டாக்ஸி ஓட்டுபவரின் நேர்மையான குணம்

நீதி: நன்னடத்தை / உண்மை

உபநீதி: நேர்மை

A cabbies honesty1புகழ் பெற்ற எழுத்தாளரும், நிர்வாகப் பயிற்சியாளருமான திரு ஷிவ் கேரா சிங்கப்பூரில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை விவரிக்கிறார்.

6 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு டாக்ஸி ஓட்டுனருக்கு நான் ஒரு உத்தியோக அட்டையைக் (business card) கொடுத்து, அந்த விலாசத்தில் என்னைக் கொண்டு விடுமாறு கேட்டேன். சற்று நேரத்தில், நாங்கள் அந்தக் குறிப்பிட்ட விலாசத்திற்கு வந்து விட்டோம். ஓட்டுனர் அந்தக் கட்டடத்தை ஒரு சுற்று சுற்றி, வண்டியை நிறுத்தினார். அவரது மீட்டரில் தொகை 11 டாலர் எனக் காண்பித்தது; ஆனால் அவர் 10 டாலர் மட்டுமே எடுத்துக் கொண்டார்.

A cabbies honesty2.pngநான் அவரிடம், “ஹென்றி, உங்கள் மீட்டர் 11 டாலர் என்று காண்பிக்கும் போது, நீங்கள் ஏன் 10 டாலர் மட்டுமே எடுத்துக் கொள்கிறீர்கள்?” எனக் கேட்டேன்.

அதற்கு அவர், “ஸார், நான் ஒரு டாக்சி டிரைவர். நான் உங்களைச் சரியான இடத்திற்கு, நேராகக் கொண்டு விட வேண்டும். எனக்கு செல்ல வேண்டிய இடம் சரியாகத் தெரியாததால், கட்டிடத்தைச் சுற்றி வரும்படி ஆயிற்று. நான் நேராக வந்திருந்தால்,10 டாலர் தான் மீட்டர் காண்பித்திருக்கும். என் அறியாமைக்குத் தாங்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்?”என்று கூறினார்.

அவர் தொடர்ந்து, “நான் முறைப்படி 11 டாலர் கேட்டிருக்கலாம்; ஆனால் ஒழுங்கு முறையைப் பார்த்தால், நான் 10 டாலரே பெறத் தகுதியுள்ளவன்” என்றார்.

அவர் மேலும் கூறிய வார்த்தைகள் –  சிங்கப்பூர் சுற்றுலாப் பயணிகள் வரும் ஓர் இடம். பல மக்கள் இங்கு வந்து, 3 – 4 நாட்கள் இருந்து விட்டு செல்வார்கள். குடி நுழைவு (immigration) மற்றும் சுங்கம் (customs), இவற்றை சரி பார்த்த பிறகு, அவர்களது அனுபவம் முதலில் டாக்சி டிரைவருடன் தான் ஏற்படுகிறது. அது சரியாக இல்லாவிட்டால், மற்ற நாட்கள் மகிழ்ச்சிகரமாக இருக்காது.

அவர் “நான் ஒரு டாக்சி டிரைவர் மட்டும் அல்ல; சிங்கப்பூரில் அரசியல் பாஸ்போர்ட் இல்லாத ஒரு நபராக இருந்தாலும், இந்த நாட்டின் நல்ல விஷயங்களை அனைவருக்கும் கொண்டு செல்லும் பொறுப்பு எனக்கு இருக்கிறது” என்றார்.

அந்த டாக்சி டிரைவர் 8 ம் வகுப்புவரை மட்டுமே பள்ளி சென்று படித்திருப்பார்; ஆனால் எனக்கு அவர் ஒரு தொழில் வல்லுநராகத் தெரிந்தார். அவர் நடந்து கொண்ட விதம், அவருடைய குணத்தையும் நடத்தையையும் பெருமைப் படுத்தியது.

அன்று நான் கற்ற பாடம் யாதெனில், ஒரு மனிதருக்கு தொழில் சம்பந்தமான கல்வித் தகுதிகளை விட,  வாழ்க்கைத் தொழிலராக இருக்கும் தகுதி தான் முக்கியம்.

நீதி:

ஒரே வரியில் – மனித நேயம் மற்றும் நற்பண்புகளில், ஒருவர் வல்லுநராக இருக்க வேண்டும். இந்த மனப்பான்மை இருந்தால், வாழ்க்கையில் நல்ல விதத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். அதற்குப் பிறகு தான் புத்தி, திறமை, செல்வம், கல்வி முதலியன. முதலில் தேவையானது மனிதப் பண்புகள் – டாக்ஸி டிரைவர் வெளிப் படுத்திய நேர்மை, ஒழுக்கம் போன்றவை. ஒரு நல்ல மனிதனுக்கு அடையாளம், நல்ல எண்ணங்களும், நல்ல மனப்பான்மையும் தான். மனிதன் பல வழிகளிலும் செல்வம் சேர்க்கும் திறன்கள் கொண்டுள்ளான்; இருந்தும் மகிழ்ச்சியாக இல்லை. ஏன்? அவன் நடந்து கொள்ளும் முறை சரி அல்ல; நன்னடத்தைக்கு நற்குணங்கள் மிகவும் அவசியமானது. நற்குணமுள்ள மனிதன் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம். நற்குணங்கள் இல்லாத வாழ்க்கை அர்த்தமற்றது. வாழ்க்கையின் உண்மையான ஆதாரம் நன் நடத்தையே ஆகும்.

மொழி பெயர்ப்பு: சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s