மற்றவர்களுக்கு கொடுப்பதனால் நாம் ஏழையாக மாறுவதில்லை

நீதி: அன்பு, உண்மை, நன்னடத்தை

உபநீதி: பகிர்ந்து கொள்ளுதல், அக்கறை காண்பித்தல்

இந்தப் பிரபஞ்சம், சுழற்சிகள் நிறைந்த நித்திய நிலையில் இருக்கின்றது – இரவு மற்றும் பகல், பருவங்களின் சுழற்சி, நீர் சுழற்சி, விதை – மரம் – பிறகு விதை ………. இயற்கை நமக்கு கொடுப்பதும் பெறுவதும், ஒரே சக்தியின் வெவ்வேறு கோணங்கள் என்று கற்றுக் கொடுக்கிறது.

இந்த தத்துவத்தை புரிந்து கொண்டு செயற்பட்டால், வாழ்க்கையில் இந்த சக்தியை மேம்படுத்தலாம்.  இந்த தத்துவத்திற்கு எதிர்மறையாக செயற்பட்டால், பிரபஞ்சம் நமக்கு அளிக்க இருக்கும் அளவில்லா வளம் நம்மை வந்து சேராது. நம் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமென்றால், மற்றவர்களை சந்தோஷப் படுத்த வேண்டும் என்ற அவா நம்மிடம் இருக்க வேண்டும்.  இவ்விரண்டிற்கும் நேரடியான தொடர்பு உண்டு.  

மற்றவர்களுக்கு நாம் என்ன கொடுக்கிறோமோ, அது பல மடங்கு நமக்கு வந்து சேருகின்றது என நாம் புரிந்து கொண்டால், இந்த நேர்மறையான சக்தி நம்மை வந்து சேரும் வாய்ப்புகளை அதிகரிக்கிறோம். ஆனி ஃரேங்க் (Anne Frank) சொல்லும் முதுமொழியை நாம் பாராட்ட முடிகிறது – “மற்றவர்களுக்கு கொடுப்பதனால் நாம் ஏழையாக ஆவதில்லை”.

நாம் எந்த விதங்களில் கொடுக்கலாம்? ரோண்டா பிரயின் (Rhonda Byrne) அவரின் புத்தகம் “சீக்ரெட்” லிருந்து கூறுவது என்னவென்றால்:

“நாம் கொடுப்பதனால் பெறுவதற்கான தகுதியை அதிகரித்துக் கொள்கிறோம். ஒவ்வொரு நாளும் கொடுப்பதற்கான  வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன.

ஆறுதலான வார்த்தைகளை பேசுங்கள்.

புன்சிரிப்புடன் இருங்கள்.

பாராட்டு மற்றும் அன்பை கொடுங்கள்.

மற்றவர்களில் இருக்கும் நல்ல விஷயங்களை பாராட்டுங்கள்.

வாகனம் ஓட்டிக் கொண்டிருக்கும் போது, மற்ற ஓட்டுனர்களுக்கு இடம் கொடுங்கள்.

புன்சிரிப்புடன் கார் பார்க்கிங்கில் உள்ள உதவியாளரை பாருங்கள்.

தினசரி பத்திரிகை கொடுப்பவர் அல்லது உங்களுக்காக காஃபி தயாரிக்கும் நபரை பார்த்து அன்பான வாழ்த்தை தெரிவியுங்கள்.

லிஃப்ட்டில் செல்ல இருக்கும் போது, தெரியாத ஒருவரை உள்ளே முதலில் செல்வதற்கு வழிக் கொடுத்து, அவர் எந்த மாடிக்கு செல்கிறார் என விசாரித்து, பட்டனை அழுத்தவும்.

எவராவது கீழே எதையாவது போட்டு விட்டால், அதை எடுப்பதற்கு உதவி புரியுங்கள்.

உங்களுக்கு நெருங்கியவர்களை அணைத்துக் கொள்ளுங்கள்.

எல்லோருக்கும் பாராட்டும், ஊக்குதலும் கொடுங்கள்.

நாம் கொடுத்து, மற்றவர்களிடமிருந்து பெறுவதற்கான பல வாய்ப்புகள் இருக்கின்றன.

நீங்கள் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும்.”

ரோண்டா பிரயின் (Rhonda Byrne)

நீதி:

பிரபஞ்சத்திலிருந்து சலுகைகளைப் பெறுவதற்கான ரகசியம், கொடுப்பதில் தான் இருக்கிறது. கொடுப்பது, தொட்டுணரத்தக்க விஷயங்கள் அல்லது பணம் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.   பரந்த மனப்பான்மையில் கொடுப்பது, நிபந்தனையற்ற அன்பு மற்றும் மகிழ்ச்சியை பெற வாய்ப்பு அளிக்கின்றது. சிறு வயதிலிருந்தே இந்த நல்ல விஷயத்தை கற்றுக் கொள்ள வேண்டுமென்றால், நாம் குழந்தைகளுக்கு பகிர்ந்து கொள்ளும் குணத்தையும்,  அன்பாக  இருக்கும் பண்பையும் கற்றுக் கொடுக்க வேண்டும்.

கொடுப்பது என்பது நன்கொடை மட்டும் அல்ல; ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துவதாகும் – காத்தி கால்வின் (Kathy Calvin)

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: SSSIE

Leave a comment