Archive | November 2015

அன்பின் மகிமை

நீதி அன்பு / கருணை 

உபநீதி – உள்ளுணர்வு 

பல வருடங்களுக்கு முன், “உணர்ச்சிகள்” ஒன்றாக விடுமுறையைக் கழிக்க ஒரு தீவுக்குச் சுற்றுலா பயணம் சென்றன. எல்லோரும் ஆனந்தமாகக் கொண்டாடினர். ஒரு நாள் திடீரென்று புயல் எச்சரிக்கை வந்ததனால், தீவை விட்டு எல்லோரையும் கிளம்பச் சொன்னார்கள்.

இதனால் பயமடைந்த உணர்ச்சிகள், படகுகளைத் தேடி சென்றன. எல்லா உணர்ச்சிகளும் அவசரப்பட்டன; ஆனால், அன்பு மட்டும் நிதானமாக தன் வேலைகளைச் செய்து விட்டுப் புறப்பட நினைத்தது. அன்பு செல்ல முற்பட்டபோது, அங்கு ஒரு படகும் இருக்கவில்லை. இருந்தாலும் அன்பு நம்பிக்கையுடன் சுற்றுப்புறச் சூழ்நிலையைக் கவனித்தது.

Only time will value Love1செழிப்பு ஒரு அழகான படகில் அமர்ந்திருந்தது. தன்னைப் படகில் ஏற்றிக் கொள்ளும்படி அன்பு கேட்டுக் கொண்டது. அதற்கு செழிப்பு தன் படகு முழுவதும் தங்கமும், விலையுயர்ந்த பொருட்களும் இருந்ததாகச் சொல்லி இடம் கொடுக்க மறுத்தது. அடுத்ததாக தற்பெருமையை தன் படகில் ஏற்றிக் கொள்ளுமாறு அOnly time will value Love2ன்பு கெஞ்சியது. அதற்கு, “உன் பாதங்கள் சேறும் சகதியுமாக இருப்பதால், என் படகு அழுக்காகிவிடும்; மேலும், இடமும் இல்லை” என பதில் கூறியது. பிறகு சோகத்தை கண்டு அன்பு வேண்டியதற்கு, தான் ஏற்கனவே துக்கமாக இருப்பதால், இடம் கொடுக்க மறுத்தது. சந்தோஷமும் ஏதோ காரணம் கூறி இடம் தரவில்லை. திடீரென்று எங்கிருந்தோ ஒரு குரல் அன்பைத் தன்னோடு வருமாறு அழைத்தது. தன்னைக் காப்பாற்ற வந்தவர் யார் என Only time will value Love3அன்பிற்குத் தெரியவில்லை. இருந்தாலும் படகில் ஏறிச் சென்றது.

எல்லோரும் நல்ல விதமாகக் கரை சேர்ந்ததும், அன்பு கீழே இறங்கியது; எதிர்ப்பாராத விதமாக அறிவின் மீது மோதியது. அன்பு அறிவிடம், எல்லோரும் மறுத்தபோது, தன்னைக் காப்பாற்றியது யார் என விசாரித்தது. அறிவு, “காலம் மட்டுமே உன் மகிமையை அறியும். உன்னால் மட்டும் தான் அமைதியையும், ஆனந்தத்தையும் வாரி வழங்க முடியும்”  என புன்சிரிப்புடன்  கூறியது.  

நீதி:

நாம் செழிப்பாக இருக்கும் பொழுது, அன்பை மதிப்பதில்லை. அதே போல் அகம்பாவத்திலும் அன்பை உணர்வதில்லை. சந்தோஷமாக இருக்கும் பொழுதும் சரி, துக்கத்தில் வேதனைப்படும் பொழுதும் சரி அன்பின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வதில்லை. காலப் போக்கில் தான் அன்பின் ஆழ்ந்த உணர்வைத் தெரிந்து கொள்கிறோம். ஏன் எல்லோரிடமும் எப்பொழுதும் அன்பாக இருக்கக் கூடாது?

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

Advertisements

காணாமல் போன கடிகாரம்

the missing watch

நீதி – அமைதி

உபநீதி – நிசப்தம்

விவசாயி ஒருவர் தன் கடிகாரத்தை வைக்கோற்போரில் தொலைத்து விட்டார். சாதாரண கடிகாரம் என்றாலும் மனதிற்குப் பல உணர்ச்சிகளை நினைவூட்டும் வகையில் ஒரு மதிப்புமிக்க கடிகாரமாக இருந்தது.

தீவிரமாகத் தேடியும் தென்படவில்லை. வெளியில் சில குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன. அவர்களிடம் சென்று தன் மன வேதனையை வெளிப்படுத்தியதோடு அவர்களில் யார் அந்த கடிகாரத்தைத் தேடிக் கொடுக்கின்றார்களோ அவர்களுக்கு ஒரு அழகான பரிசு கொடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

உற்சாகத்துடன் அனைத்துக் குழந்தைகளும் வைக்கோற்போரில் தேட ஆரம்பித்தார்கள். வைக்கோல் குவித்திருந்தது. மேலும் கீழுமாய் மும்முரமாகத் தேடல் தொடங்கியது. ஆனால் பலன் ஏதுமில்லை. விவசாயியின் நம்பிக்கை குறைந்த போது, ஒரு குழந்தை அவரிடம் சென்று தனக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுக்குமாறு கெஞ்சினான். குழந்தையின் உள்ளார்ந்த நோக்கத்தைப் பார்த்து தேடச் சொன்னார்.

உள்ளே சென்ற குழந்தை சில நிமிடங்களில் கடிகாரத்துடன் வெளியே வந்ததைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். மனதில் வார்த்தைகளில் விவரிக்க முடியாட ஒரு சந்தோஷம் கூட!!! மற்றவர்கள் தேடியும் கிடைக்காத கடிகாரத்தை இந்தக் குழந்தை எப்படிக் சுலபமாக கண்டுப்பிடித்தான் என்று மனதிற்குள் ஒரு ஆர்வம். எண்ணங்கள் பலப் பல!!!

விவசாயி உடனடியாக அந்தக் குழந்தையிடம் காரணம் கேட்ட பொழுது, மிக அழகாக, “நிசப்தத்தில் கடிகாரத்தின் டிக் என்ற சத்தம் கேட்டது. உடனே அந்தத் திசையில் சென்று பார்த்தேன். கிடைத்துவிட்டது!!!” என்று பதிலளித்தான்.

நீதி

அமைதியான மன நிலையில் எல்லாம் புரியும். பல எண்ணங்களை மனதில் யோசனை செய்து கொண்டிருந்தால், குழப்பம் தான் அதிகம்!!!

ஒவ்வொரு நாளும், சிறிது நேரம் நிசப்தமான ஒரு நிலையில் மனதை வைத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுது நம் வாழ்க்கையும் வேறு திசையில் நன்றாக அமையும்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

 

அடக்கத்தின் அடையாளம்

hallmark of humility picture 1

நீதி – அன்பு / நன் நடத்தை

உபநீதி – மன்னிக்கும் குணம்

ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் பணிவான மனப்பான்மையை கொண்ட ஒரு சிறந்த மனிதர். அவரிடமிருந்த நற்பண்புகள் மற்றவர்களுக்கு ஊக்கம் அளித்தன. அவர் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்கள், அவருடைய எளிமையான தன்னடக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றன. சமூகத்திற்காக அதிக அளவில் தொண்டுகள் செய்த காரணத்தினால், அவரை மதிப்பிற்குரிய ஒரு மனிதனாக எல்லோரும் கருதினர்.

ஒரு முறை, சில நண்பர்களுடன் சேர்ந்து ஒரு சமயக்குழு அமைத்து, கல்கத்தா பல்கலைக்கழகத்தைத் தொடங்க அவர் முயற்சி செய்தார். இதற்காக நன்கொடையும் பல மக்களிடமிருந்து வசூலித்தார். அயோத்திய நகரத்தின் மாகாண ஆட்சியாளரிடம் சென்று நன்கொடை கேட்ட பொழுது, அவர் மரியாதை குறைவாகத் தன் காலணியை வித்யாசாகரின் நன்கொடைப் பைக்கு முன்னால் எறிந்தார். ஆனால் வித்யாசாகர் கோபமே படாமல் நன்றி சொல்லி விட்டுச் சென்றார்.

அடுத்த நாள் காலை, வித்யாசாகர் காலணியை எடுத்துக் கொண்டு நவாபின் அரண்மனை வாசலில் ஏலம் விட்டார். அரசவையினரும், மற்றவர்கள் எல்லோரும் ஏலத்திற்கு ஒப்புக் கொண்டு, இறுதியில் காலணி ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதைக் கேட்ட நவாப் சந்தோஷத்துடன் அந்த ஆயிரம் ரூபாயைக் கொடுத்தார்.

நவாப், காலணியை நன்கொடை பை முன் தூக்கி எறிந்த பொழுது, வித்யாசாகர் வருத்தப் பட்டோ, அவமானப் பட்டோ இருந்திருக்கலாம்; ஆனால் அவர் இதை ஒரு நல்ல வாய்ப்பாக எடுத்துக் கொண்டு, தன் குறிக்கோளை அடைவதில் தீவிரமாக இருந்தார். அவருக்கு பணம் கிடைத்தது மட்டுமல்லாமல், தன் புத்திசாலித்தனத்தால் நவாபையும் மகிழ வைத்தார். வித்யாசாகர் எப்போதும் தன் உணர்ச்சிகளை பொருட்படுத்தாமல், தன் இலட்சியத்திற்காக உழைத்தார். மேலும், கல்கத்தா பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்று எண்ணிய அவர் கனவும் பூர்த்தியடைந்தது.

நீதி:

பிரச்சனைகளை சந்திக்கும் பொழுது, கோபமாக பேசாமல், நன்று யோசனை செய்து நிதானமாக பதிலளிக்க வேண்டும். குறிக்கோளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அகங்காரத்தை அகற்ற வேண்டும். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை புறக்கணித்து விட்டு, நீண்ட நாள் குறிக்கோளை மனதில் வைத்து செயல்பட வேண்டும்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

இரண்டு நாய்களின் கதை

நீதி – நன் நடத்தை

உபநீதி – நன்னம்பிக்கை

Cute cartoon brown dog, wagging his tail happily.

.

இரண்டு நாய்கள் நடந்து கொண்டிருந்தன. அதில் ஒரு நாய் அறை ஒன்றிற்குள் சென்று வெளியில் வரும் பொழுது
சந்தோஷமாகத் தன் வாலை ஆட்டிக்கொண்டே வந்தது.

சிறிது நேரத்திற்குப் பிறகு,  மற்றொன்றும் அறைக்குள் சென்றது. ஆனால் வெளியிலே வரும் பொழுது, கோபத்துடன் உறுமிக் கொண்டேthe tale of two dogs picture 2 வந்தது அங்கு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெண்மணி ஆச்சரியத்துடன் பார்த்தாள். அந்த அறைக்குள் அப்படி என்ன இருக்கின்றது!!! இரண்டு நாய்களுமே ஒரே அறைக்குள் சென்றன ஆனால் வெளியிலே வரும் பொழுது வெவ்வேறு முகங்கள். உள்ளே சென்று பார்த்தால் அறை முழுவதும் கண்ணாடிகள் இருந்தன.

ஒரு நாய் சந்தோஷமாக இருந்ததால் தான் பிரதிபிம்பமாக ஆயிரம் சந்தோஷமான நாய்களைப் பார்த்தது. மற்றொன்று கோபமாக இருந்ததால், மற்ற எல்லா நாய்களும் அதை பார்த்து உறுமிக் கொண்டிருந்தன.

நீதி:

உலகத்தில் நாம் காண்பதெல்லாம் பிரதிபிம்பமே. மனதில் அமைதி இருந்தால் வெளியிலும் அப்படித்தான் இருக்கும். நாம் பார்க்கும் கண்ணோட்டம் மிக முக்கியம்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com