உண்மையான மன்னிப்பு

நீதி: நன்னடத்தை, கருணை, இரக்கம்

உப நீதி: மன்னிப்பு

நெப்போலியனின் சிப்பாய்களில் ஒருவர் ஒரு குற்றத்தைச் செய்திருந்தார் – எத்தகைய குற்றம் என்பது கதையில் சரியாக விளக்கபடவில்லை – ஆனால் அதற்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டிருந்தது.

அவரை சுட்டு கொல்வதற்கு முந்தைய நாள் மாலை, அச்சிப்பாயின் தாய் தனது மகனின் உயிரைக் காப்பாற்றும்படி நெப்போலியனிடம் மன்றாடினார்.

நெப்போலியன் அவரிடம்  “அம்மா, உங்கள் மகனின் செயல் கருணைக்கு தகுதியானது அல்ல” என்று பதிலளித்தார்.

அதற்கு அந்தத் தாய் “எனக்குத் தெரியும்” என்று கூறி மேலும் “கருணைக்கு தகுதியான ஒரு செயலுக்கு மன்னிப்பு அளித்தால் அது உண்மையான மன்னிப்பு ஆகாது. மன்னிப்பது என்பது பழிவாங்குதல் அல்லது நீதி நிலைநாட்டுதல், இவற்றிற்கு அப்பாற்பட்டு அளிக்க வேண்டிய ஒரு செயல்” என்று வாதிட்டார்.  

அந்த வார்த்தைகளைக் கேட்ட பின் நெப்போலியன் அந்த சிப்பாயின் மரண தண்டனையை மாற்றி, உயிர் பிச்சை அளித்து, நாடு கடத்த சொன்னார்.

நீதி:

மன்னித்தல் என்ற மனப்பான்மையை நாம் எல்லோருமே நம் நலனுக்காக வளர்த்துக் கொள்ள வேண்டும். மன்னித்தல் வலுக்குறைவின் அறிகுறி அல்ல, ஆனால் நமக்கு நாமே கொடுக்கும் பரிசாகும். ஸ்வார்ட்ஸ் “கோபம், மனக்கசப்பு மற்றும் பகைமையை நாம் வெளிப்படுத்தும் போது, பச்சாதாபம், பரிவு மற்றும் தவறு செய்தவர்களின் மேல் அனுதாபத்தையும் உணரலாம்” என்று கூறுகிறார்.

வலிமையற்றவர்களால் மன்னிக்க முடியாது; மன்னித்தல் என்பது வலு உடையவர்களின் பண்பாகும் – மகாத்மா காந்தி

மொழி பெயர்ப்பு,

சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

Leave a comment