அக்பரும் இஸ்லாமிய மெய்ஞ்ஞானியும்

நீதி: பக்தி / நம்பிக்கை                                       

உபநீதி: ஆழ்ந்த உணர்தல் / உட்புற நோக்கு

அக்பர் மூன்றாவது முகலாய சக்கரவர்த்தியாகத் திகழ்ந்து, 1556 – 1605  கால கட்டத்தில் பாரத நாட்டை ஆண்டார். புகழ் பெற்ற இஸ்லாமிய மெய்ஞ்ஞானி ஒருவருக்கு அவரிடமிருந்து உதவி தேவைப்பட்டது.

ஆதலால், அக்பரைச் சந்திக்க அவரது மாளிகைக்கு மெய்ஞ்ஞானி சென்றார். அங்கு சென்ற போது அக்பர் பிரார்த்தனையில் மூழ்கியிருந்தார். மெய்ஞ்ஞானி, அக்பரின் பிரார்த்தனை முடிய பொறுமையாகக் காத்திருந்தார். முடிவில் அக்பர் ஆகாயத்தை நோக்கி, கைகளை உயர்த்தி, கடவுளிடம் இன்னும் பொருளும், ராஜ்ஜியமும் வேண்டுமெனப் பிரார்த்தித்தார். அக்பர் பிரார்த்தனையை முடித்தவுடன், மெய்ஞ்ஞானி அறையிலிருந்து வெளியே செல்வதைக் கவனித்தார். உடனே, அக்பர் அவர் பாதங்களில் விழுந்து, வந்த காரணத்தைக் கேட்டார்.

Akbar and the sufi saint2மெய்ஞ்ஞானி, “நான் உங்களிடம் ஏதோ உதவி பெற வந்தேன்; ஆனால் நீங்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்வதைக் கண்டு, ஒரு பிச்சைக்காரன் மற்றொரு பிச்சைக்காரனுக்கு என்ன கொடுக்க முடியும் என்ற முடிவுக்கு வந்தேன். நான் ஒரு பிச்சைக்காரன் தான்; ஆனால் நீங்கள் என்னைவிட பெரிய பிச்சைக்காரனாக இருக்கிறீர்களே. நான் உணவு மற்றும் சில்லறைப் பொருட்களை மட்டுமே பிச்சையாகப் பெறுகிறேன்; தாங்களோ செல்வத்தையும், புகழையும் பிச்சை கேட்கிறீர்கள். உங்களிடம் கேட்க நினைத்ததை நான் கடவுளிடம் நேரிலேயே கேட்கப் போகிறேன்” என்றார்.

மெய்ஞ்ஞானியின் வார்த்தைகளைக் கேட்ட அக்பர், தான் சக்கரவர்த்தியாக இருந்த போதிலும், எவ்வளவு ஏழையாகவும், நம்பிக்கையற்றவனாகவும் இருந்தார் என்பதை உணர்ந்தார்.

நீதி:

ஆதி சங்கரர் நம்மிடம், “நீங்கள் எதைப் பிச்சையாக கேட்கிறீர்கள்?”என வினவுகிறார். நாம் கேட்கும் பிச்சையும் முட்டாள்தனமானது.

ஏன் தெரியுமா? நம் பக்தியினால் நாம் மன நிறைவு அடையாவிட்டால், தேவைகளுக்காக நாம் கேட்கும் பிச்சையாக மாறிவிடுகிறது. பக்தியை நாம் பண்டமாற்று வியாபாரம் போல செய்யக் கூடாது அல்லவா?

எதிர்பார்ப்பு எதுவும் இல்லாத பக்தியை நம்முள் வளர்த்துக் கொள்ள ஆதி சங்கரர் உற்சாகமளிக்கிறார். வாய்மையை நோக்கிச் செலுத்தும் அன்பே பக்தியாகும். உண்மையான பக்தன், தன் அனுபவங்களினால், அர்த்தமற்ற ஆசைகள் இல்லாத பக்தியே தனக்குப் பாதுகாப்பு எனப் புரிந்து கொள்கிறான். பொருள் சார்ந்த விஷயங்களிலிருந்து மன நிறைவும், பாதுகாப்பும் கிடைப்பதில்லை; உண்மையான பக்தியே நம்மை பாதுகாக்கும்.

இவ்வுலகத்தில் வாழ்வதற்கு, சில பொருட்கள் மனிதனுக்குத் தேவை தான். அதே சமயத்தில் தேவைக்கும், பேராசைக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள, உண்மையான பக்தி மிகவும் அவசியம்; ஏனெனில், பேராசை வாழ்க்கையில் மன  சஞ்சலத்தையும், வேதனையையும் உண்டாக்குகின்றது.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s