வாழ்க்கையின் மதிப்பு என்ன?

நீதி: உண்மை

உப நீதி: சுய மரியாதை, தன்னம்பிக்கை, சுய மதிப்பறிதல்

value of life picture 1

ஒரு மனிதர் குரு நானக் மஹராஜிடம் சென்று, “வாழ்க்கையின் மதிப்பு என்ன?” என்று வினவினார்.

குருநானக்ஜி அவரிடம் ஒரு கல்லைக் கொடுத்து, “இதன் மதிப்பை அறிந்து வரவும். ஆனால், இதை எவரிடமும் விற்கக் கூடாது” என்று கூறினார்.

value of life picture 2

அம்மனிதர் அந்தக் கல்லை ஒரு ஆரஞ்சு விற்பவரிடம் எடுத்துச் சென்று, அதன் விலை எவ்வளவு இருக்கும் என்று கேட்டார்.

ஆரஞ்சு விற்பவர் அந்தப் பளபளக்கும் கல்லைப் பார்த்து, “நீங்கள் 12 ஆரஞ்சுகளை எடுத்துக் கொண்டு, இந்தக் கல்லை என்னிடம் கொடுங்கள்” என்றார்.

அதற்கு அந்த மனிதர், “என் குரு இதை எவரிடமும் விற்கக் கூடாது என்று கூறியிருக்கிறார். அதனால் என்னை மன்னித்து விடுங்கள்” என்று கூறினார்.

value of life picture 3

அவர் இன்னும் சற்று தூரம் சென்றவுடன், ஒரு காய்கறி வியாபாரியைக் கண்டார். அவரிடம், “இந்தக் கல்லின் விலை என்ன இருக்கும்?” என்று கேட்டார்.

வியாபாரி அந்தப் பளபளக்கும் கல்லைப் பார்த்துவிட்டு, “என்னிடமிருந்து ஒரு மூட்டை உருளைக்கிழங்குகளை எடுத்துக் கொண்டு, இந்தக் கல்லை என்னிடம் கொடுத்து விடுங்கள்” என்றார்.

அந்த மனிதர் கல்லை தான் விற்க முடியாது என்று கூறி, அவரிடமும் மன்னிப்பு கேட்டு, அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

value of life picture 4இன்னும் சிறிது தூரம் சென்று அம்மனிதர் ஒரு நகைக் கடைக்குள் நுழைந்தார். அந்தக் கல்லின் மதிப்பை விசாரித்தார்.

நகைக்கடைக் காரர் அந்தக் கல்லை ஒரு பூத கண்ணாடியை  வைத்து பார்த்துவிட்டு, “நான் இந்தக் கல்லுக்கு 50 லட்சம் ரூபாய் தருகிறேன்” என்றார். இந்த மனிதர் முடியாது என்று தலையாட்டுவதைக் கண்டு, “சரி சரி, 2 கோடி எடுத்துக் கொள். ஆனால் இந்தக் கல்லைக் கொடுத்துவிடு” என்றார்.

அவரிடமும் அம்மனிதர் தம்மால் விற்க முடியாததைக் கூறி மன்னிப்பு கேட்டுவிட்டு நகர்ந்தார்.

value of life picture 5

இன்னும் சற்று தூரத்தில் இரத்தினங்கள் விற்கும் கடை ஒன்றைக் கண்டார். அந்தக் கடை உரிமையாளரிடம் சென்று கல்லின் மதிப்பை கேட்டார். கடைக்காரர் இந்த பெரிய ரத்தினக் கல்லை ஒரு சிவப்பு நிறத் துணியின் மேல் வைத்தார். பிறகு, அந்த ரத்தினக் கல்லை பல முறை சுற்றி வந்து, தலை குனிந்து அந்த கல்லின் முன் வணங்கினார். பிறகு, “இந்த விலை மதிப்புள்ள ரத்தினத்தை எங்கிருந்து கொண்டு வந்தாய்?” என்று கேட்டார். மேலும், “இந்த உலகத்தையே விற்றாலும், என் உயிரையே கொடுத்தாலும், இந்த விலை மதிப்புள்ள கல்லை என்னால் வாங்க இயலாது” என்று கூறினார்.

இதைக் கேட்டு அதிர்ந்த போன அந்த மனிதர், குழப்பத்துடன் தன் குருவிடம் சென்று நடந்தவற்றை விவரித்தார். “குருஜி, வாழ்க்கையின் மதிப்பென்னவென்று இப்பொழுது கூறுங்கள்” என்று வினவினார்.

அதற்கு குருநானக்ஜி, “ஆரஞ்சு விற்பவர், காய்கறி விற்பனையாளர், நகைக் கடைக்காரர் மேலும் இரத்தின வியாபாரி ஆகியோரிடமிருந்து பெற்ற பதில்களே வாழ்க்கையின் மதிப்பை உனக்கு விளக்கும்.  நீ ஒரு விலை மதிப்புள்ள இரத்தினமாக இருக்கலாம். ஆனால் மக்கள் அவர்களுடைய பொருளாதார நிலை, அறிவு, உன் மேல் அவர்களுக்குள்ள நம்பிக்கை, நோக்கம், அவர்களுடைய குறிக்கோள், மேலும் சவால்களை சமாளிக்கும் தன்மை இவற்றைப் பொறுத்து தான் உன்னை மதிப்பிடுவார்கள். ஆனால் அஞ்சாதே, உன்னுடைய உண்மையான மதிப்பை உணரும் ஒருவரை நீ கண்டுபிடிப்பாய்” என்று கூறினார்.

நீதி:

ஒருவன், தன்னை முதலில் மதிக்க வேண்டும். நம் ஒவ்வொருவரிடமும் ஏதாவது ஒரு தனித் தன்மை இருக்கும். நாம் அதைக் கண்டு பிடிக்க வேண்டும். மாணவர்கள் சிறு வயதிலிருந்தே சுய மரியாதை மற்றும் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். சுய மரியாதை என்பது பெரும்பாலும், நம் வெளித் தோற்றம், நடை, உடை, பாவனை, நம்பிக்கை மற்றும் பிறரால் நாம் எந்த அளவு ஏற்றுக் கொள்ளப் படுகிறோம், மதிக்கப் படுகிறோம் போன்ற வெளி விஷயங்களிலிருந்து மட்டுமே நமக்குக் கிடைக்கிறது. இருப்பினும், இந்த மாதிரி விஷயங்கள் அனைத்தும் குறுகிய காலத்திற்குரியவை. நம் தோற்றம், உடைமைகள், மேலும் வெளி விஷயங்கள் அனைத்தும் மாற்றத்திற்கு உட்பட்டவை. நாம் உண்மையாகவே, நிரந்தரமான சுய மரியாதை மற்றும் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள விரும்பினால், ஆழ்ந்த மன திடத்தை வளர்த்துக் கொள்ள ஆரம்பிக்க வேண்டும். கருணை, நேர்மை, கடமை, கட்டுப்பாடு, பொறுமை, விடா முயற்சி போன்ற நற்குணங்களே இந்த சக்தியை வளர்த்துக் கொள்ள உதவும். எவனொருவன் பிறர் மனதில் மரியாதையுடன் எண்ணப்படுகிறானோ, அவன் அவர்கள் வாழ்வில் ஒரு நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும். இந்த மாற்றம் உங்கள் உண்மையான உள்ளார்ந்த குணத்திற்கு; உங்கள் வெளிப்புறத் தோற்றத்திற்காக அல்ல.

மொழி பெயர்ப்பு:

காயத்ரி, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s