உன்னதமான ஆசிரியர்

நீதி – உண்மை

உபநீதி – ஏற்புத் தன்மை

ஒரு சமயம், மகிழ்ச்சியற்ற இளைஞன் ஒருவன், ஒரு வயதான குருவிடம் சென்று, தன் வாழ்க்கை மிகவும் சோகமாக இருப்பதாகவும், அதற்கு ஒரு தீர்வு கூறும்படியும் கேட்டான்.

அந்த வயதான குரு, ஒரு கைப்பிடி உப்பை எடுத்து ஒரு கோப்பை  தண்ணீரில் கலந்து, இளைஞனை குடிக்கச் சொன்னார்.

குரு “அதன் சுவை எப்படி இருக்கிறது?” என்று கேட்டார்.

இளைஞன் “பயங்கரமாக” என்று துப்பினான்.

குரு உள்ளூர சிரித்துக் கொண்டே அந்த இளைஞனிடம் இன்னொரு கைப்பிடி  உப்பை எடுத்து ஏரியில் போடச் சொன்னார். இருவரும் அமைதியாக அருகில் இருக்கும் ஏரிக்குச் சென்றவுடன், அந்த இளைஞன் உப்பை சுழற்றி ஏரியில் வீசினான்.

வயதான குரு, “இப்போது ஏரியிலிருந்து தண்ணீரைக் குடி” என்றார்.

இளைஞனின் முகவாயில் தண்ணீர் வழிந்த போது குரு, “சுவை எப்படி இருக்கிறது?” எனக் கேட்டார்.

இளைஞன் “நன்றாக இருக்கிறது” என்று சொன்னான்.                    

குரு “இப்போது உப்பின் சுவை தெரிந்ததா?” என வினவினார்.

இளைஞன் “இல்லை” என்றான்.

குழப்பமடைந்த அந்த இளைஞனின் அருகில் குரு அமர்ந்து, அவனது கைகளை பிடித்துக் கொண்டு, “வாழக்கையின் வலி உப்பைப் போலவே; அதிகமாகவும் இல்லை; குறைவாகவும் இல்லை. வாழ்க்கையில் வலியின் அளவு ஒரே மாதிரியாகத் தான் இருக்கும். ஆனால், நாம் வலியை அனுபவிப்பது நமது கண்ணோட்டத்தை சார்ந்துள்ளது. அதனால் பிரச்சனைகளை, ஏரியில் கலந்த உப்பைப் போலவே, பரந்த மனப்பான்மையுடன் எதிர்கொண்டால், வலியின் விளைவு குறைந்து விடும். நாம் குறுகிய கண்ணோட்டத்தை விட்டு விட்டு, பரந்த மனப்பான்மையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒரு உயர்ந்த ஆசிரியர்  நம் கைகளை பிடித்துக் கொண்டு, மனதளவில் விஷயங்களை புரிய வைத்து, மனம் நெகிழும்படி செய்கிறார்.

நீதி:

பிரச்சனை என்றாலே உங்களின் திறமையை சிறப்பாக பயன்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பு எனக் கூறலாம். பெரும்பாலான சமயங்களில், நாம் பிரச்சனையோடு நம்மை இணைத்துக் கொண்டு, அதனால் வரும் பிணைப்பினால் வலியை அனுபவிக்கிறோம். பிரச்சனைகளிலிருந்து நாம் ஓட வேண்டாம்; அப்படி செய்தால், பயம் ஏற்படுகின்றது. ஒவ்வொரு வலியை அனுபவிக்கும் போதும், பயத்தை எதிர்கொள்ளும் பாதையாக அதைப் பார்க்க வேண்டும். பயத்தை எதிர்கொள்வது வெற்றியின் முதல் படி; பயம், நம்முள் இருக்கும் திறனை வெளியே கொணர்ந்து, எந்த ஒரு சூழ்நிலையையும் தைரியத்துடனும், நம்பிக்கையுடனும் எதிர்கொண்டு, சரியான மனப்பான்மை மற்றும் சாந்தமுடனும் சமாளிப்பதற்கு உதவுகின்றது.   

மொழி பெயர்ப்பு

வள்ளி, சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

Leave a comment