கோடீஸ்வரரும் மூன்று பிச்சைக்காரர்களும்

நீதி – அன்பு 

உப நீதி – சரணாகதி

ஒரு ஊரில் நல்லெண்ணம் படைத்த கோடீஸ்வரர் ஒருவர் இருந்தார். மூன்று பிச்சைக்காரர்கள், அவரை அணுகி அவரிடம் உதவி பெறலாம் என்று எண்ணினர். முதல் பிச்சைக்காரன் கோடீஸ்வரரிடம் சென்று , “ஐயா! எனக்கு ஐந்து ரூபாய் வேண்டும். தயவு செய்து எனக்கு கொடுக்கவும்” என்று கேட்டான். கோடீஸ்வரர் அந்த பிச்சைக்காரனின் கேள்வியைக் கண்டு அதிர்ச்சியடைந்து “என்ன? நான் உன்னிடம் கடன் பட்டிருப்பது போல் என்னிடம் ஐந்து ரூபாய் நீ கேட்கிறாயே! என்ன தைரியம்? ஒரே ஒரு பிச்சைக்காரனுக்கு ஐந்து ரூபாய் கொடுக்க என்னால் எப்படி முடியும்? இந்த இரண்டு ரூபாயை எடுத்துக் கொண்டு இந்த இடத்தை விட்டுக் கிளம்பு” என்றார். அவனும் இரண்டு ரூபாயை எடுத்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.

அடுத்த பிச்சைக்காரன் கோடீஸ்வரரிடம் சென்று, “ஐயா! நான் கடந்த 10 நாட்களாக சரியான உணவு இல்லாமல் தவிக்கிறேன். தயவு செய்து எனக்கு உதவி செய்யவும்” என்றான்.

கோடீஸ்வரர், “உனக்கு எவ்வளவு பணம் வேண்டும்?” என்று கேட்டார்.

அதற்குப் பிச்சைக்காரன், “உங்களால் என்ன முடியுமோ கொடுங்கள்” என்றான்.

கோடீஸ்வரர், “இந்த பத்து ரூபாயை எடுத்துக் கொள். இதை வைத்துக் கொண்டு மூன்று நாட்களுக்காவது நல்ல உணவு உண்ணவும்” என்றார். பிச்சைக்காரன் பத்து ரூபாயை எடுத்துக் கொண்டு சென்று விட்டான்.

மூன்றாவது பிச்சைகாரன் வந்தான். அவன் “ஐயா! உங்கள் தயாள குணத்தைப் பற்றி நிறைய கேள்விப் பட்டிருக்கிறேன். அதனால் நான் உங்களை பார்த்து விட்டுச் செல்லலாம் என்று வந்தேன். தங்களைப் போன்ற தயாள குணம் படைத்தவர்களைக் கண்டால் இறைவனே நேரில் வந்தது போல் தோன்றுகிறது” என்று கூறினான்.

கோடீஸ்வரர் பிச்சைக்காரனிடம், “தயவு செய்து இங்கு அமருங்கள். நீங்கள் மிகவும் களைப்பாக இருப்பது போல் தோன்றுகிறது. இந்த உணவை உண்ணுங்கள்” என்று கூறி உணவு அளித்த பிறகு, பிச்சைக்காரனுக்கு என்ன வேண்டும் என்று விசாரித்தார்.

அந்த பிச்சைக்காரன், “ஐயா! நான் உங்களைப் போல நல்ல உள்ளம் படைத்தவரை காண மட்டுமே வந்தேன். நீங்கள் எனக்கு சிறந்த உணவை ஏற்கனவே அளித்து விட்டீர்கள். வேறு என்ன எனக்கு வேண்டும்? உங்களின் அசாதாரண அன்பை எனக்கு காண்பித்து விட்டீர்கள். கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்!” என்றான்.

ஆனால் கோடீஸ்வரரோ அவனை விடுவதாக இல்லை. அவனிடம் மன்றாடி அவனை தன்னோடு தங்க வைத்தார். அவனுக்கென ஒரு தனி வீட்டையும் கட்டிக் கொடுத்து, அவனை வாழ்நாள் முழுவதும் காப்பாற்றினார்.

நீதி:

கடவுளும் இந்த நல்ல மனம் படைத்தக் கோடீஸ்வரரைப் போல தான். மக்களில் மூன்று வகை உண்டு. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான ஆசைகளுடனும், பிரார்த்தனைகளுடனும் கடவுளை அணுகுகின்றனர். காமம், குரோதம், லோபம் நிறைந்த பேராசை உள்ள மனிதன் ஒரு வகை. உலகளாவிய ஆசைகள் அனைவற்றையும் அவன் கேட்கிறான். ஆசைகள் இருந்த போதிலும் கடவுளை அணுகிக் கேட்பதால், அவனுடைய வேண்டுதலில் ஒரு பகுதியை கடவுள் நிறைவேற்றுவார் (அது அந்த முதல் பிச்சைக்காரன் பெற்ற இரண்டு ரூபாய் போல் அன்றே செலவழிந்து விடும்).

இரண்டாவது வகை பக்தர்கள், தங்களுக்கு துன்பங்களிலிருந்து விடுதலை வேண்டும் என்று வேண்டுபவர்கள். முதலாவதை ஒப்பிடும் போது, கடவுளின் விருப்பத்திற்கு மாறாக நடக்க மாட்டார்கள் என்பதனால், இந்த நிலைமை சற்று உயர்ந்தது எனக் கூறலாம். கடவுளும் இவர்களின் துன்பங்களை நிவர்த்தி செய்து, நிறைந்த செல்வமும் வளமும் அளிப்பார்.

மூன்றாவது வகை பக்தர்கள், கடவுளே ஞானம், இறைத் தன்மை, பேரானந்தம் போன்ற சிறந்த குணங்களை கொண்டவர் என்று புரிந்து கொள்கின்றனர். ஆதலால், அவர்களுக்கு வேறு எதுவும் தேவையில்லை. அவர்களுடைய பற்றின்மை மற்றும் பூரண சரணாகதி போன்ற குணங்கள் கடவுளுக்கு மிகவும் பிடித்தவை. அதனால் அவர் இவர்களுக்கு ஈடு இணையில்லா பக்தியை அளித்து, இறுதியில் முக்தி அடைந்த முனிவரைப் போல் தம்மோடு இணைத்துக் கொள்கிறார்.

மொழி பெயர்ப்பு:

காயத்ரி, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s