About-முன்னுரை

This is a tamil translation of the human value blog saibalsanskaar.wordpress.com. It has value based stories and experiences of children practising these values. In order to make it accessible to tamil speaking and knowing people, a small attempt has been made to translate the blog. Kindly bear with any errors, grammatical mistakes etc which are purely unintentional. The main purpose is to drive in the values to children from a young age.

Dear Readers, hope you enjoy reading these stories. Looking forward for all your support and cooperation.

Lets together make a difference and look forward to a happy and peaceful world.

இந்த வலைப்பதிவு நற்குணங்களை மேம்படுத்துவதற்கும், பயிற்சி மூலமாகத் திறமை பெற்றுள்ள குழந்தைகளின் நற்பண்புகளை, கதைகள், அனுபவங்கள் மூலமாகவும், வெளிப்படுத்த எடுத்திருக்கும் முயற்சி. எனக்கு வழிகாட்டும் குரு பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவிற்கும், என் அருமைத் தாயார் திருமதி. ஆனந்தி பரமேஸ்வரனுக்கும், நான் சமர்ப்பிக்க விரும்பும் ஒரு அன்பு காணிக்கை. என் தாயார் பாலவிகாஸ் குருவாக எனக்கு நற்பண்புகளைப்  புகட்டி, நேர்பாதையில் செல்லக்கூடிய ஒரு வழிகாட்டியாய் திகழ்ந்தார். சுவாமியின் நற்குணங்களை பத்து வருடங்களாக சிறு குழந்தைகைளுக்குச் சொல்லிக் கொடுப்பதில் ஈடுபட்டுள்ளேன்.

சுவாமி சொல்கிறார் “ஒரு சிறிய கொடியை வடிவமைப்பது சுலபம், ஆனால் ஒரு மரத்தை அவ்வாறு செய்வது கடினம்.” குழந்தைகளை நல்ல பாதையில் வழி நடத்தி, நற்பண்புகளை மனதில் ஆழப் பதியச் செய்ய வேண்டியது மிகவும் அவசியம். பகவான் பாபாவின் வார்த்தைகளில், “நற்குணங்களை வளர்ப்பதுதான் கல்வியின் குறிக்கோள்; நற்குணங்கள் இல்லாத மனிதன் விளக்கில்லாத வீட்டிற்கு சமம்.” இதற்குச் சில வழிகள், கதைகளும் ஸ்லோகங்களும் சொல்லிக் கொடுப்பது.

ஜாதி, மத, பேதமின்றி எல்லோருக்கும் இந்த வலைப்பதிவு உதவ வேண்டும் என்பது தான் குறிக்கோள். பண்புகள் எல்லோருக்கும் பொதுவானது. எந்த ஒரு ஜாதியையோ, குருவையோ அல்லது கடவுளையோ குறிப்பாக மேம்படுத்துவது நோக்கம் அல்ல. கதைகள் வெவ்வேறு ஆதாரங்களிலிருந்து எடுக்கப் பட்டுள்ளன. அதற்கு தனி சிறப்பு கொடுக்கப்பட்டுள்ளது. நற்குணங்கள் படிப்படியாக அழிந்து கொண்டிருப்பதால், அடுத்த சந்ததிக்காக நாம் செய்யும் ஒரு நல்ல முயற்சி.

தமிழில் மொழிப் பெயர்த்த திருமதி. சரஸ்வதி விஸ்வநாதனுக்கும், திருமதி. ரஞ்சனி முரளிக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் நாட்டில் உள்ள பள்ளிகளுக்கும், உலகத்தில் தமிழ் பேசுகின்ற அனைத்து குழந்தைகளுக்கும் இந்த கதைகள் போய் சேர வேண்டும் என்பது எங்கள் விருப்பம். வியக்கத்தக்கச் செயல் திட்டத்தை வெளிப்படுத்திய அவர்களை பற்றி ஒரு சிறிய அறிமுகம்.

திருமதி. சரஸ்வதி அவர்களின் வார்த்தைகளில்:

“நான் சரஸ்வதி. வெகு நாளாக, சுவாமி சேவை செய்ய வேண்டும் என்று அவா கொண்டிருந்தேன்.  அதற்கு இப்போது ஒரு சந்தர்ப்பம் அமைந்தது. சகோதரி நந்தினிக்கு மனமார்ந்த நன்றி. கடலில் ஒரு துளியாக சேவை செய்ய சுவாமி கொடுத்த இந்த வாய்ப்பை என் பாக்கியமாகக் கருதுகிறேன். இந்த பாதையில் எனக்கு சரியான வார்த்தைகளைத் தேர்வு செய்து, என் கணவர் திரு விஸ்வநாதன் அவர்கள் ஒத்துழைப்பு கொடுக்கிறார். எல்லோருக்கும் நன்றி.

 திருமதி. ரஞ்சனியின் வார்த்தைகளில்:

என்னுடைய பெரிய பாக்கியமே பகவான் ஸ்ரீ. சத்ய சாயி பாபாவை வழிபடுவது தான். அவருக்கு என் முதற்கண் நன்றி. என் கணவர் திரு. முரளி,  எனக்கு எப்பொழுதுமே ஆதரவாக இருந்திருக்கிறார். சில மாதங்களாகவே குழந்தைகளுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற மன உறுதி இருந்தது. நான் நினைத்ததை வெளிப்படுத்துவதற்கு எனக்கு வாய்ப்புக் கொடுத்த நந்தினிக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த சிறப்பு பணியில் திருமதி. கங்கா தியாகராஜன் அவர்களும் எனக்கு உதவி புரிந்துள்ளார்.

கல்வி வாழ்க்கைக்காக, வாழ்வதற்காக அல்ல என்ற நம்பிக்கையுடன் ஒரு அன்பான, அமைதியான உலகமாக நன்நெறி எண்ணங்களுடன் மக்கள் யாவரும் வாழ வேண்டும் என்பது எங்கள் குறிக்கோள்.

 

நந்தினி ரமேஷ்

Related links

http://saibalsanskaar.wordpress.com

Now in other Indian languages as well

http://saibalsanskaartelugu.wordpress.com

http://saibalsanskaarhindi.wordpress.com

http://saibalsanskaarammalayalam.wordpress.com

http://saibalsanskaarmarathi.wordpress.com

Also visit the spiritual blog

http://premaarpan.wordpress.com

2 Comments

2 thoughts on “About-முன்னுரை

Leave a comment