யானையும் அதன் வயதான பார்வையற்ற தாயும்

நீதி – நன் நடத்தை / அன்பு 

உபநீதி – பெற்றோருக்கு மரியாதை, கடமை உணர்ச்சி  

The elephant and old blind mother1

பல வருடங்களுக்கு முன்பு, இமய மலைக் குன்றுகளின் தாமரைத் தடாகத்தின் அருகில், புத்தர் ஒரு சிறு யானையாகப் பிறவி எடுத்திருந்தார். யானைக் குட்டி தூய வெண்மை நிறத்துடன், பவழ நிறப் பாதங்களுடன் மிகவும் அழகாக இருந்தது. அதன் துதிக்கை வெள்ளிக் கயிறு போல மின்னியது. அதன் தந்தங்கள் வில் போல் வளைந்து இருந்தன.

யானைக் குட்டி தன் தாயைப் பின் தொடர்ந்து, எல்லா இடங்களுக்கும் சென்றது. தாய் கொழுந்து இலைகளையும், பழுத்த ருசியான மாம்பழங்களையும் உயரமான மரங்களிலிருந்து பறித்து “முதலில்The elephant and old blind mother2 உனக்கு, பிறகு எனக்கு” என்று கூறி குட்டிக்கு கொடுத்து வந்தது. நறுமணம் கொண்ட தாமரை மலர்களுக்கிடையில், தாமரைத் தடாகத்தில் இருந்த குளிர்ந்த நீரால் குட்டி யானையை குளிப்பாட்டியது; தன் துதிக்கையில் தண்ணீரை நிரப்பி குட்டி யானையின் உடம்பு பளபளவென மின்னும் வரை, உடம்பு முழுவதும் தண்ணீரை வாரி இறைத்தது. குட்டி யானையும், தன் துதிக்கையில் நீரை நிரப்பி, குறி பார்த்து, தன் தாயாரின் கண்களுக்கு மத்தியில் பீச்சாங்குழல் போல தண்ணீரை வீசியது. தாயாரும் கண் கொட்டாமல், குட்டியுடன் இவ்வாறே விளையாடியது. சற்று நேரத்திற்குப் பிறகு, இரு யானைகளும் மிருதுவான மணலில், தன் துதிக்கைகளைச் The elephant and old blind mother3சுருட்டி, ஓய்வு எடுத்தன. தாய் யானை, ஆப்பிள் மரத்தின் நிழலில் ஓய்வு எடுத்தவாறு, குட்டி தன் நண்பர்களுடன் விளையாடுவதைப் பார்த்து மகிழ்ந்தது.

சில காலங்களுக்குப் பிறகு குட்டி யானை வளர்ந்து, காளை போல உயரமாகவும், பலசாலியாகவும் திகழ்ந்தது. குட்டி யானை வளர வளர, தாய் யானையும் முதுமை அடைந்தது. அதன் தந்தங்கள் உடைந்து மஞ்சள் நிறமாகியது. அத்துடன் தாய் யானை தன் கண் பார்வையையும் இழந்தது. இப்பொழுது இளம் யானை தினமும் கொழுந்து இலைகளையும், பழுத்த ருசியான மாம்பழங்களையும் உயரமான மரங்களிலிருந்து பறித்துத் தன் தாயாரிடம், “முதலில் உனக்கு, பிறகு எனக்கு” எனக் கூறிக் கொடுக்க ஆரம்பித்தது.The elephant and old blind mother5

சிறு வயதில் தன் தாய் செய்த அனைத்தையும் இப்பொழுது கைமாறாக தாய்க்கு செய்ய ஆரம்பித்தது. ஒரு நாள், வேட்டையாட வந்த அரசர், இந்த அழகான வெள்ளை யானையைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, “மிக அழகான மிருகம்; நான் இதன் மீது சவாரி செய்ய வேண்டும்” என நினைத்தார். ஆதலால் இளம் யானையைப் பிடித்து, தன் அரண்மனைக் கொட்டிலில் வைத்தார். அதற்குப் பட்டுத் துணியும், ஆபரணங்களும் அணிவித்து, தாமரை மலர்களால் ஆன மாலையையும் சூட்டினார். சுவையான புற்களையும், சாறு நிறைந்த பழங்களையும் அதற்கு உணவாக வைத்து, சுத்தமான நீரால், தண்ணீர்த் தொட்டியை நிரப்பினார்.

The elephant and old blind mother6ஆனால், இளம் யானை இவை எதையும் உண்ணவும் இல்லை, அருந்தவும் இல்லை. அழுது அழுது,  நாளுக்கு நாள் உடல் இளைத்தது. அதற்கு அரசர், “சிறந்த மிருகம்! பட்டு, ஆபரணங்கள், நல்ல சுவையான உணவு,  சுத்தமான நீர் இவற்றை எல்லாம் கொடுத்தாலும், உண்ணாமல், அருந்தாமல் இருக்கிறாய். உனக்கு எது தான் மகிழ்ச்சி தரும்?” எனக் கேட்டார். அதற்கு இளம் யானை, “உடையோ, ஆபரணமோ, உணவோ எனக்கு மகிழ்ச்சி அளிக்காது. கண் பார்வையற்ற என் தாய், காட்டில் தனியாக இருக்கிறார். அவரை கவனித்துக் கொள்ள யாரும் இல்லை. நான் இறப்பதாக இருந்தாலும் இந்த உணவையோ, தண்ணீரையோ, முதலில் என் தாயாருக்குக் கொடுக்கும் வரை உண்ணவோ அருந்தவோ மாட்டேன்” என்றது.

அரசர், “இவ்வளவு அன்பை நான் மனிதர்களிடம் கூட கண்டதில்லை. இனி உன்னை அடைத்து வைப்பது சரியல்ல” என்று கூறி இளம் யானையை விடுதலை செய்தார். இளம் யானை காட்டுக்கு ஓடோடிச் சென்று, தன் தாயாரைத் தேடியது. தாமரைத் தடாகத்தின் அருகில், மணலில் தன் தாய் நடக்க முடியாமல், பலவீனமாகப் படுத்திருப்பதைக் கண்டது. கண்ணீருடன், தன் துதிக்கையில் நீரை நிரப்பி, உடம்பு பளபளவென மின்னும் வரை, தாயின் உடம்பின் மீது வாரி இறைத்தது. உடனே தாயார், “மழை பொழிகிறதா, அல்லது என் மகன் திரும்பி வந்து விட்டானா?” எனக் கேட்டது. “உன் மகன் வந்து விட்டேன். அரசர் என்னை விடுதலை செய்து விட்டார்” என இளம் யானை கூறி, தன் தாயாரின் கண்களைத் தண்ணீரால் சுத்தம் செய்தது. அங்கு ஒரு அற்புதம் நிகழ்ந்தது! தாய் யானைக்குக் கண்பார்வை திரும்பவும் வந்து விட்டது. தாய் யானை, “நான் என் மகனுடன் சந்தோஷமாக இருப்பது போல, அரசரும் தன் மகனுடன் சந்தோஷமாக இருக்கட்டும்” என வாழ்த்தியது.

இளம் யானை கொழுந்து இலைகளையும், பழுத்த ருசியான பழங்களையும் பறித்து, “முதலில் நீ, பிறகு நான்” என்று கூறியவாறு தாய் யானைக்குக் கொடுத்தது.

நீதி

The elephant and old blind mother7நம் பெற்றோர் நம்மிடம் அளவற்ற அன்பு வைத்திருக்கிறார்கள். “மாதா, பிதா, குரு, தெய்வம்” என நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். (முதலில் தாய், தந்தை, குரு, பிறகு தெய்வம்)

நம் வாழ்வில் தாயாருக்கு உயர்ந்த ஸ்தானம் கொடுக்கப் பட்டிருக்கிறது. நாம் பெற்றோரிடம், முக்கியமாக அவர்களுக்குத் தேவையான போது, அன்புடனும், மரியாதையுடனும் நடந்து கொள்ள வேண்டும்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி,  ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s