சுய உணர்வுடன் இருத்தல்

நீதி:  சரியான செயல்பாடு     

உபநீதி:   இரக்கம் / விட்டுக் கொடுத்தல்

அகராதியில் மன்னித்தல் என்பதற்கு அர்த்தம் என்னவென்றால்,  நமக்கு கெடுதல் செய்தவரின் மீதுள்ள கோபத்தை விட்டு விடுதல்; குறை சொல்லாதிருத்தல்;  ஏதோ ஒன்றிற்காக கோபம் கொள்ளாதிருத்தல் போன்றவை கொடுக்கப்பட்டுள்ளன. 

மன்னித்தல் என்ற வார்த்தையின் அர்த்தத்தை புரிந்து கொள்வதைப் போல, மன்னிக்காமை என்பதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதும் மிக அவசியமானது. 

ஆப்பிரிக்க பழங்குடியினரின் ஒரு அழகான கதையில் மன்னித்தல் எப்படி ஒரு சடங்காகக் கொண்டாடப்படுகிறது என்பதைக் கூறுகிறது.

அந்த பழங்குடியில் யாராவது ஒருவன் பொறுப்பில்லாமல் நடந்து கொண்டாலோ அல்லது ஏதாவது தவறு செய்துவிட்டாலோ, அவன் அந்த கிராமத்தின் நடுவில் நிறுத்தப்படுவான். தங்கள் வேலையை நிறுத்திவிட்டு, ஒவ்வொரு ஆணும், பெண்ணும், குழந்தையும் அவனைச் சுற்றி ஒரு வளையமாக நின்று கொள்வர்.

அடுத்து, குற்றம் சாட்டப்பட்டவனை நோக்கி அனைவரும் நல்ல வார்த்தைகளைப் பேசத் தொடங்குவர். 

குடும்பத்தினர் அனைவரும் ஒவ்வொருவராக அந்த மனிதன் செய்த நல்ல காரியங்கள் அனைத்தையும் எடுத்துக் கூறுவார்கள். ஒவ்வொரு நல்ல நிகழ்வும் அனுபவமும் நினைவு கூறப்படும். குற்றம் சாட்டப்பட்டவனின் நற்பண்புகளும், பலமும், கருணையும், கவனமாகவும் விரிவாகவும் எடுத்துச் சொல்லப்படும்.

முடிவாக அனைவரும் கலைந்து சென்று ஒரு கொண்டாட்டத்துடன், அந்த நபரை மீண்டும் தங்களுடன் சேர்த்துக் கொள்வர். 

என்ன ஒரு அழகான சீர்திருத்தம்! அந்த நபர் மீண்டும் குடும்பத்தில் அங்கீகரிக்கப்பட்டு அந்த கிராமம் முழுமையடைகிறது.

இந்தக் கதை http://www.LifeSupportSystem.com என்ற ஸ்டீவ் குடியர்  வலைப்பதிவிலிருந்து எடுக்கப் பட்டுள்ளது.

நீதி: 

மன்னிப்பு என்பது மறப்பதோபொருட்படுத்தாமல் இருப்பதோ அல்லது குற்றம் செய்தவனை விட்டு விடுவதோ அல்ல. வெறுப்பை சந்தோஷத்தாலும்வன்மத்தை சமாதானத்தாலும்எரிச்சலை அமைதியாலும், பகைமையை உடன்பாட்டினாலும் மாற்றி அமைப்பதும் மன்னித்தல் தான். இது மன்னிப்பை வழங்குபவருக்கு மன அமைதியைத் தந்து, கசப்புணர்வு என்னும் சிறையிலிருந்து தன்னைத்தானே விடுவித்துக் கொள்வதற்கு வழிவகை செய்யும்.

மன்னித்தல் என்பது நேர்மறை எண்ணங்களால் எதிர்மறை எண்ணங்களை மாற்றி அமைப்பது தானா என்பதைப் பற்றிய விவாதம் இருந்தாலும், மனநல ஆலோசகர்கள் கூறுவது யாதெனில்அது மன்னிக்கும் மனம் உடையவரை, தனது காயங்களை ஆற்றிக் கொண்டு வாழ்க்கையை நல்ல முறையில் தொடர உதவுவதாக கூறுகின்றனர்.

மன்னிப்பது, கைதியை விடுதலை செய்வது போன்றது. அந்த கைதியே நீ தான் என்பதை உணர்ந்து கொள்.

மொழி பெயர்ப்பு

காயத்ரி கணேஷ், சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

Leave a comment