குருவின் பாதங்களில் சரணாகதி

நீதிஅன்பு / சரணாகதி 

உபநீதி திடநம்பிக்கை / பக்தி

surrendering at the feet of the guru picture 1

ஒரு குளத்தில் நிறைய மீன்கள் இருந்தன. தினமும் காலை, நாள் தவறாமல் மீனவன் ஒருவன் மீன்களைப் பிடிக்க வலையை விரிப்பான்; இது மீன்களின் அச்சத்திற்கு காரணமாக இருந்தது. அவன் வலையில் பல மீன்கள் மாட்டிக் கொண்டு தவிக்கும். சில மீன்கள் தூங்கிக் கொண்டிருக்கும், சில மீன்கள் எதிர்ப்பாராமல் சிக்கிக் கொண்டு தவிக்கும், ஒரு சில மீன்கள் ஒளிந்து கொள்வதற்கு இடம் தெரியாமல் பலியாகும் மற்றும் பல அபாயம் என்று தெரிந்தும் தப்பிப்பதற்கு வழி தெரியாமல் இருக்கும்.

அவற்றில் ஒரு மீன் எப்பொழுதும் மனநிறைவோடு சந்தோஷமாக இருந்தது. அது வலையைக் கண்டு பயப்படவில்லை; உற்சாகமாக, கலகலப்பாக இருந்தது. மற்ற மீன்களுக்கு ஆச்சரியம்!!! அனுபவமும், விவேகமும் இருந்தும் கூட ஒன்றுமே புரியவில்லையே என்ற ஆதங்கம்!!! ரகசியம் என்னவென்று அறிய ஆவலாக இருந்ததனால், ஒரு நாள் மாலை, அந்த சிறிய மீனிடம் சென்று மற்ற மீன்கள் பேசத் தொடங்கின.

அவை “நாளை மீனவன் வலையை விரிக்க மீண்டும் வருவானே? உனக்கு பயமில்லையா?” என்று கேட்டன.

அதற்கு சிறிய மீன், “நான் அந்த வலையில் மாட்டிக் கொள்ள வாய்ப்பே இல்லை” என்றது.

surrendering at the feet of the guru picture 4

“உன் தன்னம்பிக்கைக்கும் வெற்றிக்கும் என்ன காரணம்?” என்று கேட்ட பொழுது அந்தச் சிறிய மீன் மிக அழகாகப் பதிலளித்தது.

சிறிய மீன் “எளிமையான விஷயம். வலையை விரிக்கும் பொழுது, மீனவனின் காலடியில் சென்று விடுவேன். சிக்கிக் கொள்ள வாய்ப்பே இல்லை; ஏனெனில் வலையை அங்கு விரிப்பது கடினம்”. வியக்கத்தக்க ஆனால் எளிமையான தீர்வு அல்லவா!!!

 நீதி:

surrendering at the feet of the guru picture 5

கடவுள் மேல் நம்பிக்கை வைத்து, மன நிறைவோடு செயற்பட்டால், வெற்றி நிச்சயம். முடிந்த அளவு முயற்சிகளை எடுத்து, விளைவுகள் அனைத்தையும் வல்ல இறைவனிடம் அர்ப்பணிக்க வேண்டும். அப்படி வாழ்க்கையை நடத்தி வந்தால், சோதனைகளையும், துன்பங்களையும் சமாளிக்கும் திறனும் தானாகவே வந்து விடும். திருவடியே சரணாகதி என்ற மனப்பான்மையுடன் முயற்சிகளை செய்தால் எல்லாமே நன்றாக முடியும்.

இறைவன் திருவடியே நமது கண்கள்

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source:

http://saibalsanskaar.wordpress.com

கதையைக் கேட்க:

https://podcasts.apple.com/sg/podcast/sai-prem/id1541103439?i=1000549031227

கதையை பார்க்க:

5 thoughts on “குருவின் பாதங்களில் சரணாகதி

  1. நல்ல கருத்துள்ள கதை.இறைவனிடம் மாறாத பக்தியும் சரணாகதியும் தான் வாழ்வை அர்த்தமுள்ளதாக செய்யும்

Leave a comment