காக்கையும் அன்னப் பறவையும்

நீதி – நன் நடத்தை / பகுத்தறிவு

உபநீதி – நல்ல சகவாசம்

Crow and the swan picture 1

ஒரு காக்கையும், அன்னப் பறவையும் தோழர்களாக இருந்தன. ஒரு நாள் காக்கை அன்னப் பறவையைத் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று, ஒரு காய்ந்த, தளர்வுற்ற மரத்தின் மேல் உட்கார வைத்தது. அந்த இடத்தில் சாணம், மாமிசம் மற்றும் எலும்புகளும் சிதறி இருந்ததால், துர்நாற்றம் அடித்தது.

அப்போது அன்னம், “தோழா, இது போன்ற அசுத்தமான இடங்களில் என்னால் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது.  உனக்கு ஏதாவது புனிதமான இடம் தெரிந்தால், என்னை அங்கே கூட்டிச் செல்” என்று கூறியது.

அதனால், காகம் அன்னத்தை அந்நாட்டு அரசருக்குச் சொந்தமான, ரகசியத் தீவுக்கு கூட்டிச் சென்றது. காகம் அன்னத்தை ஒரு மரத்தின் மேல் உட்கார வைத்து,  தானும் அதன் அருகில் உட்கார்ந்தது. அப்போது, அரசர் கீழே வெய்யிலில் உட்கார்ந்திருப்பதை அன்னம் கண்டது.

அன்பு மற்றும் கருணை உள்ளம் கொண்ட அன்னம், தனது சிறகுகளை விரித்து அரசருக்கு நிழல் கொடுத்தது; ஆனால், அக்கறையில்லாத காகம் அரசரின் தலையின் மேல் மலம் கழித்தது.

கோபத்தில் அரசர் காக்கையை நோக்கி அம்பை எய்தார். ஆனால் அதற்குள் காகம் அங்கிருந்து பறக்க, அம்பு அன்னத்தைத் தாக்கியது.

தன் உயிரை இழக்கும் நிலையில் இருந்த அன்னம், “அரசரே! நான் உங்கள் மீது மலம் கழித்த காகம் அல்ல; உங்களுக்கு நிழல் கொடுத்த அன்னம். தீய குணம் கொண்ட காக்கையுடன் சகவாசம் வைத்துக் கொண்டதால், என் வாழ்க்கை பாழாகி விட்டது!” என்று கூறியது.

நீதி:

நன்மையைப் போலவே தீமையும் நம்மைத் தாக்கும். நல்ல நண்பர்களையும், மக்களையும் நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். சத்சங்கம் மற்றும் நல்ல சகவாசம் நம்மை நல்ல வழியில் நடத்திச் செல்லும். பொதுவாக, நல்லவர்கள் தீயவர்களுடன் சகவாசம் கொண்டால், அவர்களுடைய நற்குணங்களை மக்கள் அறிந்து கொள்ள மாட்டார்கள்.

“உன் நண்பன் யார் என்று சொல், நீ எப்படிப் பட்டவன் என்று நான் சொல்கிறேன்” என்ற ஒரு பழமொழி உண்டு. இளம் வயதிலிருந்தே நல்ல நண்பர்களை அடைவது மிகவும் அவசியம். கூடையிலுள்ள ஒரே ஒரு அழுகிய பழத்தினால் மற்றப் பழங்களும் கெட்டுப் போகின்றன. அதனால், நண்பர்களை கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். சிறு வயதில் நாம் விதைக்கும் நற்பண்புகள் தான், கடைசி வரை நமக்குக் கை கொடுக்கும். அதனால், நல்ல நண்பர்கள் மற்றும் நற்பண்புகள் சிறு வயதிலிருந்தே கடைபிடிப்பது அவசியம்.

மொழி பெயர்ப்பு:

சுப்ரியா, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s