சிங்கம் போல் வாழ்ந்து வாழ்க்கையை வென்று விடு

நீதி: நன் நடத்தை

உப நீதி: உள்ளார்ந்து நோக்குதல்

ஒரு பணக்கார வியாபாரி கிராமம் ஒன்றில் வசித்து வந்தார். திருமணமாகி பல ஆண்டுகளுக்குப் பிறகு, அவருக்கு ஒரு மகன் பிறந்தான். அளவில்லாச் செல்வம் இருந்ததால், அவர் தன் மகனை மிகவும் செல்லமாக சொகுசுகளைக் கொடுத்து வளர்த்தார்; அம்மகனின் ஒவ்வொரு ஆசையையும் பூர்த்தி செய்தார். பணத்தால் வாங்க முடிந்த அனைத்தையும் அவர் அவனுக்கு அளித்தார்;  அளவற்ற அன்பும் வைத்திருந்தார்

காலத்திற்குத் தகுந்தாற் போல் மகன் வளர வளர, அவனைச் சுற்றி நண்பர்கள் கூட்டமும் வளர்ந்து,  அம்மகனின் பரிசுகளையும், கேளிக்கைகளையும் அனுபவித்தனர்.

திருமணத் தகுதியை அடைந்த அந்த இளைஞனுக்குப் பல அழகான, பணக்காரப் பெண்களின் வரன்கள் வரத் தொடங்கின. எல்லாம் இன்பமயமாக இருந்தது. தன் தந்தையின் செல்வம் அனைத்தையும் பல வழிகளில் செலவழித்த பின், ஒரு நாள் அவன் கடன் அடைக்க முடியாத அளவிற்கு திவாலானான். தன் நண்பர்களிடம் அவன் உதவி கேட்க, அனைவரும் தற்போது அவனைக் காண மறுத்தனர்.

செல்வம் தொலைந்தவுடன், நண்பர்களும் அவனிடமிருந்து விலகினார்கள். அவன் மனைவியும், குழந்தைகளும் கூட, அவனிடமிருந்து விலகிச் சென்றனர். தன் கெட்ட குணங்களுடன் அம்மனிதன் தனியாக, உடல் நலக் குறைவுடன் விடப் பட்டான். உடலில் பலம் இல்லாததால் அவன் படுத்த படுக்கையாக இருந்தான்; தன் வாழ்க்கையை உடல் சார்ந்த பொருட்களுக்காக வீணடித்ததை உணர்ந்தான். தன்னை மேம்படுத்திக் கொள்ள எதுவும் செய்யாமல், உடல் மற்றும் ஆன்மீக வாழ்க்கை இரண்டிலும் அவன் தோல்வியடைந்ததை உணர்ந்து மனம் தளர்ந்தான்.

அச்சமயம், விதி அவனை ஒரு மதகுருவை சந்திக்க வைத்தது. கடவுள் அருளினால் மட்டுமே ஒருவனுக்கு சத்குரு போன்றவர்களுடன் தொடர்பு ஏற்படுகிறது. குரு அவனது நிலையைக் கண்டு இரக்கம் கொண்டு, அவனைத் தன் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றார். குருவின் சிஷ்யர்கள் அவனை அக்கறையுடன், நன்கு கவனித்துக் கொண்டனர். உடல் நலம் சற்று தேறியதும், அம்மனிதன் குருவிடம் ஆசிரமத்திலேயே தங்கி, சேவை புரிய அனுமதி கேட்டான்.

குருவிடமிருந்து உபதேசமும், அறிவும் பெற அவன் விரும்பினான். குரு அன்புடன் அவனிடம், “குழந்தாய்! சிங்கம் போல் இரு, நாய் போல் அல்ல” என்று அறிவுரை வழங்கினார். அம்மனிதனுக்கு அதன் தத்துவம் விளங்கவில்லை. பிறகு குரு அவனுக்கு விவரமாக கூறியது யாதெனில் – ஒரு நாய்க்கு முன் ஒரு பந்தை எறிந்தால், அது பந்தின் பின் ஓடும். அதுவே ஒரு சிங்கத்தின் முன் ஒரு பொருளை எறிந்தால், அதன் கவனம் உன் மேல் தான் இருக்கும்; பொருளின் மீது அல்ல. அது உன்னை அடையும் சந்தர்ப்பத்திற்கு காத்திருக்கும். இவ்வளவு வருடங்கள் நீ நாய் போல், நிலையில்லாத ஆனந்தங்களான செல்வம், இளமை, மனைவி, குழந்தைகள் இவற்றை நோக்கி ஓடினாய். வாழ்க்கையின் நிரந்தரமான உண்மையை உணர முயற்சி செய்யவில்லை. இப்பொழுதாவது அதை உணர்ந்து நிரந்தரமான, அழிவில்லாத உண்மையைத் தேட முயற்சி செய், நீ மிக்க மகிழ்வுடன் இருப்பாய்!

அம்மனிதன் குருவிடம் நன்றி உணர்ச்சியுடன், ஆசிரமத்தில் சேவை செய்து, ஆன்மீக வாழ்க்கையில் ஈடுபட முற்பட்டான். நாளடைவில் அவன் நல்ல ஆரோக்கியத்துடனும், பேரின்பத்துடனும் திகழ்ந்தான். இவ்வுலக வாழ்க்கை நிலையற்றது என்பதைப் புரிந்து கொண்டு, அதை விடச் சிறந்த உண்மையைத் தேட முயற்சித்தான்.

அவன் ஒரு அக்கறையான, ஊக்கமுள்ள சிறந்த சிஷ்யனாக இருந்தான். அவனிடம் நிகழ்ந்த மாற்றத்தைக் கண்ட குரு அவனை, தனக்குப் பின் அந்த ஆசிரமத்தின் பின்னுரிமையாளராக நியமித்தார். பிறகு அம்மனிதன் துறவறம் கொள்ள குருவால் ஊக்கப்பட்டு, ஆசிரமத்தின் பொறுப்பை ஏற்று, தன் கடமைகளான உண்மை மற்றும் மெய்யறிவை மற்ற சிஷ்யர்களுக்குப் போதித்தான்.

நீதி:

உலகத்தின் பொருட்கள் யாவும் நிலையற்றவை. நாம் தினமும் அனுபவிப்பது, உண்மை போன்ற தோற்றம் கொண்டது;  ஆனால், அது உண்மை அல்ல. அதுவே நம் வாழ்வின் தாழ்வு மற்றும் இன்ப துன்பங்களுக்குக் காரணம்; ஏனெனில், அது நிலையற்றது. உண்மையான பரம்பொருளை ஒரு முறை உணர்ந்து விட்டால்,  நாம் பிரம்மன் ஆகிவிடுவோம்; பூலோக விஷயங்கள் நம்மை பாதிக்காது. நாம் ஆழ்ந்த சிந்தனையுடன், நம் உள்நோக்கைப் புரிந்து கொண்டு, அதன்படி நடந்து கொண்டால் மட்டுமே இது சாத்தியமாகும்.

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s