குட்டி தவளைகளின் கதை

நீதி – நன் நடத்தை / தன்னம்பிக்கை

உபநீதி –  விடாமுயற்சி

Story of Tiny Frogs1

Story of Tiny Frogs2

ஒரு சமயம், குட்டி தவளைகளின் ஒரு கூட்டம், உற்சாகத்துடன் ஒரு மிக உயரமான மரத்தின் உச்சியை தொடுவதை குறிக்கோளாக வைத்துக் கொண்டு, ஒரு போட்டி நடத்தின. போட்டியாளர்களை ஊக்கப்படுத்துவதற்கும், அங்கு வேடிக்கையைப் பார்ப்பதற்கும் கூட்டம் கூட்டமாக மற்ற தவளைகள் வந்தன. போட்டி ஆரம்பித்தது.

Story of Tiny Frogs3

மரத்தின் உச்சியை சென்றடைவது மிகக் கடுமையான விஷயம் என்று கூட்டத்தில் இருக்கும் அனைத்து தவளைகளும் சந்தேகப் பட்டன. மிக உயரமான மரம் என்பதனால் வெற்றிப் பெறுவது கடினம் என்று தவளைகள் யோசித்தன. கூட்டம் அதிகமாகி கூச்சலிடத் தொடங்கின.

Story of Tiny Frogs4

“ஓ, இது மிகக் கடுமையான வழி!”

“தவளைகள் நிச்சயமாக உச்சியைத் தொட முடியாது.”

“மரம் உயரமாக இருப்பதால், வெற்றிப் பெற வாய்ப்பே இல்லை!” என்று கூட்டத்திலிருந்து கூச்சலிட்டன.

Story of Tiny Frogs5

ஒன்றின் பின் ஒன்றாக தவளைகள் மரத்திலிருந்து கீழே விழுந்தன. ஒரு சில தவளைகள் மட்டும் உணர்ச்சிவேகத்தில் மேலே ஏற முயற்சி செய்தன. ஆனால் கூட்டத்தில் இருந்த சிலர், “இது மிகக் கடினம்!!! இந்த குறிக்கோளை அடைவது சாத்தியமே அல்ல” எனக் கூச்சலிட்டு கொண்டிருந்தன.

மேலும், சில தவளைகள் சோர்வாகி போட்டியிலுருந்து விலகின. ஒரே ஒரு சிறு தவளை மட்டும் போட்டியிலிருந்து விலகாமல் மேலும் மேலும் உயரமாக ஏறிச் சென்றது. தனது அற்புதமான முயற்சியால் மரத்தின் உச்சியை சென்றடைந்தது.

Story of Tiny Frogs6

மற்ற எல்லாத் தவளைகளும் வியப்புடன் பார்த்தன. ஆச்சரியத்துடன், “இந்த ஒரு தவளையால் மட்டும் எப்படி முடிந்தது” என யோசித்தன.

ஒரு போட்டியாளர், இந்த தவளைக்கு தைரியமும், துணிவும் எப்படி வந்தது எனக் கேட்ட பொழுது, வெற்றியாளருக்கு காது கேட்காது என்பது தெரிய வந்தது.

நீதி:

எப்பொழுதும் தெளிவாகவும், உறுதியாகவும் இருக்க வேண்டும். உங்களின் அழகான கனவுகளை மற்றவர்கள் உங்களிடமிருந்து பறித்துக் கொள்ள இடம் கொடுக்கக் கூடாது. உங்களை நம்புங்கள்!!! அந்த தவளையைப் போல எதிர்மறை வார்த்தைகளை பொருட்படுத்தாமல், குறிக்கோளை சென்றடைய கடினமாக உழைத்தால், வெற்றி நிச்சயம்.

Story of Tiny Frogs7

மொழி பெயர்ப்பு:

ஜெயா, சரஸ்வதி, ரஞ்சனி

Source: http://saibalsanskaar.wordpress.com

கதையைக் கேட்க:

https://open.spotify.com/episode/7GEmcHiu0KXvDmKVMMN9Z0?si=6VvPYae_SLmdeWiqxVmyqg

கதையைப் பார்க்க:

Leave a comment