குரங்கும், வேர்க்கடலையும்

நீதி: சரியான நடத்தை                             

உபநீதி: மதிப்பீடு செய்தல் / நிம்மதி 

இந்தக் கதையில் குரங்கு பிடிப்பவர் எப்படி குரங்கைப் பிடிக்கிறார் என்பதைப் பார்க்கலாம். ஒரு மனிதர் பல குரங்குகளை மரத்தின் மேல் பார்த்து, குரங்கை எப்படிப் பிடிக்கலாம் என்று நினைத்து, ஒரு திட்டத்துடன் வந்தார்.

குரங்கு பிடிப்பவர், நிறைய வேர்க்கடலைகளை, ஒரு குறுகலான கழுத்துள்ள ஜாடியில் போட்டு, மரத்தடியில் வைத்தார். குரங்குகள் இந்தச் செயலைக் கவனித்தன; குரங்கு பிடிப்பவர் அங்கிருந்து கிளம்புவதற்காக, குரங்குகள் காத்துக் கொண்டிருந்தன.

Monkey and peanuts picture 1அவர் கிளம்பியவுடன், ஒரு குரங்கு வேகமாகக் கீழே குதித்து, ஜாடியின் வாயினுள் கையை விட்டு, வேர்க்கடலைகளை எடுக்கப் பார்த்தது. குறுகலான கழுத்துள்ள ஜாடியில் கை சிக்கிக் கொண்டது. அது கையில் வேர்கடலை நிறைந்திருந்ததை நினைத்து சந்தோஷப்பட்டு, கையை ஜாடியிலிருந்து எடுக்கப் பார்த்தது. எவ்வளவு முயற்சி செய்தும், அதனால் கையை எடுக்க முடியவில்லை.

குரங்கு வேர்க்கடலைகளை மிகவும் விரும்பியதால், கையில் இருந்த  வேர்க்கடலைகளை விட மனமில்லை; ஆனால், கைகளை வெளியே எடுக்கவும் முடியவில்லை. குரங்கு பிடிப்பவர் அங்கு வந்து, சந்தோஷமாகக் குரங்கை பிடித்துக் கொண்டு சென்று விட்டார்.

கையில் இருக்கும் வேர்க்கடலையை விட்டிருந்தால், குரங்கு தப்பித்துச் சென்றிருக்கும். ஆனால், பிணைப்பும், பேராசையும் இருந்ததால், குரங்கின் கை சிக்கிக் கொண்டு, இறுதியில் சூழ்நிலை மோசமாக மாறி, குரங்கு பிடிப்பவர் கைகளில் அது சிக்கிக் கொண்டது.

நீதி:

விழிப்புணர்வையும், ஆழ்ந்த உணர்தலையும் நம் வாழ்க்கையில் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆதி சங்கரர் கூறுகிறார்; அன்பை மேம்படுத்திக் கொண்டு, பற்றின்மை என்ற பண்பைக் கடைப்பிடிக்க வேண்டும். நமக்குத் தேவையான பணத்தை சம்பாதிப்பது மிகவும் அவசியம்; ஆனால், ஒழுங்கான முறையில் சம்பாதிக்க வேண்டும். இப்படி என்ன சம்பாதிக்கிறோமோ, அதை வைத்துக் கொண்டு, சந்தோஷமாக இருக்க வேண்டும். பணத்தின் மேல் இருக்கும் தவறான நம்பிக்கை மற்றும் பற்றை விட்டு விட வேண்டும். அப்படிப் பற்றை விடாமல் இருந்தால், குரங்கைப் போல வாழ்க்கையில் சிக்கிக் கொண்டு விடுவோம்.

உலகத்தின் வளம், “அனைவருடைய தேவைகளுக்கு இருக்கிறதே தவிர பேராசைக்கு அல்ல” என்று ஒரு முதுமொழி இருக்கிறது. பேராசை இருந்தால், தவறான வழிகளில் சம்பாதிக்கத் தோன்றும்; மேலும், தேவைப்படுபவர்களுக்குப் பணத்தைச் செலவு செய்ய மனம் இருக்காது. அன்பு, நேர்மை மற்றும் ஒழுங்கான முறையில் பணத்தைச் சம்பாதிக்கும் போது தான் மன நிறைவு கிடைக்கிறது. அதனால், ஆதி சங்கரர் “ஓ மூடனே; பற்றின்மையை வளர்த்துக் கொண்டு, நேர்மையாக வாழ்ந்து, கடவுளை நாடவும்” என்று கூறுகிறார்.

மேற்கூறிய முதுமொழி, செல்வத்திற்கு மட்டும் அல்லாமல் உறவுகளுக்கும் பொருந்தும். பெற்றோர்கள் குழந்தைகளின் மேல் அளவில்லா ஆசை வைத்திருக்கிறார்கள். பல சமயங்களில், குழந்தைகளின் வளர்ச்சியைப் பெற்றோர்களே இந்த ஆசையினால் கெடுத்து விடுகிறார்கள்; ஏனெனில் பற்று, அவர்களைக் கண் மூடித்தனமாகக் கொண்டு செல்கிறது. குழந்தைகள் வளர்ந்த பிறகு, அவர்களிடம் ஆதரவாக இருந்து, அன்பை செலுத்த வேண்டும்; ஆனால், குழந்தைகளை ஒரு அளவிற்கு மேல் விட்டு விட வேண்டும். அப்போது தான், பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் உறவுமுறை நீடித்து இருக்கும். பற்று மற்றும் உடைமையை அதிகமாக பொருட்படுத்தாமல், ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, அவரவர் ஆசைக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s