சமைப்பவரின் எண்ணங்கள் உணவைப் பாதிக்கும்

நீதி – நேர்மை

உப நீதி – எண்ணங்களில் தூய்மை

Thoughts affect the food cookedமைசூர் மாகாணத்தில், மாலூர் என்ற ஊரில், தயாள குணமுள்ள பிராமண பண்டிதர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருடைய மனைவியும் அவருக்கேற்றார் போல தயாள குணமுடையவளாகத் திகழ்ந்தாள். பிராமணர் எப்பொழுதும் பூஜை, ஜபம், மற்றும் தியானத்திலேயே ஈடுபட்டிருந்தார். அவர் நற்குணங்களோடு வாழ்ந்ததால், அவ்வூரில் எல்லோரும் அவரை அறிந்தனர். ஒரு நாள், நித்யானந்தா என்ற பெயரில் ஒரு சந்நியாசி பிச்சை கேட்டு இவர் வீட்டிற்கு வந்தார். அதனால், பிராமணர் எல்லையற்ற மகிழ்ச்சியுற்றார். அவருக்குச் சிறந்த முறையில் விருந்தோம்பல் செய்யலாம் என்றெண்ணி, அந்தத் துறவியை அடுத்த நாள் இரவு உணவிற்குத் தம் வீட்டிற்கு வருமாறு அழைத்திருந்தார். வீட்டு வாசலில் மாவிலைத் தோரணங்கள் எல்லாம் கட்டி, துறவியை வரவேற்க பலத்த ஏற்பாடுகள் செய்திருந்தார். ஆனால், கடைசி நேரத்தில், பிராமணரின் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால், சமைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது; பக்கத்து வீட்டுப் பெண்மணி ஒருவர் தாம் சமைத்துக் கொடுப்பதாக விருப்பம் தெரிவித்துச் சமையலறைக்கு வந்தார்.

எல்லாமே நல்ல முறையில் நடந்து கொண்டிருந்தது. அனைவரும் ஆனந்தத்தில் மூழ்கியிருந்த அந்த சூழ்நிலையில் துறவி மட்டும் சரியான மனோபாவத்தில் இருக்கவில்லை. அவருடைய தட்டிற்கு அருகில் இருந்த வெள்ளிக் கோப்பையை எப்படியாவது திருட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. எவ்வளவோ முயற்சி செய்தும், மனதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. துறவி அந்தக் கோப்பையைத் தன் அங்கியின் மடிப்பில் மறைத்துக் கொண்டு அவசர அவசரமாகத் தன் குடிலுக்குச் சென்றார். அன்றிரவு அவரால் தூங்க முடியவில்லை; மனசாட்சி உறுத்தியது. தன் குருவிற்கும்,  மந்திரங்களை உச்சரித்து தன் முன் வரவழைத்த ரிஷிகள் அனைவருக்கும் அவமானத்தை உண்டு பண்ணியதாக எண்ணினார். உடனே அந்தப் பிராமணரின் வீட்டிற்கு ஓடிச் சென்று, அவர் காலில் விழுந்து,  கண்களில் நீர் வழிய மன்னிப்புக் கோரி அந்தப் பொருளை அவரிடம் ஒப்படைத்தார். அதுவரை துறவிக்கு மனம் அமைதி அடையவில்லை.

ஒரு துறவி எப்படிக் கீழ்த்தரமான செயலைச் செய்திருப்பார் என்று அனைவரும் வியந்தனர். பின்னர் ஒருவர், “இந்தத் தவறான குணம், துறவிக்குச் சமையல் செய்தவரிடமிருந்து உணவு மூலம் அவருக்குப் பரவியிருக்கும்” என்று கூறினார். மேலும், அந்த பக்கத்து வீட்டுப் பெண்மணியின் கதையைக் கேட்ட போது தான், அவள் பல காலமாக திருட்டு தொழிலில் இருக்கிறாள் என்று தெரிய வந்தது. அந்தத் திருட்டு குணம் அவள் சமைத்த உணவையும் பாதித்திருக்கிறது. இந்தக் காரணத்தினால் தான், துறவிகள் ஆன்மீகச் சாதனையில் ஒரு குறிப்பிட்ட நிலையை அடைந்தவுடன், பழம் மற்றும் கிழங்கு வகைகளையே சாப்பிட்டு வாழ வேண்டும் என்று கூறப்படுகிறது.

நீதி

அன்புடனும் நல்லெண்ணங்களுடனும் சமைக்கப்படும் உணவு எப்பொழுதும் அதிக ருசியாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

மொழி பெயர்ப்பு:

காயத்ரி, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s