மனிதனின் நான்கு மனைவிகள்

நீதி – உண்மை

உப நீதி – ஆன்மீக வளர்ச்சி, உட்புற நோக்கு

The four wives of a dying manஒரு மனிதனுக்கு நான்கு மனைவிகள் இருந்தனர். அவன் நான்காவது மனைவியை அதிகமாக நேசித்தான். அவளுக்கு மிகச் சிறந்த ஆடைகள் மற்றும் அழகான நகைகளையும் வாங்கிக் கொடுத்தான். மிகவும் அழகாக அவளை அலங்கரித்து, எச்சமயத்திலும் அவளுடன் மகிழ்ச்சியாக இருந்தான். ஒருவரை ஒருவர் நேசித்து, அவர்கள் சந்தோஷமாக வாழ்ந்தனர்.

மூன்றாவது மனைவியையும் அவன் நேசித்தான். அவளும் ஆசையாக இருந்தாள்; அவளுக்காகவே உழைத்தான்; அவனுடைய வாழ்க்கையைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தையும் அவளிடம் அர்ப்பணித்தான்.

அவனுடைய இரண்டாவது மனைவியிடமும் அன்பாக இருந்து, அவள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தான்;  முக்கியமான பல விஷயங்களை அவளுடன் பகிர்ந்து கொண்டான். அவன் எப்பொழுதும் தன் வாழ்க்கையைப் பற்றி அவளிடம் தான் பேசுவான்.

அவனது முதல் மனைவியும் அங்கு இருந்தாள். ஆனால், அவள் மீது அவனுக்கு அதிக ஈடுபாடு இருந்ததில்லை. அவள் எப்பொழுதும் அவன் அருகிலேயே இருந்தாள். தன்னடக்கம் மிகுந்தவள்; வீடு மற்றும் அனைத்து விஷயங்களையும் அவளே கவனித்து வந்தாள்; எச்சமயமும் தன் உண்மையான இயல்பை வெளியே காட்ட முயன்றாள்.

ஒரு சமயம், அவன் நோய் வாய்ப்பட்டு  மரணப் படுக்கையில் இருந்தான். அவனது மனைவிகள் எல்லோரும் அவனைச் சுற்றிக் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களிடம், “மரணத்திற்குப் பிறகு நான் தனியாக செல்ல விருப்பப் படவில்லை; உங்களில் யார் என்னுடன் வருவதற்கு தயாராக இருக்கிறீர்கள்?” என்று கேட்டான்.

அவன் நான்காவது மனைவியிடம், “நான் உன் மேல் அதிகளவில் பாசத்தை வைத்து, எப்போதும் உனக்கு சிறந்ததையே செய்திருக்கிறேன்; தற்சமயம், நான் மரணப் படுக்கையில் உள்ளேன்; என்னுடன் நீ வருவாயா?” என்று கேட்டான். அதற்கு அவள், “முடியாத காரியம்” என்று சொல்லிவிட்டு சென்று விட்டாள். அதைக் கேட்டவுடன் அவன் மன வேதனையுடன் தவித்தான்.

சோகத்துடன் அவன் தனது மூன்றாவது மனைவியிடம், “இச்சமயத்தில்  நீயாவது என்னுடன் வருவாயா?” என வினவினான். உடனே அவள், “அதற்கு வழியேயில்லை. நீ இறந்தவுடன் நான் மற்றவர்களிடம் சென்று விடுவேன்” எனக் கூறிவிட்டு சென்றாள்.

அடுத்ததாக அவன் தனது இரண்டாவது மனைவியை அழைத்து, அதே கேள்வியை அவளிடமும் கேட்டான். “உன் மரணம் எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது; ஆனால், உன்னுடைய கல்லறை வரை மட்டுமே என்னால் உன்னுடன் வர முடியும். அது வரையில் நான் உன்னோடு இருப்பேன்”, என்று கூறி அவள் தன் இடத்திற்கு திரும்பி விட்டாள்.

அச்சமயம், “நான் உன்னுடன் வருவதற்கு தயாராக உள்ளேன்” என்று ஒரு மெல்லிய குரல் கேட்டது. அவன் தனது முதல் மனைவியைப் பார்த்து மிகவும் வருத்தப் பட்டான். “நான் உன்னை எப்பொழுதுமே கவனித்ததில்லை; உன்னை அலட்சியப் படுத்தியிருக்கிறேன். நீ மிகவும் மெலிந்து இருக்கிறாய். இப்பொழுது, என் வாழ்க்கைக்கு முடிவு வந்து விட்டது. நான் ஆரோக்கியமாக இருந்த போது, மற்ற மனைவிகளை விட நீயே என்னை  அதிகமாக நேசித்தாய் என்பது எனக்கு புரியவில்லை. நான் உன்னை அலட்சியப் படுத்தியதற்காக என்னை மன்னித்து விடு.” என்று கூறி இறந்து விட்டான்.

இந்த கதையில் குறிப்பிடப் பட்டிருக்கும் “நான்கு மனைவிகள்” உண்மையில் வேறு  அர்த்தம் கொண்டுள்ளன. நான்காவது மனைவி மனிதனின் உடலையும், ஆசைகளையும் குறிக்கின்றது. மரணம் அடையும் போது இவைகளை இழந்து விடுகிறோம். மூன்றாவது மனைவி செல்வத்திற்கு அடையாளம். மரணத்திற்குப் பிறகு, உழைத்து சேர்த்து வைத்த செல்வம் மற்றவர்களிடம் செல்கிறது. இரண்டாவது மனைவி, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரையும் குறிக்கின்றது. அவர்களால் கல்லறை வரை மட்டுமே வர முடியும். முதல் மனைவி மனதை (ஆன்மா) குறிக்கின்றது. இதுவே, நமது உள்ளுயிர்த் தன்மையை வெளிப்படுத்துகிறது; ஆனால் நாம் அதை கவனிப்பதில்லை. மிகவும் முக்கியமாக இருக்கும் ஆன்மாவை மறந்து விட்டு, வாழ்க்கையின் முடிவிலே தான் அதை உணர்கின்றோம்.

கற்பித்தல்:

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும் மருளானாம் மாணாப் பிறப்பு.

நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும்.

உடல் என்பது “நாம்” அல்ல, பிறப்பும் இறப்பும் இல்லாத ஆன்மாவே “நாம்” என்பது தான் சாசுவதமான உண்மை. ஆனாலும், நம் வாழ்க்கையில்  எப்போதும் நம்முடன் சேர்ந்திருக்கும் ஆன்மாவை விட்டுவிட்டு மற்றவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். ஆன்மீக ரீதியில் வலுவாக வளரக் கற்றுக் கொண்டு நம் வாழ்க்கையை சிறப்பாக கையாளும் திறமையை பெறுவோம்.

மொழி பெயர்ப்பு:

வள்ளி, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s