ஓய்வுபெற்ற படைக்கப்பல் முதல்வர்

The retired Sea Captain1நீதி நன் நடத்தை

உபநீதி – நம்பிக்கை, தெளிவான மனப்பான்மை, கடமையுணர்ச்சி 

ஒரு ஓய்வுபெற்ற படைக்கப்பல் முதல்வர், பொழுது போக்காக தினமும் பிரயாணிகளை அந்தமான் தீவுகளுக்கு படகில் அழைத்து சென்று வந்தார்.

The retired Sea Captain2ஒரு சமயம், படகில் இளைஞர்கள் மட்டுமே இருந்தனர். படகோட்டி கரையிலிருந்து புறப்படுவதற்கு முன்பு, தினமும் இறைவனுக்கு நன்றி கூறும் வகையில் ஒரு சிறிய பிரார்த்தனை செய்வார். அன்றும் அவர் அப்படிச் செய்வதைப் பார்த்த இளைஞர்கள், “கடல் அமைதியாக தானே இருக்கிறது, எதற்கு இவர் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்?” என்று அவரைப் பார்த்து சிரித்தனர்.

The retired Sea Captain3புறப்பட்ட சற்று நேரத்திலேயே புயல் வீசி, படகு  கடல் அலைகளுக்கேற்ப கொந்தளிக்க ஆரம்பித்தது. இளைஞர்கள் பயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல், படகோட்டியிடம் தங்களுடன் சேர்ந்து பிரார்த்தனை செய்ய அழைத்தனர்.

அதற்கு படகோட்டி, “கடல் அமைதியாக இருக்கும் போது  நான் பிரார்த்தனை செய்வேன். புயல் வந்தால் என் கவனம் எல்லாம் படகு மேல் மட்டுமே இருக்கும்” என்றார்.

நீதி:

அமைதியான நேரங்களில் கடவுளை அணுகாமல் இருந்தால், இடர்ப்பாடுகள் இருக்கும் சமயங்களில் ஒருமுகச் சிந்தனையோடு பிரார்த்தனை செய்வது கடினம்; பிரச்சனையின் மேல் முழுதாக கவனத்தையும் செலுத்த முடியாது. இச்சமயங்களில், பதற்றம் மட்டுமே உண்டாகும்.

அதனால், அமைதியான நேரங்களில் கடவுளிடம் பிரார்த்தனை செய்து, அவர் மேல்  நம்பிக்கை வைத்தால்,  பிரச்சனைகள் ஏற்படும் போது, அதன் மீது கவனத்தை செலுத்தலாம்; கடவுளின் அருளையும் நிச்சயமாக பெறலாம்!

மொழி பெயர்ப்பு:

சுப்ரியா, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s