மன நிம்மதிக்காக அலைந்த பணக்கார மனிதன்

நீதி –  செய்நன்றி 

உபநீதி – சமாதானம் / மன நிறைவு 

பணக்கார மனிதன் ஒருவன், பணத்தால் வாங்கக் கூடிய அனைத்து  இன்பங்களையும் அனுபவித்தும் கூட வாழ்க்கையில் மன நிறைவு இல்லாமல் தவித்தான்rich man searching for peace of mind2. rich man searching for peace of mind1உண்மையான மன நிம்மதி எங்கே கிடைக்கும் என்று அறியாமல் அலைந்து கொண்டிருந்தான். பல ஞானிகளிடம் விசாரித்துக் கடவுள் வழிபாடு மற்றும் பலவிதமான சடங்கு முறைகள் செய்த போதிலும், பலன் ஒன்றும் கிடைக்கவில்லை.

இறுதியாக, ஒரு ஞானியிடம் சென்று, அவரைத் தொடர்ந்து சித்திரவதை செய்து, தன் துன்பங்களை எடுத்துரைத்தான். “ஒவ்வொரு நாளும், நாம் வாழும் வாழ்க்கையில் ஒரு நாள் குறைவாகிக் கொண்டிருக்கிறது. இந்த வரையறுக்கப்பட்ட வாழ்க்கையில் நீங்கள் என்ன உதவி செய்கின்றீர்கள்? நீங்களெல்லாம் ஒரு ஞானியா? சரியான பாதையை எனக்கு காண்பிக்க உங்களால் முடியவில்லை. எனக்கு ஒரு நாளில் 24 rich man searching for peace of mind3மணி நேரம் முழுவதும் இந்த குறிக்கோளை அடைவதில் ஒதுக்க முடியும்; வேலை செய்து பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியமில்லை. எனக்கு குழந்தைகளும் இல்லை. நான் சம்பாதித்த பணமே 10 ஜென்மங்களுக்குத் தாராளமாக போதும்” என்றான். இந்த ஞானி உடனடியாக பணக்காரனை இஸ்லாமிய மறைமெய்ஞானி ஒருவரிடம் அனுப்பினார். எல்லோரும் அந்த ஞானியை தன்னிலை மறந்த ஒருவராக நினைத்த போதிலும், உண்மையில் நிதான புத்தியுடன் தான் செயல்பட்டார். பல ஞானிகள் தங்கள் சீடர்களை அவரிடம் அனுப்பினர்.

பணக்காரன் ஒரு பெரிய பையில் வைரம், மாணிக்கம், நீலம் மற்றும் மரகதம் நிரப்பி, மரத்தடியில் அமர்ந்திருந்த மெய்ஞானியிடம் rich man searching for peace of mind4சென்றான். அவனுடைய வாழ்க்கையின் சோகக் கதையைச் சொன்னான்.  “என்னிடம் லட்ச கணக்கில் பணம் இருக்கிறது என்று உங்களிடம் தெரிவிக்கத் தான், பையில் விலை மதிப்புள்ள பொருள்களைக் கொண்டு வந்திருக்கிறேன். எனக்கு மன அமைதி வேண்டும்”  என்றான்.  உடனே மெய்ஞானி, “நான் கொடுக்கிறேன்rich man searching for peace of mind5. தயாராக இருக்கவும்!” என்று சொன்னவுடன் பணக்காரனுக்கு அதிசயமாக இருந்தது. பல ஞானிகளைப் பார்த்திருக்கிறோம், ஆனால் இவ்வளவு விரைவாக மன நிம்மதியை கொடுக்க ஒருவர் கூட முன் வந்ததில்லை என்ற எண்ணத்துடன் பார்த்தான். தன்னிலை மறந்த ஞானி தானோ என்ற சந்தேகம் இருந்தது. சிறு தயக்கத்துடன், “தயாராக இருக்கிறேன்” என்று சொன்ன அடுத்த நிமிடமே அந்த விலையுயர்ந்த பையைத் தூக்கிக் கொண்டு ஞானி ஓடினார்.

rich man searching for peace of mind6அந்தச் சிறு கிராமத்தில் இருக்கும் அனைத்து வீதிகளையும் மெய்ஞானி தெரிந்து வைத்திருந்தார். பணக்காரன் வாழ்க்கையில் இப்படி ஓடினதில்லை. ஞானியைப் பின்தொடர்ந்து பணக்காரனும் ஓடினான். “நீ என்னை ஏமாற்றி விட்டாய்! இவர் ஞானி அல்ல. ஏதோ சூழ்rich man searching for peace of mind7ச்சி செய்கிறார்” என்று பணக்காரன் கூச்சலிட்டான். அவன் பருமனாக இருந்ததனால் வேகமாக ஓடவும் முடியவில்லை. ஞானி பல வீதிகளுக்குள் சென்றார். கூட்டம் கூட்டமாக மக்கள் இந்த வேடிக்கையைப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஒருவர் கூட பணக்காரனின் உதவிக்கு வரவில்லை. அந்த ஞானி ஏதோ காரணத்திற்காகச் செய்கிறார் என்று புரிந்து கொண்டனர்.

கடைசியில், அந்த பணக்காரன் ஒரு மரத்தடியில் வந்து சேர்ந்தான், அங்கு ஞானி அந்தப் பையுடன் காத்துக் கொண்டிருந்தார். பணக்காரன் கோபத்தில் அர்த்தமற்ற வார்த்தைகளைப் பேசிய போது, “இந்த முட்டாள்தனத்தை நிறுத்து; rich man searching for peace of mind8பையை எடுத்துக் கொள்” என்று ஞானி அதட்டினார்.

பணக்காரன் பையை வேகமாகப் பற்றிக் கொண்டான். உடனடியாக ஞானி, “இப்போது எப்படி இருக்கிறது?” என்று கேட்டதற்கு, “நான் மன நிம்மதியுடன் இருக்கிறேன்” என்று பதிலளித்தான். அதற்கு ஞானி, “நான் உனக்கு மன நிம்மதி கொடுக்கின்றேன் என்ற வாக்கைக் காப்பாற்றி விட்டேன்” என்று கூறி ஒருவரையும் இனிமேல் மன நிம்மதி வேண்டும் என்று கேட்கக் கூடாது என்ற அறிவுரையும் கொடுத்தார். மேலும், மிக அழகான வார்த்தைகளையும் கூறினார். “உனக்கு வாழ்க்கையில் எல்லாம் வழங்கப்பட்டதால், அதன் அருமை புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த விலையுயர்ந்த கற்களைத் தொலைத்த பிறகு, அதன் அருமை  உனக்குப்  புரிகிறது” என்றார்.

நீதி

கடவுள் உனக்கு அன்பாக அளித்த பொக்கிஷங்களை நினைவில் வைத்துக் கொண்டு, அதன் அருமையைப் புரிந்து கொள்ளவும். பல சமயங்களில், ஒரு பொருள் தொலைந்த பிறகு தான் அதன் அருமை புரிகிறது. பிரம்மாண்டமான மாளிகைகளில் இருப்பவர்களுக்கு அதன் அருமை புரிவதில்லை. பண வசதி இருக்கும் பலர் ஏழ்மையின் கொடூரங்களைப் புரிந்து கொள்வதில்லை. கடவுளால் அன்பாக வழங்கப்பட்ட பொக்கிஷங்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். நல்ல விஷயங்களாக இருந்தால், மற்றவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள். இல்லாதவர்களைப் பார்த்து கடவுள் நமக்கு வழங்கியிருப்பதை நினைத்து  மகிழ்ச்சியடைந்து வாழ்க்கையில் செயற்பட்டால், மன அமைதி கிடைக்கும்.

rich man searching for peace of mind9

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s