Archive | August 2016

ஏழையாய் இருப்பதன் அர்த்தம் என்ன?

 

நீதி – உண்மை

உபநீதி – மன நிறைவு / நன்றி உணர்வு / உண்முக நோக்குதல்

what it means to be poor - picture 1பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், தன் மகனுக்கு மக்கள் எவ்வளவு ஏழையாக இருக்க முடியும் என்பதைக் காண்பிக்க நாட்டுப் புறத்திற்கு பயணம் ஏற்பாடு செய்தார். ஒரு ஏழ்மையான குடும்பத்துடன் அவர்களது சிறிய பண்ணையில் சில நாட்கள் அவர்கள் தங்கினர்.

பயணம் முடிந்து, வீடு திரும்பியவுடன் தந்தை தன் மகனிடம், “இந்த அனுபவம் எப்படி இருந்தது?” என்று கேட்டார். மகனும் மிக அருமையாக இருந்ததாகப் பதிலளித்தான்.

“மக்கள் எவ்வளவு ஏழ்மையாக இருக்கிறார்கள் என்பதைப் பார்த்தாயா?” என்று தந்தை கேட்டதற்கு “நிச்சியமாக” என்று கூறினான்.

“இந்த பயணத்திலிருந்து நீ புரிந்து கொண்ட விஷயங்கள் என்ன?” என்று கேட்டார்.

அதற்கு மகன், “நமக்கு ஒரு நாய் இருக்கையில் அவர்களுக்கு நான்கு இருக்கிறது. நம் நீச்சல் குளம் பாதி தோட்டம் வரை உள்ளது; அவர்களுக்கு வற்றாத ஆறே உள்ளது. நம் தோட்டத்தில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட விளக்குகள் வெளிச்சம் அளிக்கின்றன; அவர்களுக்கு வானத்தின் நட்சத்திரங்கள் அனைத்துமே உள்ளன. நமக்கு திண்ணை முன் வாசல் வரையில் தான்; ஆனால் வானம் முழுவதும் அவர்களுக்கு அனைத்துமே உள்ளன. நாம் குடியிருக்க தேவையான பூமியில் வீடு கட்டி வாழ்கிறோம்; இவர்களது வயல்களோ பல மைல்கள் தூரம் பரவியிருக்கின்றன. நமக்கு சேவை செய்ய வேலையாட்கள் உள்ளனர்; அவர்கள் மற்றவர்களுக்குச் சேவை செய்கின்றனர். நாம் உணவை வாங்குகிறோம், ஆனால் அவர்கள் பயிரிட்டு உணவை உண்ணுகிறார்கள். நம்மை பாதுகாக்க வீட்டை சுற்றி மதில் இருக்கிறது, அவர்களுக்கு நண்பர்கள் இருக்கின்றனர்” என்றான்.

இதையெல்லாம் கேட்ட தந்தைக்கு என்ன பேசுவது என்று தெரியாமல் பிரமித்துப் போனார். மகன் இறுதியாக, “உண்மையில் நாம் தான் ஏழை என்று காட்டியதற்கு மிகவும் நன்றி” என்று சொன்னான்.

நீதி:

பல சமயங்களில் நம்மிடம் இருப்பதை மறந்து, இல்லாத விஷயங்கள் மேல் கவனத்தை செலுத்துகிறோம். ஒருவருக்கு உபயோகமில்லாத பொருள் மற்றவருக்கு பொக்கிஷமாக இருக்கலாம்.

எல்லாம் அவரவர் பார்வையை பொறுத்தது. நம்மிடம் இல்லாததை எண்ணி வருந்துவதை விட இருக்கும் விஷயங்களுக்காக நன்றி செலுத்தினால் எவ்வளவு நன்றாக இருக்கும்! ஒருவர் தன் வாழ்வின் வரங்களை எண்ணி நன்றி உணர்வோடு இருந்தால், மன நிறைவுடனும், மகிழ்ச்சியுடனும்,  மன அமைதியுடனும் இருக்கலாம்.

“குறைவான ஆசைகளுடன் இருப்பவன் தான், பணக்காரன். அதிக ஆசைகள் இருப்பவன் பரம ஏழை.”

மொழி பெயர்ப்பு:

சரண்யா, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

வெற்றிகரமான புன்சிரிப்பு

நீதி – நன் நடத்தை / அன்பு

உபநீதி – புன்சிரிப்பு / அக்கறை

 

The winning smile 2

அரேபிய நாட்டு சுல்தானுக்கு முல்லா நஸ்ருதீன் மேலே தனிப்பட்ட முறையில் அக்கறை இருந்ததனால், அவர் பயணம் சென்ற எல்லா இடங்களுக்கும் முல்லாவை அழைத்துச் சென்றார். ஒரு முறை, இவ்வாறு பயணம் செய்துக் கொண்டிருந்த போது, சுல்தானின் வண்டி பாலைவனத்தில் இருக்கும் ஒரு சிறு நகரத்தை நோக்கிச் The winning smile 3சென்றது. அந்த நகரத்தைச் சரியாக விவரிக்க முடியவில்லை.

திடீரென சுல்தான் முல்லாவிடம், “இந்த சிறு நகரத்தில் வசிக்கும் மனிதர்களுக்கு என்னைத் தெரிந்திருக்குமா? வண்டியில் போவதை நிறுத்திவிட்டு, இந்த நகரத்தில் நடந்து செல்லலாம். என்னை அடையாளம் தெரிகின்றதா என்று பார்க்க வேண்டும்” என்றார்.

முல்லாவும் சுல்தானும் வண்டியிலிருந்து இறங்கி விட்டு, தூசி படிந்த ஊரில் நடக்கத் தொடங்கினர். பலர் நஸ்ருதினை அடையாளம் கண்டு, ஒருThe winning smile 1 புன்சிரிப்போடு பார்த்தனர். ஆனால், யாருக்கும் சுல்தானை அடையாளம் தெரியவில்லை.

சுல்தான் கோபத்துடன், “என்னைத் தான் யாருக்கும் தெரியவில்லை. உன்னை பல பேர் தெரிந்து வைத்துள்ளார்கள்” என்றார். The winning smile 4உடனடியாக முல்லா, “மாண்புமிகு அரசரே, அவர்களுக்கு என்னையும் தெரியாது” என்று அப்பாவித்தனமாக பதிலளித்தார்.

அதற்கு சுல்தான், “ஆனால் உன்னைப் பார்த்தவுடன் அவர்களின் முகத்தில் புன்சிரிப்பு தெரிந்தது” என்றார்.

அதற்கு நஸ்ருதின், “நானும் அவர்களைப் புன்சிரிப்புடன் பார்த்தேன்” என்று கூறலானார்.

நீதி

The winning smile 5இந்தக் கதையிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடம் என்னவென்றால் எளிமையான குழந்தைத்தனமான புன்சிரிப்பு அதிகாரத்தை விட மிக முக்கியமானது. பல சமயங்களில் அறிவுத் திறன் மற்றும் பேச்சாற்றல் தான் அவசியம் என நினைக்கிறோம். ஆனால், அதற்கும் மேல், நம் செயல்களில் அன்பை வெளிப்படுத்தும் போது, அந்த தன்னலமற்ற அன்பு மிக உயர்ந்த இடங்களுக்கு நம்மைக் கொண்டு போய் சேர்க்கும் என்பதை மறந்து விடுகிறோம். வாழ்க்கையை வெற்றிகரமாக வாழ அடிப்படையானத் தேவை அன்பு என்று புரிந்து கொள்ள வேண்டும்.

 

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

ஒரு கட்டு குச்சிகள்

நீதி – சரியான நடத்தை

உபநீதி – ஒற்றுமை

ஒரு குடும்பத்தில், தந்தை பல முறை எடுத்துச் சொல்லியும், மகன்கள் ஓயாமல்   சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். அவர்களுக்குள் ஒற்றுமை என்ற மனப்பான்மை இல்லாததனால், தந்தை பல உதாரணங்களை எடுத்துச் சொல்லி, சண்டை போடுவதின் விளைவுகளையும் சுட்டிக் காட்டினார்.

bundle of sticks

ஒரு நாள், மகன்கள் வழக்கத்தை விட சற்று அதிகமாக சண்டை போட்டுக் கொண்டிருந்ததனால், வன்முறையாக மாறி சச்சரவு கடுமையாக ஆயிற்று. உடனடியாக, தந்தை ஒருவனை கூப்பிட்டு, ஒரு கட்டுக் குச்சிகளை உள்ளிருந்து கொண்டு வரச் சொன்னார். அதை ஒவ்வொரு மகனிடமும் கொடுத்து உடைக்கச் சொன்னார். பெரும் முயற்சி செய்தும், அவர்களால் அதை உடைக்க முடியவில்லை. பிறகு, அவர் கட்டை அவிழ்த்து, குச்சிகளைப் பிரித்து தன் மகன்களிடம் கொடுத்து, ஒவ்வொருவராக உடைக்கும்படி உத்தரவிட்டார். அவர்களால் வெகு சுலபமாக குச்சிகளை உடைக்க முடிந்தது.

தந்தை மகன்களிடம், “ஒற்றுமையாக இருப்பதின் நன்மைகளைப் பார்த்தீர்களா?  யாராலும் உங்களுக்குத் தீங்கு வராது. ஒன்றுபட்டு செயல்பட்டால், எல்லாமே உங்களுக்கு சாதகமாக இருக்கும்” என்றார்.

நீதி :

bundle of sticks picture 2

ஒற்றுமையே பலம். நாம் தனியாக இருந்து சாதிப்பதை விட ஒன்றாகச் சேர்ந்து செயல்பட்டால், வெற்றி நிச்சயம். சகிப்புத் தன்மை, சகோதரத்துவம், நல்லிணக்கம் போன்ற நற்பண்புகளை மேம்படுத்திக் கொண்டால், நாம் ஒற்றுமையுடன் வாழலாம்.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

மொழி பெயர்ப்பு:

ஜெயா, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

வரலக்ஷ்மி பூஜை

Varalakshmi-Vratam

மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதர், தன் வரலக்ஷ்மி நமஸ்துப்யம் க்ருதியில் இந்த விரதத்தைப் பற்றிப் பாடியிருக்கிறார்

‘வேதம் படிப்பதால் கிடைக்கும் அத்தனை வளமும் நலனும் ஞானமும் விரதங்களால் கிடைக்கின்றன’ என்று புராணங்கள் கூறுகின்றன.

மகாலக்ஷ்மியின் அவதார நாள் துவாதசி வெள்ளிக்கிழமை என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த நாளில் செய்யும் ஸ்வர்ண தன ஆகர்ஷண தேவி பூஜை மிகவும் சிறப்பானது. பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி அல்லது ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமை வரலக்ஷ்மி பூஜை விரத நாளாகும். முக்கியமாகச் செய்ய வேண்டியவர்கள் பெண்கள்! சுமங்கலிகள், தாலி பாக்கியத்துக்காகவும், சுபிட்சம், சௌபாக்கியம் போன்றவற்றுக்காகவும் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.

வரலட்சுமி விரதத்துக்கு புராணக் கதைகள் உண்டு. அன்னை பார்வதியின் சாபத்துக்கு ஆளான தேவர் உலகின் சித்ரநேமி என்ற கணதேவதை, அப்சரஸ் பெண்கள் கடைப்பிடித்த வரலட்சுமி விரதத்தைக் கண்டு அனுஷ்டித்து சாப விமோசனம் பெற்றார்.

லக்ஷ்மி பூஜை பற்றிய புராண கதை:

பத்ரச்ரவஸ் என்ற மன்னன் விஷ்ணு பக்தன். அவனுடைய மனைவி சுரசந்திரிகா. மகள் சியாமபாலா. மகளை சக்கரவர்த்தியான மாலாதரன் என்பவருக்கு  மணமுடித்துக் கொடுத்தார்கள். காலங்கள் கடந்தன. ஒருநாள் வயது முதிர்ந்த ஒரு சுமங்கலி மூதாட்டி பத்ரச்ரவசின் அரண்மனைக்கு வந்தாள்.

மூதாட்டியின் வடிவெடுத்து வந்தது சாட்சாத் மகாலக்ஷ்மி தேவி. வரலக்ஷ்மி விரதத்தின் அருமை பெருமைகளை கூறிய மூதாட்டி அந்த விரதத்தை கடைபிடிக்குமாறு சுரசந்திரிகாவிடம் கூறினாள்.

வந்திருப்பது லக்ஷ்மி தேவி என்பது அவளுக்கு தெரியவில்லை. பிச்சை கேட்க வந்த கிழவி உளறுவதாக கருதி அவமானப்படுத்தி அனுப்பினாள் சுரசந்திரிகா.

லக்ஷ்மிதேவி ஒரு இடத்துக்கு வருவது சாதாரணமல்ல. அரண்மனையை தேடிவந்தவளை விரட்டினால் அங்கு இருப்பாளா? அந்த இடத்தை விட்டு அகன்றாள் லக்ஷ்மி தேவி. விளைவு..?

மணிமகுடத்தையும் செல்வச் செழிப்பையும் இழந்தாள் சுரசந்திரிகா. அந்த இடத்தை காலிசெய்த மகாலட்சுமி நேராக அரசியின் மகள் சியாமபாலாவிடம் சென்றாள். வரலக்ஷ்மி விரதத்தின் பலன்கள் பற்றி அவளிடமும் சொன்னாள். சியாமபாலா பக்தி சிரத்தையுடன் அதை  கேட்டாள். பயபக்தியுடன் வரலக்ஷ்மி நோன்பு மேற்கொண்டு பூஜை செய்து வழிபட்டாள். விரத மகிமையால் அவளிடம் மலை போல் செல்வம் குவிய தொடங்கியது.

பெற்றோர் வறுமை நிலையில் இருப்பதை சியாமபாலா அறிந்தாள். ஒரு செப்பு பானை நிறைய தங்கத்தை நிரப்பி அவர்களுக்கு அனுப்பி வைத்தாள். அவள் அனுப்பி வைத்தாலும் அதை அனுபவிப்பதற்கு யோகம் இருக்க வேண்டுமே. அவர்களை சூழ்ந்திருந்த தரித்திரம் அவயோகம் அந்த வாய்ப்பை தடுத்துவிட்டது. அவர்களிடம் வந்ததுமே ஒரு பானைத் தங்கமும் கரியாக மாறிவிட்டது.

இதை கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தாள் சியாமபாலா. வீடு தேடி வந்த லக்ஷ்மி தேவியை அவமானப்படுத்தி அனுப்பியதாலேயே அவர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது என்பதை புரிந்து கொண்டாள். வரலக்ஷ்மி விரதத்தின் மகிமைகளை தாய்க்கு எடுத்து சொன்னாள். தாங்கள் செய்த தவறுகளை மன்னித்து அகம்பாவத்தை போக்குமாறு   மகாலட்சுமியை  மனமுருக வேண்டினாள் சுரசந்திரிகா.

வரலக்ஷ்மி விரதம் மேற்கொண்டு பூஜை வழிபாடு செய்து பிரார்த்தனை செய்தாள். இழந்த செல்வங்களை மட்டுமின்றி ஆட்சி அதிகாரமும் அவர்களை வந்தடைந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

கேட்கும் வரங்களைத் தரும் லட்சுமிதேவியை பூஜித்தல் இதன் சிறப்பு . திருமணமான பெண்கள், தங்கள் திருமணத்தை அடுத்துவரும் வரலட்சுமி பூஜையிலிருந்து இதை ஒவ்வொரு வருடமும் செய்யவேண்டும். வரலட்சுமி விரதத்தின் போது வீட்டுக்கு விலக்காக இருந்தால் அடுத்துவரும் வெள்ளிக்கிழமை இந்த பூஜையைச் செய்யலாம். இதைச் செய்யும்போது, சிறு பெண்களும் உடனிருந்து சரடைக் கட்டிக் கொள்ளலாம். மறுநாள் அம்மனுக்கு ஆரத்தி எடுத்த பின்னர் கலசத்தை அரிசி வைத்திருக்கும் பானையில் வைக்கவேண்டும்.

எல்லோராலும் மிக விரிவாகச் செய்ய இயலாவிட்டாலும், ஈடுபாட்டோடு தெரிந்த பாடல்களைப் பாடி, மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி, பூக்களால் அர்ச்சனை செய்து, நிவேதனம் செய்து, நோன்பு சரடை கையில் கட்டி நிவேதனத்தை எல்லோருக்கும் கொடுத்து, வயதான சுமங்கலிப் பெண்களை வணங்கி தானங்கள் செய்து இந்த விரத பூஜையை நிறைவு செய்யலாம்.

கொஞ்சம் சாஸ்திரோக்தமாக விரதமிருந்து பூஜையைச் செய்ய விரும்பினால், விக்னேஸ்வர பூஜை தொடங்கி, சங்கல்பம், கலச பூஜை, பிராணப்ரதிஷ்டை, தியானம், ஷோடசோபசாரம், அங்க பூஜை, லட்சுமி அஷ்டோத்ரம், தோரக்ரந்தி பூஜை, பிரார்த்தனை, ஆரத்தி என்று விரிவாகச் செய்ய வேண்டும்

varalakshmi puja

பூஜைக்கான முன்னேற்பாடுகள்:

வீட்டின் கிழக்கு திசையில் ஈசான்ய மூலையில், பூஜைக்கான இடத்தை அமைத்து, நன்றாக மெழுகி, கோலமிட்டு, மண்டபம் அமைத்து, அலங்கரிக்கவும். மண்டபத்தின் கீழ் நுனி வாழை இலையில் நெல்லைப் பரப்பி. அதன் மேல் கலச கும்பத்தை வைக்க வேண்டும்.. மேலே மாவிலைக் கொத்தும் தேங்காயும் வைத்து அலங்கரித்து, புதிய வஸ்திரம் சாற்றி, தங்கம் அல்லது வெள்ளியால் செய்யப்பட்ட நான்கு கரங்கள் கொண்ட மகாலட்சுமியின் பிரதிமை பிம்பத்தை (முக பிம்பத்தையும் வைக்கலாம்) மேலே வைத்து பூக்கள் சூட்டி அலங்கரிக்கவும்.

(சில இடங்களில் வீட்டின் பூஜை அறை ஒட்டிய சுவரில் வெள்ளை அடித்து அம்மனின் திருவுருவத்தை எழுதி ஆவாஹணம் செய்கிறார்கள். பூஜைக்காக வைக்கப்படும் கலசத்தில் காதோலை, கருமணி, எலுமிச்சம்பழம் முதலியவையும் போடப்படுகிறது.)

பூஜையின் முடிவில் மஞ்சள் சரடு கையில் கட்டிக் கொள்கிறார்கள். மஞ்சள் சரடு மங்கலத்தின் அறிகுறி. அஷ்ட லட்சுமிகளுடன் வரலட்சுமியையும் சேர்த்து ஒன்பது லட்சுமிகள் என்று சாஸ்திரம் சொல்கிறது. எனவே, ஒன்பது நூல் இழைகளால் ஆன, ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோன்புக் கயிறை (சரடை) பூஜையில் வைக்க வேண்டும்.

விரதம் மேற்கொள்ளும் வெள்ளிக்கிழமை காலை 10.30க்கு முன் & ராகு காலத்துக்கு முன் (சிலர் மாலை வேளையிலும் செய்வர்) ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்பி, அதன் மேல் கலசம் வைத்து, பழம் வெற்றிலை பாக்கு நிவேதனம் வைத்து, வாசலின் உள் நிலைப் படி அருகே நின்று கற்பூரம் காட்டி, ஆரத்தி எடுத்து மகாலட்சுமித் தாயை வீட்டுக்கு அழைத்து வருவதாக பாவனை செய்து, பயபக்தியுடனும் அழைத்து வந்து, அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் உள்ள கலசத்தில் வைத்திருக்கும் மகாலட்சுமி பிரதிமை பிம்பத்தில் இருந்து விரத பூஜையை ஏற்று அருள் புரியுமாறு மகாலட்சுமியை வேண்டிக் கொண்டு, ஆவாஹணம் செய்ய வேண்டும். அப்போது, மங்களகரமான தோத்திரங்களைச் சொல்லி, பாடல்களைப் பாட வேண்டும்.

பூஜைக்குத் தேவையானவற்றை அருகில் வைத்துக்கொண்டு பூஜையைத் தொடங்கவும். பஞ்சாங்கம் பார்த்து, நாள், திதி, வருடம், பட்சம், மாதம் ஆகியவற்றை அறிந்து குறித்துக் கொள்ளவும்.

மேற்கொள்ளப்படும் விரத பூஜை எந்தவித இடையூறுகளும் இல்லாமல் நன்கு நடைபெற வேண்டும் என்பதற்காக, விக்னங்களைக் களையும் விநாயகரை பூஜித்து, பிறகு வரலட்சுமி பூஜையைத் தொடங்க வேண்டும்.

 

SOURCE:

http://www.dinamani.com/religion/2013/08/15/வரலட்சுமி-விரதம்-பூஜை-முறை/article1736033.ece

http://athavannews.com/வரலக்ஷ்மி-பூஜை/

 

நம்பிக்கை

The rope - image 1

நீதி – நம்பிக்கை

உபநீதி – விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை

மலையேறுவதில் வல்லுநராக இருப்பவரின் கதை தான் இங்கு கூறப்பட்டுள்ளது.  இப்படிப்பட்ட ஒருவர், மலைகள் ஏறுவதை ஒரு பொழுது போக்காக எண்ணி,  பேரார்வத்துடனும், நண்பர்களின் நல்லபிப்ராயத்தைப் பெறுவதற்காகவும் செய்து வந்தார். பல வருடப்  பயிற்சிக்குப் பிறகு, உலகத்தின் எந்த மலையாக இருந்தாலும் கஷ்டங்களைப் பொருட்படுத்தாமல் ஏறி வந்தார்.

the rope - picure 2ஒரு முறை, அவர் 5 வெளி மனிதர்களோடு  மலைச் சிகரம் ஒன்றை ஏறத் தீர்மானித்தார். சிகரத்தை முதலாவதாக சென்றடைந்தால்,  பெருமைக்குரிய  விஷயமாக இருக்கும் என்ற எண்ணத்துடன், அவர் குழுவில் இருக்கும் மற்றவர்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருக்கும் போது கிளம்பினார். சிகரத்தை நோக்கி ஏறத் தொடங்கினார்.  நள்ளிரவில்,  நிலாவின் பிரகாசம் மனதிற்கு உற்சாகம் அளித்ததால், பயணம் சுலபமாக ஆரம்பித்தது.

இரவு நேரத்தில்,  அவர் செய்தது முட்டாள்தனமான காரியமாக இருந்தாலும்,  சற்று பருமனான கயிற்றைத் தன்னைச் சுற்றிக் கட்டிக்கொண்டுthe rope - picture 3 ஏறத் தொடங்கினார். நிலா வெளிச்சத்தால், அவரால் சற்று தூரம் சுலபமாக ஏற முடிந்தது. நம்பிக்கை மனதில் துளிர் விட, சிகரத்தை நோக்கி பயணத்தைத் தொடர்ந்தார். துரதிர்ஷ்டவசமாக கரு மேகங்கள் மலையைச் சூழ்ந்து கொண்டன. புயல் வருவது போல் இருந்ததனால், பார்வையும் சற்று மங்கலாக இருந்தது. பனியும், கருமேகங்களும் சூழ்ந்ததில், கண்ணுக்கு ஒன்றுமே தென்படவில்லை. திரும்பச் செல்வதும் கடினமாக இருந்தது. அதனால், ஒருமுகச் சிந்தனையோடு, மேகங்கள் சற்று நேரத்தில் மறைந்து விடும் என்ற நம்பிக்கையுடன் பயணத்தைத் தொடர்ந்தார்.

கும்மிருட்டில், ஒரு குறுகலான பாதையில் செல்லும் போது, பெரிய பாறை ஒன்று தடுக்கியதால், சறுக்கி,  ஒரு செங்குத்துப் பாறையின் முனையில் மாட்டிக் கொண்டார். நல்ல செய்தி என்னவென்றால், பாதுகாப்பளிக்கும்  உடையணிகளை அணிந்திருந்ததால்,  அவர் காப்பாற்றப் பட்டார். ஆனால், பலத்த காற்றடித்ததனால், அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தார். கெட்ட செய்தி என்னவென்றால்,  அவர் அணிந்திருந்த மேற்சட்டை இறுக்கமாக இல்லாததால்,  காற்றில் பறந்து விட்டது. குளிர் எலும்புகளை ஊடுருவி,  துளைக்கத் தொடங்கியது. சுற்றும் முற்றும் பார்த்து, பிடித்துக்கொள்ள எதுவும் கிடைக்காததால், கடவுளை நோக்கி, காப்பாற்றும்படி வேண்டிக் கொண்டார்.

திடீரென்று ஒரு குரல், “கயிற்றை அறுத்து விடு” என ஒலித்தது. அதிசயமடைந்து  “என்ன” என்று கேட்ட பொழுது,  அதே குரல் “மறுபடியும் கயிற்றை அறுத்து விடு” எனக் கூறியது.

காற்று சத்தத்தைத் தவிர எங்கும் நிசப்தமாக இருந்ததால், வேறு வழி தெரியாமல் “தொங்குவதே மேல்” என்று எண்ணினார். மறு நாள், அவரின் குழுவிலிருந்த மற்றவர்கள், அவர் மாண்டிருப்பதைக் கண்டனர். அம்மனிதர் , 8 அடி உயரத்தில், ஒரு பாறை அருகே கயிற்றுடன் தொங்கிக் கொண்டிருந்தார். கேட்ட குரலின் படி, செயல்பட்டிருந்தால், அவர் உயிர் பிழைக்க வாய்ப்பு இருந்திருக்கும் ஏனெனில், 8 அடி உயரத்திலிருந்து கயிற்றை அறுத்திருந்தால், கீழே புதருக்கு நடுவில் விழுந்து காப்பாற்றப் பட்டிருப்பார்.

நீதி

the rope - picture 4

நம்பிக்கை உள்ளவன் எல்லாப் பிரச்சனைகளிலும் வாய்ப்பைக் காண்கிறான்.

நம்பிக்கை இல்லாதவன் எல்லா வாய்ப்புகளிலும் பிரச்சனைகளைக் காண்கிறான்.

“கடவுளை நம்பினோர் கைவிடப் படார்”. ஒரு ஆபத்தல்  சிக்கிக் கொள்ளும் போது, நம்மைக் காப்பாற்றுவது எது? கயிறா அல்லது நம் அறிவிற்கும்   அப்பாற்பட்ட கடவுள் மீது வைக்கும் நம்பிக்கையா?

Isaiah 41:13 – நான் கடவுள்: நீ என் பொறுப்பில் இருக்கின்றாய்; எதற்கு பயம்; நான் உன்னை காப்பாற்றுகிறேன்; கவலைப் படாதீர்.

மொழி பெயர்ப்பு:

ஜெயா, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com