சக்கிலியனும் பணக்காரனும்

நீதி: உண்மை / மன நிம்மதி

உபநீதி: சிந்தித்து செயல்படுவது

cobbler and the rich man picture 1ஒரு ஊரில், செருப்புத் தைப்பவன் ஒருவன் மகிழ்ச்சியாக அவன் வேலையை செய்து வந்தான். அவன் காலை முதல் மாலை வரை, மழையோ வெய்யிலோ, கவலையே இன்றி எப்பொழுதும் பாடிக் கொண்டே நாளைக் கழித்தான். ஒரு செல்வந்தர் தினமும் அவ்வழியே சென்றார். அவர், இந்த ஏழைத் தொழிலாளியைப் பார்த்து மிகவும் சங்கடப் பட்டார். அவனுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்றெண்ணினார்.

cobbler and the rich man - picture 2ஒரு நாள், அந்த செல்வந்தர் செருப்புத் தைப்பவனைப் பார்த்து,  “வணக்கம். நான் தினமும் உன்னுடைய கடின உழைப்பை பார்த்து கொண்டிருக்கிறேன். நீ ஒரு வருடத்தில் எவ்வளவு சம்பாதிப்பாய்?”  என்று கேட்டார். அதற்கு அந்த செருப்புத் தைப்பவன், “வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கிறது” என்று பதிலளித்தான்.  செல்வந்தர், “எனக்கு இதைக் கேட்கவே வருத்தமாக இருக்கிறது. நீ மிகுந்த கஷ்டத்தில் இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்” என்று கூறினார். செருப்புத் தைப்பவனோ, “எனக்கு இது பழகிவிட்டது. நான் சந்தோஷமாகத் தான் இருக்கிறேன்” என்று கூறினான்.

அடுத்த நாள், அந்த செல்வந்தர் ஒரு பையில் பத்தாயிரம் ரூபாய் பணம் எடுத்துக் கொண்டு மீண்டும் செருப்புத் தைப்பவனைக் காண வந்தார். அவனிடம், “என் நண்பரே! நான் உனக்காக பத்தாயிரம் ரூபாய் கொண்டு வந்திருக்கிறேன். இந்தப் பணத்தை வைத்துக் கொண்டு உன் கஷ்டங்களை சமாளிக்கவும்” என்று கூறினார்.  செருப்புத் தைப்பவனுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. முதலில் அவன் அதை வாங்க மறுத்தான். ஆனால் செல்வந்தர், “கஷ்டமான காலங்களில் உபயோகமாக இருக்கும், எடுத்துக் கொள்” என்று  கூறினார். பணத்தைப் பெற்றுக் கொண்டு அவன் செல்வந்தருக்கு நன்றி கூறினான்.

தற்பொழுது அவனுக்கு ஒரு புது பயம் வந்தது. “பத்தாயிரம் என்பது பெருந்தொகை. அதை எங்கு பத்திரமாக வைப்பது?” என்று தனக்குத் தானே கூறிக் கொண்டான். அவனுடைய குடிசையில் ஒரு குழியை வெட்டி அதற்குள் பணத்தை புதைத்து விட்டான். எந்த நேரத்திலும், யாராவது வந்து நம் பணத்தை திருட வாய்ப்புள்ளது என்று அவன் அஞ்சினான். இந்த எண்ணமானது அவனை இரவில் சரியாக உறங்க விடவில்லை. தினமும் இரவு உறக்கத்தை இழந்தான். அவன் தன் புன்னகை, மகிழ்ச்சி அனைத்தையும் இழந்தான்; பாடுவதை மறந்தே போய்விட்டான். அவனால் அவனுடைய வேலையிலும் முழு கவனம் செலுத்த முடியவில்லை. இதன் விளைவாக, அவனுடைய வாழ்க்கை மிகவும் பரிதாபத்திற்குரியதானது. அமைதியும் சந்தோஷமும் அவன் வாழ்க்கையிலிருந்து தொலைந்து விட்டது. அவனிடம் பணம் இருந்தது; ஆனால் மன நிம்மதி இல்லை என்பது அவனுக்கு மெதுவாகப் புரிந்தது.

நீதி:

பணம் மட்டுமே மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்று அர்த்தமில்லை. பணம் சம்பாதிப்பது கடினம் என்றால், அதை பாதுகாப்பது அதைவிடக் கடினம். அது நமக்கு பயத்தையும் பதட்டத்தையும் தான் அளிக்கிறது.

எந்த செல்வம் மகிழ்ச்சியை அளித்திருக்க வேண்டுமோ அதுவே பதட்டத்தையும் பயத்தையும் கொண்டு வந்தது. அதற்காக செல்வம் நல்லதல்ல என்று அர்த்தமல்ல. நம் தேவைக்கும், வசதிக்கும் ஏற்ற அளவு செல்வம் வைத்திருத்தலே நன்று. அதற்கு மேல் இருந்தால் பிறருக்கு உதவலாம்.

மொழி பெயர்ப்பு:

காயத்ரி, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s