ஒவ்வொரு நிமிடமும் கடவுள் நமக்குக் கொடுத்துள்ள பரிசு

நீதி – நம்பிக்கை

உபநீதி – சரியான மனப்பான்மை

each-day-is-a-gift-1ஒரு 92 வயதுள்ள பெண்மணி, பார்வையற்றவராக இருந்தாலும், தினமும் காலை  எட்டு மணிக்குள் அழகாக தன்னை அலங்கரித்துக் கொண்டு, பார்ப்பதற்கு தூய்மையாக இருப்பார். மன தைரியத்துடனும், நம்பிக்கையுடனும் இருந்த இப்பெண்மணி ஒரு முதியோர் இல்லத்திற்கு நிரந்தரமாக வசிக்க சென்றார்.

கணவருடன் 70 ஆண்டுகள் வாழ்ந்த பிறகு, சமீபத்தில் அவர் இறந்து போனதால் இந்த முடிவு எடுக்கப் பட்டது.

முதியோர் இல்லத்தின் வரவேற்பிடத்தில் பல மணி நேரம் காத்திருந்தார். பிறகு, அவர் அறை தயாராக இருக்கிறது என்று தெரிந்தவுடன், முகத்தில் ஒரு அழகான புன்சிரிப்பு தெரிந்தது.

அப்பெண்மணி மெதுவாக தன் வாக்கரை உபயோகித்து மின்தூக்கியை நோக்கிச் சென்றார். உடனடியாக, அந்த சிறிய அறையைப் பற்றி விவரித்தேன். அறையின் ஜன்னலில் இருக்கும் அழகான மலர் துவாரத்தைப் பற்றி சொன்னவுடன், “எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது,” என்று சொன்னார். ஒரு 8 வயது குழந்தைக்கு பரிசாக ஒரு நாய்க்குட்டியை கொடுத்தால் என்ன ஆர்வம் இருக்குமோ அவ்வளவு ஆர்வம் அந்த பெண்மணியின் கண்களில் தென்பட்டது.

“சிந்துமா, நீங்கள் அறையை பார்க்கவே இல்லையே………..சற்று காத்திருங்கள்” என்றேன்.

“அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை,” என்றார். “மகிழ்ச்சி என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும். மனதளவில் எனக்கு பிடித்து விட்டது என்று நினைத்தால், மகிழ்ச்சியாக இருப்பதற்கு வேறு எந்தக் காரணமும் தேவையில்லை. தினமும் காலையில் கண் முழித்த பிறகு நான் எடுக்கும் முடிவுகள் என் கையில் உள்ளன; உடம்பில் இருக்கும் கஷ்டங்களை நினைத்து படுக்கையில் படுத்துக் கொண்டு இருக்கலாம் அல்லது நன்றாக இருக்கும் உறுப்புகளுக்காக கடவுளிடம் நன்றி செலுத்தலாம். ஒவ்வொரு நிமிடமும் கடவுள் நமக்கு கொடுத்துள்ள பரிசு. நான் வாழும் வரை, குறைகளை பொருட்படுத்தாமல், நிறைவுகளை நினைத்து சந்தோஷமாக இருப்பேன்” என்று அழகாக விவரித்தார்.

மேலும், “நம் வாழ்க்கை ஒரு வங்கியைப் போல; நாம் முற்காலத்தில் சேமிப்பதின் விளைவு பிற்காலத்தில் கிடைக்கும். அதனால், எல்லோரும் சந்தோஷமான நினைவுகளை அதில் செலுத்த வேண்டும். நான் இன்றும் அந்த கொள்கையை தான் பின்பற்றுகிறேன்” என்றார்.

புன்சிரிப்புடன் அவர் சொன்ன வார்த்தைகள்:

each-day-is-gift-2“சந்தோஷமாக இருக்க, 5 விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்:

இருதயத்திலிருந்து வெறுப்பு அல்லது விரோதத்தை நீக்க வேண்டும்.

மனதிலிருந்து கவலைகளை  அகற்ற வேண்டும்.

எளிமையான வாழ்க்கையை வாழ வேண்டும்.

அதிகமாகக் கொடுக்கவும்.

குறைவாக எதிர்பார்க்கவும்.”

நீதி

சரியான மனப்பான்மை தான் வாழ்க்கையில் முக்கியம். சந்தோஷம் வெளிப்புறமான காரணிகளைச் சார்ந்து அல்ல. நம் அணுகுமுறையும், மனப்பான்மையும் சரியாக இருக்க வேண்டும். நமது சந்தோஷம் நம் கையில் தான் இருக்கின்றது. இந்த உண்மையைப் புரிந்து கொண்டால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

Advertisements

2 thoughts on “ஒவ்வொரு நிமிடமும் கடவுள் நமக்குக் கொடுத்துள்ள பரிசு

  1. கதையில் சொன்ன ஐந்து விஷயங்களும் மணியான வார்த்தைகள்.அவசியம் கடைபிடிக்க வேண்டியவை. நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s