Archive | November 2020

உன் பாதையை முதலில் கவனி!

நீதி – சரியான மனப்பான்மை

உப நீதி – கண்ணியம் / பரிவு 

சூஃபி கதை

ஷிராஸ் என்ற ஊரில் ஸாதி என்ற ஒருவன், தன் குழந்தைப் பருவத்தில் தன்னுடைய தந்தை மற்றும் சக உறவினர்களுடன் தொழுகை செய்தான். தினமும் இரவில் அனைவரும் கூடி, குர்ஆனிலிருந்து ஒரு பக்கம் வாசிக்கக் கேட்பர்.

அவ்வாறு ஒரு நாள், அவனுடைய மாமா குர்ஆன் வாசித்துக் கொண்டிருந்த பொழுது, அங்கிருந்தவர்கள் பெரும்பாலானவரும் நன்றாக உறங்குவதை அவன் கண்டான்.

உடனே தன் தந்தையிடம் அவன், “இவர்களில் யாருமே நபிகள் நாயகம் சொல்வதைக் கேட்பதாகத் தெரியவில்லை. இவர்கள் எவருமே கடவுளை  அடையப் போவதில்லை” என்று கூறினான்.

அதற்குத் தந்தை, “மகனே! நீ நம்பிக்கையுடன் உன் பாதையைத் தேடிச் செல். பிறர், தங்களை தானே பார்த்துக் கொள்வார்கள். அவர்கள் தங்களின் கனவில் இறைவனுடன் உரையாடிக் கொண்டிருக்கலாம். எவர் அறிவார்? அவர்களைப் பற்றிய தவறான, கடுமையான வார்த்தைகளை கூறுவதற்கு பதிலாக, நீயும் அவர்களுடன் சேர்ந்து உறங்கி இருக்கலாமே என்று எனக்கு தோன்றுகிறது” என்று கூறினார்.

நீதி:

ஒருவரிடம் இருக்க வேண்டிய முக்கியமான நற்குணம் பண்பும், பணிவும். நாம் ஒருவருக்கு ஒரு விஷயத்தை கூறும் பொழுது, அன்பாகவும் பணிவாகவும் கூற வேண்டும்.

நாம் எப்பொழுதும் பணிவுடன் இருக்க முடியாவிட்டாலும், நம்மால் எச்சமயமும் பணிவாகப் பேச முடியும்!! – வோல்டேர்

உனக்கு ஒருவரைப் பற்றி கடிந்து பேச வேண்டுமென்றால், அதை வாய் விட்டுப் பேசாதே. நீரின் விளிம்பில் உள்ள மணலில் எழுதிவிடு – நெப்போலியன் ஹில்.

மொழி பெயர்ப்பு:

காயத்ரி, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

வாய்ப்புகள் நிறைந்ததே வாழ்க்கை

நீதி: உண்மை

உப நீதி: ஞானம், மெய்யறிவு

ஒரு இளைஞன், ஒரு விவசாயியின் அழகான மகளைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினான். அந்த விவசாயியின் அனுமதியை பெறுவதற்காக விவசாயியிடம் சென்றான்.

விவசாயி அவனைப் பார்த்து, “மகனே! வயல் வெளியில் சென்று அங்கு நில். நான் மூன்று காளைகளை ஒன்றன்பின் ஒன்றாக வெளியில் விடப் போகிறேன். அதில் சிறந்த காளையின் வாலை உன்னால் பிடிக்க முடிந்தால், நீ என் மகளை திருமணம் செய்து கொள்ளலாம்” என்றார்.

வயல் வெளியில் முதல் காளைக்காக அந்த இளைஞன் காத்துக் கொண்டிருந்தான். கொட்டகையின் கதவு திறந்தவுடன், அவன் இதுவரை கண்டிராத ஒரு பயங்கரமான காளை வந்தது. அடுத்த இரண்டு காளைகளில் ஏதாவது ஒன்று இதை விட சிறந்ததாக இருக்கும் என்று முடிவெடுத்து, வந்த காளை கடந்து செல்வதற்காக காத்திருந்து, சற்று ஒதுங்கி நின்றான்.

இரண்டாவது முறையாக கொட்டகையின் கதவுகள் திறந்தன. இரண்டாவது  காளை, அவனால் நம்ப முடியாத, இதுவரை வாழ்வில் கண்டிராத அளவிற்கு, பெரியதாகவும், பயங்கரமானதாகவும் இருந்தது. நிலத்தைத் தேய்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்த அந்த காளை, அவனை உற்றுப் பார்த்தது. அடுத்த காளை எப்படி இருந்தாலும் இதை விட சிறந்ததாக தான் இருக்கும் என்று நினைத்தான். வேலி வரை ஓடிச்சென்று காளையை வெளியேற விட்டான்.

மூன்றாவது முறையாக கொட்டகையின் கதவுகள் திறந்தன. அவன் முகத்தில் ஒரு புன்னகை தெரிந்தது. பிறகு அவன் “நான் கண்டதிலேயே சிறந்த காளை இதுதான். இது எனக்கானது”, என்று சொல்லிக் கொண்டான். அவன் வலது புறம் நின்று, ஓடி வந்த காளையின் மீது குதித்தான். கைகளை நீட்டி வாலைப் பிடிக்க முயன்றான். ஆனால் அது வாலில்லாத காளையாக இருந்தது.

நீதி:

நம் கதவைத் தட்டும் ஒவ்வொரு வாய்ப்பையும் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் விரும்பியது கிடைக்கும் வரை காத்திருந்தால், நமக்கு அந்த அளவிற்கு வாய்ப்புகள் வராது. நம் வாழ்க்கையையே மாற்றக்கூடிய ஒரு வாய்ப்பைத் தவற விடுவதை விட, மோசமானது வேறு எதுவுமில்லை. தனிச்சிறப்பு வாய்ந்த ஒரு வாய்ப்பிற்காக காத்துக் கொண்டு இருக்காதீர்கள். சாதாரண சந்தர்ப்பங்களைக் கைப்பற்றி, சிறந்தவையாக மாற்ற முயற்சியுங்கள். சிறிய வாய்ப்புகள் தான் பெரிய சாகச முயற்சிகளின் தொடக்கம். ஒருவன், தான் செய்த தவறுகளை விட தவறவிட்ட வாய்ப்புக்களை எண்ணி தான் எப்பொழுதும் வருந்துவான். பலவீனமானவன் வாய்ப்புகளுக்காக காத்திருப்பான். வலிமையானவன், வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டு அதை சிறப்பாக கையாள்வான்.

மொழி பெயர்ப்பு:

காயத்ரி, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

கதையைக் கேட்க:

கதையைப் பார்க்க:

இந்த தருணத்திற்காக வாழவும்

நீதி – உண்மை

உபநிதி – பற்றின்மை

ஒரு மனிதன் இறந்து விடுகிறான். அதை அவன் உணரும் போது, அருகில் கடவுள் ஒரு பெட்டியுடன் நின்று கொண்டிருக்கிறார். கடவுள் அவனிடம், “சரி மகனே, செல்வதற்கு காலம் வந்து விட்டது” என்று கூறுகிறார்.

மனிதன் ஆச்சரியத்துடன், “இவ்வளவு விரைவாக நான் செல்ல வேண்டுமா? நான் பல திட்டங்கள் வைத்துள்ளேனே?” என்கிறான்.

அவர்கள் இடையில் கீழ்கண்டவாறு உரையாடல் நடந்தது –

கடவுள் – மன்னிக்கவும், இது நாம் செல்ல வேண்டிய நேரம்.

மனிதன் – இந்த பெட்டியில் நீங்கள் என்ன வைத்திருக்கிறீர்கள்?

இறைவன் – உனது உடைமைகள் தான்.

மனிதன் – என் உடைமைகளா?  என் பொருட்கள்,  உடைகள், மற்றும் என் பணத்தைக் குறிப்பிடுகிறீர்களா?  

கடவுள் – அவையெல்லாம் உன்னை சேர்ந்தது அல்ல. அவை இந்த பூமிக்கு சொந்தமானவை.  

மனிதன் – அப்படியென்றால் பெட்டியில் இருப்பது என் நினைவுகளா?  கடவுள் – அவை ஒருபோதும் உனக்குச் சொந்தமாக இருந்தது இல்லை. அவை காலத்தை சேர்ந்தவை. 

மனிதன் – “என் திறமைகளா?” 

கடவுள் – திறமை ஒருபோதும் உனக்கு சொந்தமாக இருந்ததில்லை. திறமைகள் சூழ்நிலைகளைக்குச் சொந்தமானவை. 

மனிதன் – “என் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரா?”     

கடவுள் – மன்னிக்கவும், அவர்கள் ஒருபோதும் உன்னை சார்ந்தவர்கள் அல்ல. அவர்கள், நீ கடந்து வந்த பாதைக்குச் சொந்தமானவர்கள். 

மனிதன் – என் மனைவியும் மகனுமா?”

கடவுள் – “அவர்கள் ஒருபோதும் உன் சொந்தங்களாக திகழ்ந்ததில்லை. அவர்கள் உன் இதயத்திற்கே சொந்தம்”.

மனிதன் – “என் தேகமா?”

கடவுள் – “அதுவும் இல்லை. உன் உடம்பு மண்ணிற்கு சொந்தம்”.

மனிதன்: என் ஆத்மாவா?   

கடவுள்:  “இல்லை, இல்லை! அது என்னுடையது” என்று கூறி முடித்தார்.

பயத்தில் அந்த மனிதன், அந்தப் பெட்டியைக் கடவுளிடமிருந்து எடுத்துத் திறந்து பார்த்தான். காலியாக இருந்தது. மிகுந்த சோகத்துடன்  அந்த மனிதன் கடவுளைப் பார்த்து, “எனக்கென்று எதுவும் இல்லையா?” என்று கேட்டான்.

அதற்குக் கடவுள், “ஆமாம். உனக்குச் சொந்தமாக எதுவுமே இருந்ததில்லை.   வாழ்க்கை என்பது ஒரு தருணம். நீ வாழ்ந்த தருணங்கள் மட்டுமே உனக்கு சொந்தமானவை; வேறொன்றுமில்லை” என்றார்.

எனவே, இத்தருணத்திற்காக வாழவும். மேலும் மகிழ்ச்சியாக இருக்க மறவாதே. அது ஒன்றே போதுமானது.

உலகளாவிய பொருட்களும், மற்ற பல விஷயங்களும் இங்கேயே தங்கி விடுகின்றன. நாம் எதையும் எடுத்துச் செல்ல முடியாது. ‌

வாழ்க்கை ஒரு வீடியோ விளையாட்டு அல்ல ………..நீங்கள் நினைத்தாலும் உங்களுக்குக் கூடுதலான வாழ்க்கையும் கிடையாது; மீண்டும் முயற்சிக்கவும் முடியாது. எனவே, ஒவ்வொரு தருணத்தையும் இன்பமாக வாழ முயற்சி செய்யுங்கள்.

நீதி:

நம்மை சுற்றியுள்ள அனைத்து பொருட்களும் நிரந்தரமானவை அல்ல என்ற உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே அழிந்து போகும் விஷயங்களிலிருந்து நம்மை பிரித்துக் கொள்வதற்குக் கற்றுக் கொள்வோம். இதை நாம் கடைப்பிடிக்கும் போது, ​​கடவுளே நம்முடைய உற்ற துணை மற்றும் நிரந்தரப் பேரின்பம் என்பதையும் படிப்படியாக உணர்ந்து கொள்வோம்.

மொழி பெயர்ப்பு:

காயத்ரி, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

வாய்ப்புகள் நிறைந்ததே வாழ்க்கை

நீதி: உண்மை

உப நீதி: ஞானம், மெய்யறிவு

ஒரு இளைஞன், ஒரு விவசாயியின் அழகான மகளைத் திருமணம் செய்ய விரும்பினான். அந்த விவசாயியின் அனுமதியை பெறுவதற்காக  அவரிடம் சென்றான்.

விவசாயி அவனைப் பார்த்து, “மகனே! வயல் வெளியில் சென்று அங்கு நில். நான் மூன்று காளைகளை ஒன்றன்பின் ஒன்றாக வெளியில் விடப் போகிறேன். அதில் சிறந்த காளையின் வாலை உன்னால் பிடிக்க முடிந்தால், நீ என் மகளை திருமணம் செய்து கொள்ளலாம்” என்றார்.

வயல் வெளியில் முதல் காளைக்காக அந்த இளைஞன் காத்துக் கொண்டிருந்தான். கொட்டகையின் கதவு திறந்தவுடன், அவன் இதுவரை கண்டிராத ஒரு பயங்கரமான காளை வந்தது. அடுத்த இரண்டு காளைகளில் ஏதாவது ஒன்று இதை விட சிறந்ததாக இருக்கும் என்று முடிவெடுத்து, வந்த காளை கடந்து செல்வதற்கு சற்று ஒதுங்கி நின்றான்.