “பக்கத்தில் இருக்கும் மாணவனின் சிலேட்டிலிருந்து பார்த்து எழுதச் சொன்னேன்;  உன்னால் அதைக் கூட சரியாக செய்ய முடியவில்லையா?” என்று கோபமுற்றார். வகுப்பில் உள்ள அனைவரும் சிரித்தனர்.

அன்று மாலை மோகன் வீட்டிற்குச் செல்லும் போது வருத்தம் அடையவில்லை. தான் செய்தது சரிதான் என்று அவன் எண்ணினான். ஆசிரியர் அவனை ஏமாற்றச் சொன்னது தான் மிகவும் வேதனையாக இருந்தது.

நீதி:

gandhijis honesty picture 2நேர்மையே சிறந்த கொள்கை. நாணயமற்ற வாழ்க்கை வெற்றிக்கு வழி வகுக்காது. குழந்தைகளுக்குச் சிறு வயதிலிருந்து நற்பண்புகளான நேர்மை மற்றும் உண்மையின் முக்கியத்துவத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும். அப்போது தான், வாழ்க்கையில் பேரின்பமும், மன நிறைவும் இருக்கும்.

மொழி பெயர்ப்பு:

ஜெயா, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s