ஒரு துறவியின் மன உறுதி (தீர்மானம்)

நீதி –  நன் நடத்தை

உபநீதி – மன உறுதி, நம்பிக்கை

a tapasvis determination - picture 1பலர் கடவுளை மகிழ்விக்க வேண்டும் என்ற ஒரு இறுதி இலக்கிற்காகத் தவம் செய்வார்கள். ஒரு முறை, துறவி ஒருவர்  இந்த புனிதமான நோக்கத்துடன், ஒரு புளிய மரத்தினடியில் அமர்ந்து தவம் புரிய ஆரம்பித்தார். இறைவனை மகிழ வைத்தால், ஒரு அற்புதமான  காட்சியை அளிப்பார் என்ற நம்பிக்கையுடன் இருந்தார். அதனால் தினமும் அத்துறவி, அந்த மரத்தை வலம் வந்து அதன் இலைகளையே தனது உணவாக உண்டு வந்தார்.

ஒரு நாள், நாரத மகரிஷி வைகுண்டம் சென்று கொண்டிருந்த பொழுது, இந்தத் a tapasvis deermination - picture 2துறவியைப் பார்த்தவுடன், அவரைச் சந்திக்க வந்தார். நாரத ரிஷியைக் கண்டவுடன் துறவி அவரை வணங்கினார். உடனே, துறவியைப் பார்த்து நாரதர், “நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்குத் துறவி கடவுளின் அருளைப் பெறுவதற்காகத் தாம் எடுத்த முடிவைப் பற்றிக் கூறினார். மேலும் துறவி அவரிடம், “நாரத மகரிஷியே! நான் கடவுள் காட்சி அளிப்பார் என்ற நம்பிக்கையில் பல வருடங்களாக இந்தப் புளிய மர இலைகளை மட்டும் உண்டு, தவம் புரிந்து வருகிறேன். தாங்கள் கடவுளைச் சந்திக்கும் போது, எனக்கு தரிசனம் கொடுக்குமாறு என் சார்பில் கேட்கவும்” என்று தாழ்மையுடன் கூறினார். துறவியின் கதையைக் கேட்ட நாரதர் இந்தத் தகவலைக் கட்டாயமாக பகவானிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற தீர்மானத்துடன் வைகுண்டம் சென்றார்.

வைகுண்டம் சென்றடைந்தவுடன், பகவான் நாரதரிடம் “பூலோகத்திலிருந்து ஏதாவது செய்தி இருந்தால் சொல்” என்று கூறினார்.

உடனே நாரதர் அத்துறவியை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு, “தங்கள் தரிசனத்திற்காகத் துறவி ஒருவர், ஒரு புளிய மரத்தடியில் அமர்ந்து தவம் செய்து கொண்டிருக்கிறார். தாங்கள் எப்பொழுது அவருக்கு தரிசனம் கொடுப்பீர்கள் என்று அறிய விரும்புகிறார்” என்று கேட்டார்.

a tapasvis determination - picture 3அதற்கு பகவான், “என்னுடைய தரிசனம் பெறுவதற்கு அந்தப் புளிய மரத்தில் எவ்வளவு இலைகள் இருக்கிறதோ அவ்வளவு வருடங்கள் தவம் செய்ய வேண்டும் என்று அவரிடம் சென்று கூறவும்” என்றவாறு பதிலளித்தார்.

இதைக் கேட்ட நாரத ரிஷிக்குக் கால்கள் பலவீனமடைந்தன; ஒரு அடி கூட நகர முடியாதது போன்ற ஒரு உணர்வு; இதயம் படபடத்தது. கடவுளைக் காண ஆர்வத்துடன் இருந்த துறவியிடம் இந்தச் செய்தியை எப்படிச் சென்று கூறுவது?  என்ற ஒரு தயக்கமும் இருந்தது. “நான் அவரிடம் என்ன கூறுவேன்? அவர் தவம் புரியும் உற்சாகத்தையே இழந்து விடுவாரே” என்று நாரதர் நினைத்தார். தளர்ந்த மனதுடன் வான் வழியே திரும்பிச் சென்று கொண்டிருந்த பொழுது, துறவி அவரைக் கவனித்து அழைத்தார். நாரதர் துறவியிடம் சென்று, தாம் பகவானைச் சந்தித்த விஷயத்தைப் பற்றிக் கூறினார். அதனைக் கேட்ட துறவி சந்தோஷத்தில் மூழ்கினார்.

“பகவான் எனக்கு என்ன செய்தி அனுப்பியிருக்கிறார்?” என்று வினவினார்.

நாரதர் வருத்தத்துடன், “என்னால் அதைச் சொல்ல முடியாது. நான் விஷயத்தைக் கூறினால், தாங்கள் தைரியத்தை இழந்து விடுவீர்கள். மேலும், தவம் புரிவதையே கைவிட்டு விடுவீர்கள்.” என்று கூறினார்.

உடனே துறவி, “பகவான் என்ன கூறியிருந்தாலும் பரவாயில்லை, நான் தைரியத்தை இழக்க மாட்டேன். அவருடைய புனிதமான வார்த்தைகளைக் கேட்கும் பாக்கியத்தைப் பெற்றவனாவேன். அதனால், தயவு செய்து அவர் கூறியதை அப்படியே சொல்லுங்கள்” எனக் கூறினார்.

நாரதருக்கு இன்னும் சந்தேகமாகவே இருந்தது. “இதைச் சொல்லலாமா? அவர் நம்பிக்கையை இழந்து விட்டால் என்ன செய்வது? நான் இத்துறவிக்கு அதைச் செய்ய மாட்டேன்” என்று மனதில் நினைத்தபடி இருந்தார்.

ஆனால் துறவி நாரதரிடம் விஷயத்தைக் கூறும்படி வற்புறுத்தினார்.

உடனே நாரதர், “நீங்கள் இன்னும் பல வருடங்கள் தவம் புரிய வேண்டும்.   இந்தப் புளிய மரத்தில் எவ்வளவு இலைகள் இருக்கின்றதோ அவ்வளவு வருடங்கள் தாங்கள் தவம் புரிய வேண்டும். அதற்குப் பிறகு தான் பகவான் காட்சி கொடுப்பாராம்” என்று பகவான் கூறியதாக சொன்னார்.

அதைக் கேட்ட துறவி மகிழ்வுற்றார். “நான் எவ்வளவு அதிர்ஷ்டசாலி; பகவான் எனக்குச் செய்தி அனுப்பியுள்ளார். எனக்குக் கண்டிப்பாக தரிசனம் தருவதாகக் கூறியிருக்கிறார். வருடங்கள் விரைவில் கடந்தோடும்” என்று பேரின்பத்துடன் துறவி மூழ்கினார்.

துறவியின் அன்பையும், தைரியத்தையும் கண்ட பகவான் உடனடியாக அவர்A Tapasvis's determination last முன் தோன்றி துறவிக்குக் காட்சி கொடுத்தார். துறவியின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. இறைவனின் பொற்பாதங்களில் விழுந்தார்.

நாரதரிஷி குழம்பிப் போனார். “பகவான், நீங்கள் எப்படி இங்கே? இவர் பல வருடங்கள் தவம் செய்த பிறகு தானே தரிசனம் அளிக்கப் போவதாகக் கூறினீர்கள்?” என்று ஆச்சரியத்துடன் நாரதர் கேட்டார்.

அதற்கு பகவான், “துறவியின் தைரியத்தையும், மன உறுதியையும் பார். மேலும், பல வருடங்கள் தவம் புரிய வேண்டும் என்று தெரிந்தும் கூட, அவர் தன் நம்பிக்கையை இழக்கவில்லை. இப்படிப்பட்ட ஒருவருக்கு தான்  நான் கண்டிப்பாகக் காட்சி அளிப்பேன்” என்று கூறினார்.

நீதி

அந்தத் துறவி நம்பிக்கை இழந்திருந்தால், கடவுளின் தரிசனம் கிடைக்கப் பெற்றிருப்பாரா? இல்லை. ஆனால் அவர் நம்பிக்கையை இழக்காததனால், கடவுளின் அருளைப் பெற்றார். மன உறுதியுடன் இருப்பவன் விரைவில் அவனுடைய இலக்கைச் சென்றடைவான். சரியான மனப்பான்மை, விடா முயற்சி மற்றும் நம்பிக்கை இருந்தால் எந்த இலக்கை நாம் மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறோமோ அதைக் கட்டாயமாகச் சென்றடையலாம்; வெற்றி நிச்சயம். 

மொழி பெயர்ப்பு:

காயத்ரி, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s